மட்பாண்ட புதிய கற்காலம்
மட்பாண்ட புதிய கற்காலம் | |
---|---|
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்திற்கு பிந்தைய மெசொப்பொத்தேமியாவின் வடமேற்கின் மட்பாண்ட புதிய கற்காலத்தின் தொல்லியல் களங்கள், காலம் கிமு 7,500 - கிமு 5,000, மேல் மெசொப்பொத்தேமியாவின் அசுன்னா பண்பாடு, வடமேற்கின் ஹலாப் பண்பாடு, வடமத்தியில் சமார்ரா பண்பாடு, தென்கிழக்கில் உபைதுகள் பண்பாடு | |
புவியியல் பகுதி | பண்டைய அண்மை கிழக்கு |
காலப்பகுதி | மட்பாண்ட புதிய கற்காலம் |
காலம் | கிமு 6,400 - கிமு 3,500 |
முந்தியது | மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) |
பிந்தியது | வெண்கலக் காலம் |
மட்பாண்ட புதிய கற்காலம் (Pottery Neolithic (சுருக்கமான: PN) (காலம்:கிமு 6,400 - கிமு 3,500) மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)-வுக்குப் பின்னர் மேற்காசியாவின் வளமான பிறை பிரதேசத்தில், குறிப்பாக புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகள் பாயும் வடமேற்கு மற்றும் வடமத்திய மெசொப்பொத்தேமியாவில் கிமு 6,400 முதல் கிமு 3,500 வரை நீடித்தது.[1]இக்காலத்தில் தற்கால தென் துருக்கியில் ஹலாப் பண்பாடும், வடக்கு சிரியா மற்றும் மெசொப்பொத்தேமியாவில் உபைது பண்பாடும் செழித்து விளங்கியது. மட்பாண்ட புதிய கற்காலம் கிமு 6,400 துவங்கி கிமு 3,500 முடிகிறது. மட்பாண்ட புதிய கற்காலத்திற்குப் பின்னர் செப்புக் காலம் கிமு 4500-இல் துவங்குகிறது. அதன் பின்னர் கிமு 3,500-இல் துவங்கிய வெண்கலக் காலத்தில் எழுத்து முறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
தொல்லியல் அறிஞர்கள் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தை இரண்டாகப் பிரிப்பர். அவைகள்: மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) (Pottery Neolithic A -PNA) மற்றும் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) (Pottery Neolithic B - PNB) ஆகும். [2]புதிய கற்காலத்திற்குப் பின்னர் கிமு 3,000-இல் வெண்கலக் காலம் தோன்றியது.
முதல் மட்பாண்ட புதிய கற்கால கண்டுபிடிப்புகள்
[தொகு]வடக்கு மெசொப்பொத்தேமியாவின் அசுன்னா மற்றும் ஜார்மோ தொல்லியல் மேடுகளில் கிமு 7,000 காலத்திய களிமண் மட்பாண்டங்கள் அகழ்வாய்வுவில் கண்டுபிடிக்கப்பட்டது.[3] கையினால் செய்த இம்மட்பாண்டங்கள் எளிமையான அமைப்பில், தடித்தும் இருந்தது.[4]மேலும் களிமண்னால் செய்யப்பட்ட விலங்குகள் உருவங்கள், கருவுற்ற பெண் உருவங்கள்அஆஅ கிடைத்துள்ளது.
ஹலாப் பண்பாடு (கிமு 6,100 — 5,100)
[தொகு]ஹலாப் பண்பாடு காலத்திய அழகுடன் கூடிய சுடுமட் மட்பாண்டங்களில் குவளைகள், குடுவைகள், பானைகள் களிமண்ணில் பல்வேறு கனிமங்களை கலந்து செய்தனர். மட்பாண்டங்களின் வெளியே சிவப்பு நிற இரும்பு ஆக்சைடுகளால் பூசி வரிக்கோடுகளுடன் விளங்கியது.
உலகில் முதன்முதலில் முத்திரை வில்லைகள் ஹலாப் பண்பாட்டுக் காலத் தொல்லியல் களங்களில் கிடைத்துள்ளது. [5] [5]
சுடுமண் களிமண்ணால் செய்யப்பட்டு, வண்ணம் தீட்டிய கருவுற்ற பெண்ணின் உருவம் (கிமு 6100 - 5000) ஹலாப் பண்பாட்டு தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[6]
-
ஹலாப் பண்பாடு காலத்திய ஓவியம் தீட்டிய ஜாடி, கிமு 5600- கிமு 5000
-
ஹலாப் பண்பாடு காலத்திய பெணனின் உருவங்கள், கிமு 6000-5100, லூவர் அருங்காட்சியகம்
-
ஹலாப் பண்பாடு காலத்திய வில்லை வடிவ முத்திரை
-
ஹலாப் பண்பாடு காலத்திய பீங்கான் கிண்ணம், (கிமு 5600 – 5000)
-
ஹலாப் பண்பாடு காலத்திய கிமு 5600-5000 காலத்திய ஓவியம் தீட்டப்பட்ட பீங்கான் குடுவை
அசுன்னா பண்பாடு (கிமு 6000-5000) மேல் மெசொப்பொத்தேமியா)
[தொகு]தற்கால வடக்கு ஈராக்கின் மேல் மெசொப்பொத்தேமியா பகுதியில் அசுன்னா பண்பாட்டின் புதிய கற்காலத்திய தொல்லியல் மேடுகளில் அழகுடன் கூடிய மட்பாண்டங்கள் பல்வேறு வடிவங்களில் அகழ்வாய்வுவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
அசுன்னா பண்பாட்டின் சிவப்பு மட்பாண்ட தட்டு, கிமு 5500
-
அசுன்னா தொல்லியல் மேட்டின் ஓவியம் தீட்டப்பட்ட உடைந்த மட்பாண்டம், கிமு 6500 - 6000
-
மேல் மெசொப்பொத்தேமியாவின் புதிய கற்காலத்திய சீரமைக்கப்பட்ட குடியிருப்புகள், அகர்கே தொல்லியல் மேடு
-
மேல் மெசொப்பொத்தேமியாவின் சீரமைக்கப்பட்ட புதிய கற்காலத்திய குடியிருப்புகள், (அகர்கே தொல்லியல் மேடு)
சமார்ரா பண்பாடு (கிமு 6000–4800, மத்திய மெசொப்பொத்தேமியா)
[தொகு]மத்திய மெசொப்பொத்தேமியாவில் விளங்கிய சமார்ரா பண்பாடு கிமு 5500 – 4800 காலத்தியதாகும். இதன் பின்னர் உபைது பண்பாடு தோன்றியது.
-
சமார்ரா பண்பாடு காலத்திய சுவஸ்திக்கா சின்னம், எட்டு மீன்கள், 4 நீந்தும் மீன்களின் ஓவியம் தீட்டப்பட்ட பீங்கான் தட்டு, கிமு 4000]], பெர்லின் அருங்காட்சியகம்
-
சமார்ரா பண்பாடு காலத்திய அழகிய ஓவியம் தீட்டப்பட்ட தட்டு, காலம் கிமு 6200-5700
-
சாமர்ரா பண்பாட்டுக் காலத்திய உடைந்த மண்ட்பாண்ட சில்லுகள்
-
சாமர்ராவின் சவான் தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்னின் சிற்பம், கிமு 6000
உபைது பண்பாடு (கிமு 6500–3800, கீழ் மெசொப்பொத்தேமியா)
[தொகு]உபைதுகள் காலம் கீழ் மெசொப்பொத்தேமியாவில் கிமு 6500 முதல் கிமு 3800 வரை நிலவியது.[7]இதனை பின்னர் உரூக் காலத்திய மக்கள் கைப்பற்றினர்.[8]
உபைதுகள் காலத்திய அழகிய வடிவிலான மட்பாண்டங்கள், புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகள் பாரசீக வளைகுடாவில் கலக்கும் கழிமுகங்களில் உள்ள தொல்லியல் களங்களில் கண்டெடுக்கப்பட்டது. இம்மட்பாண்டங்கள் சிந்துவெளி நாகரிகத்தின் மட்பாண்டங்கள் போன்று காணப்படுகிறது.[9]
களிமண் முத்திரை வில்லைகளில் விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.[10][5][11]
-
பிந்திய உபைது காலத்திய ஜாடி,(கிமு 4500-4000)
-
ஓவியம் தீட்டப்பட்ட உடைந்த அழகிய பீங்கான் மட்பாண்டம், காலம் கிமு 4700-4200, லூவர் அருங்காட்சியகம்[12]
-
பெண்ணின் பீங்கான் சிற்பங்கள், கிமு 4700 - 4200 காலத்தியது.[13]
-
உபைது காலத்தின் முடிவில் கிமு 4000 காலத்திய விலங்குகளின் தலைவரின் சுடுமண் வில்லை முத்திரை [10]
பரவல்
[தொகு]சிந்துவெளி நாகரிகம் (கிமு 5500 - கிமு 2000)
[தொகு]மட்பாண்ட காலத்திய புதிய கற்கால பண்டைய அண்மை கிழக்கு நாகரிகத்திற்கும், இந்தியத் துணைக் கண்டத்தின் சிந்துவெளி நாகரிகத்திற்கும் அதிக ஒற்றுமைகள் இருப்பதை தொல்லியல் அறிஞர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.[14] தற்கால பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தானில் உள்ள மெஹெர்கர் தொல்லியல் களம் கிமு 7000 - கிமு 2500/2000 காலத்திற்குரியதாகும்.[14] மெஹெர்கர் தொல்லியல் கள அகழ்வாய்வுவில் மக்கள், அனதோலியா மக்களைப் போன்று ஆடு, மாடு, பன்றி போன்ற சில காட்டு விலங்குகளை வீட்டு விலங்குகளாக வளர்த்தையும், அதிக அளவில் பார்லியும் மற்றும் சிறு அளவில் கோதுமை பயிரிட்டதையும் அறிய முடிகிறது.[14] [14] மேலும் மெசொப்பொத்தேமியா மக்களைப் போன்று, களிமண்னில் செய்த பெரிய அளவிலான தானியக் களஞ்சியங்களைப் பயன்படுத்தினர்.[14] தெற்கு ஈரானின் சாக்ரோஸ் மலைத்தொடரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் போன்றே, மெஹகரின் கல்லறைகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[14] பண்டைய அண்மைக் கிழக்கிலிருந்து தெற்காசியாவிற்கு நாகரிகம் பரவியதை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு மூலம் அறிய முடிகிறது.[14]
சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்னோடியான மெஹெர்கர் பண்பாட்டின் செப்புக் காலமான கிமு 5500 - 4800 மற்றும் மூன்றாம் பண்பாட்டுக் காலமான கிமு 4800 - 3500-களில் மக்கள் புதிய கற்காலத்திய பீங்கான் மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர். [16]
ஒளி வீசும் அழகிய நவரத்தின மணிகளை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை அறிந்திருந்தனர். மேலும் சுடுமண் சிற்பங்களை செய்யும் கலையை அறிந்திருந்தனர். ஓவியம் தீட்டப்பட்ட சுடுமண் பெண் சிற்பங்கள் நகைகள் மற்றும் அழகிய கூந்தலுடன் இருந்தது.
கிமு 5500 - 4800 காலத்திய கல்லறையில் கண்டெடுத்த மனித உடலில் சிவப்பு கனிம நிறமிகள் பூசப்பட்டிருந்தது. ஈமச்சடங்கின் போது இறந்த பெண் உடல் அருகே நகையணிகள் வைத்திருந்தனர்.
ஐரோப்பா
[தொகு]The European Neolithic is generally dated to 7000–3000 BCE. The spread of the Neolithic in Europe was first studied quantitatively in the 1970s, when a sufficient number of 14C age determinations for early Neolithic sites had become available.[17] Ammerman and Cavalli-Sforza discovered a linear relationship between the age of an Early Neolithic site and its distance from the conventional source in the Near East (Jericho), thus demonstrating that, on average, the Neolithic spread at a constant speed of about 1 km/yr.[17] More recent studies confirm these results and yield the speed of 0.6–1.3 km/yr at 95% confidence level.[17]
கிரேக்கம்
[தொகு]Neolithic Greece is marked by some remarkable creations from stone or pottery. The settlement at Sesklo gives its name to the earliest known Neolithic culture of ஐரோப்பா, which inhabited Thessaly and parts of Macedonia. The oldest fragments researched at Sesklo place development of the civilization as far back as c. 7510 BC — c. 6190 BC, known as "proto-Sesklo" and "pre-Sesklo". They show an advanced agriculture and a very early use of pottery that rivals in age those documented in the Near East.
Ceramic decoration evolves to flame motifs toward the end of the Sesklo culture. Pottery of this "classic" Sesklo style also was used in Western Macedonia, as at Servia. That there are many similarities between the rare Asia Minor pottery and early Greek Neolithic pottery was acknowledged when investigations were made regarding whether these settlers could be migrants from Asia Minor, but such similarities seem to exist among all early pottery found in near eastern regions. The repertoire of shapes is not very different, but the Asia Minor vessels demonstrate significant differences.
The Sesklo culture is crucial in the expansion of the Neolithic into Europe. Dating and research points to the influence of Sesklo culture on both the Karanovo and Körös cultures that seem to originate there, and who in turn, gave rise to the important Danube civilization current.
-
Neolithic clay cups from Sesklo, circa 5,500 BC. National Museum Athens
-
Female figurine, marble, Thessaly, 5,300–3,300 BC
-
Female figurine of a woman holding a baby, Sesklo, Neolithic, 4,800–4,500 BC
-
Sesklo culture vase
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- கற்காலம்
- பெருங்கற்காலம்
- இடைக் கற்காலம்
- மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்
- மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)
- மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)
- புதிய கற்காலம்
- தமிழகத்தில் புதிய கற்காலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bellwood (2004)
- ↑ Killebrew, Ann E.; Steiner, Margreet; Goring-Morris, A. Nigel; Belfer-Cohen, Anna (2013-11-01). "The Southern Levant (Cisjordan) During the Neolithic Period". The Oxford Handbook of the Archaeology of the Levant (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/oxfordhb/9780199212972.013.011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199212972.
- ↑ Maisels, Charles Keith (2003). The Emergence of Civilisation: From Hunting and Gathering to Agriculture, Cities and the State of the Near East (in ஆங்கிலம்). Routledge. pp. 104–105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134863280.
- ↑ For Jarmo pottery photograph, see "A Dish from the Jarmo Culture". Ancient History Encyclopedia.
- ↑ 5.0 5.1 5.2 Brown, Brian A.; Feldman, Marian H. (2013). Critical Approaches to Ancient Near Eastern Art (in ஆங்கிலம்). Walter de Gruyter. p. 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781614510352.
- ↑ "Site officiel du musée du Louvre". cartelfr.louvre.fr.
- ↑ Carter, Robert A. and Philip, Graham Beyond the Ubaid: Transformation and Integration in the Late Prehistoric Societies of the Middle East (Studies in Ancient Oriental Civilization, Number 63) பரணிடப்பட்டது 2013-11-15 at the வந்தவழி இயந்திரம் The Oriental Institute of the University of Chicago (2010) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-885923-66-0 p. 2; "Radiometric data suggest that the whole Southern Mesopotamian Ubaid period, including Ubaid 0 and 5, is of immense duration, spanning nearly three millennia from about 6500 to 3800 B.C."
- ↑ Carter, Robert A. and Philip, Graham. 2010. 'Deconstructing the Ubaid' in Carter, Robert A. and Philip, Graham (eds.) Beyond the Ubaid: Transformation and Integration in the Late Prehistoric Societies of the Middle East. Chicago: The Oriental Institute of the University of Chicago. p. 2.
- ↑ Jr, William H. Stiebing (2016). Ancient Near Eastern History and Culture (in ஆங்கிலம்). Routledge. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781315511160.
- ↑ 10.0 10.1 "Site officiel du musée du Louvre". cartelfr.louvre.fr.
- ↑ Charvát, Petr (2003). Mesopotamia Before History (in ஆங்கிலம்). Routledge. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134530779.
- ↑ "Site officiel du musée du Louvre". cartelfr.louvre.fr.
- ↑ "Figurine féminine d'Obeid". 2019.
- ↑ 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 14.6 Material was copied from this source, which is available under a Creative Commons Attribution 4.0 International License Shukurov, Anvar; Sarson, Graeme R.; Gangal, Kavita (7 May 2014). "The Near-Eastern Roots of the Neolithic in South Asia" (in en). PLOS ONE 9 (5): 1–6. doi:10.1371/journal.pone.0095714. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட் சென்ட்ரல்:4012948. https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0095714.
- ↑ "Metropolitan Museum of Art". www.metmuseum.org.
- ↑ Sharif, M; Thapar, B. K. (1999). "Food-producing Communities in Pakistan and Northern India". In Vadim Mikhaĭlovich Masson (ed.). History of civilizations of Central Asia. Motilal Banarsidass. pp. 128–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1407-3. பார்க்கப்பட்ட நாள் 7 September 2011.
- ↑ 17.0 17.1 17.2 Original text from: Shukurov, Anvar; Sarson, Graeme R.; Gangal, Kavita (2014). The Near-Eastern Roots of the Neolithic in South Asia (in ஆங்கிலம்). p. 1. Material was copied from this source, which is available under a Creative Commons Attribution 4.0 International License
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Bellwood, Peter (November 30, 2004). First Farmers: The Origins of Agricultural Societies. Wiley-Blackwell. p. 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-631-20566-1.
- Hibben, Frank (1958). Prehistoric Man in Europe. Norman, Oklahoma: University of Oklahoma Press.