தொல்லியல் மேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெல் பாரியின் காட்சி, வடக்கு சிரியா
கிமு 3,000 ஆண்டின் பண்டைய அலெப்போவின் அரண்மனை, வடக்கு சிரியா

அகழ்வாய்வில் டெல் அல்லது பண்டைய தொல்லியல் மேடு ( tell, or tel) அரபு மொழி: تَل‎, tall or எபிரேயம்: תלtell), டெல் என்பதற்கு அரபு மொழியில் மலை அல்லது உயரமான மேடு ('hill' or 'mound') எனப்படும்.[1][2] ஒரே நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்த மனிதர்களால் நிறுவப்பட்ட கட்டிட அமைப்புகள் பின்னர் சிதிலமடைந்து உயரமான மண் மேடுகள் போன்று காட்சியளிப்பவைகள் தொல்லியல் மேடு எனப்படும்.[3]40 மீட்டர் உயரம் கொண்ட டெல் பராக் தொல்லியல் மேட்டை அகழாய்வில் கண்டுபிடித்துள்ளனர். [4]

பொதுவாக டெல் எனப்படுவது, பண்டைய அண்மை கிழக்கு தொடர்பான அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடுகளை குறிக்கும்.[5] [6][7][8][9] டெல் என அழைக்கப்படும் பண்டைய தொல்லியல் மேடுகள் அதிகமாக, மக்கள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை தொடர்ந்து வாழ்ந்து வரும் மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து, தெற்கு லெவண்ட், அனதோலியா மற்றும் ஈரான் போன்ற நிலப்பரப்புகளில் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4]

அகழ்வாய்வியல்[தொகு]

வடக்கு சிரியாவின் டெல் பாரி எனபப்டும் தொல்லியல் மேடு, வடக்கு சிரியா, நடுவில் நிற்கும் மனிதனைக் காண்க

டெல் எனப்படும் தொல்லியல் மேடுகள், இப்பகுதிகளில் பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து வாழ்ந்து வந்த மனிதர்கள் களிமண் மற்றும் செங்கல் கட்டிட அமைப்புகளின் சிதிலமடைந்த மணல் மேடாகும்.[10]

இதனையும் காண்க[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "tell". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. Kirkpatrick, E. M. (1983). Chambers 20th Century Dictionary (New ). Edinburgh: W & R Chambers Ltd. பக். 1330. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-550-10234-8. 
  3. "Archaeology of Palestine", Art of Excavating a Palestinian Mound, William Foxwell Albright, 1960, p. 16
  4. 4.0 4.1 Tony Wilkinson (2003). Archaeological Landscapes of the Near East. Tucson, AZ: University of Arizona Press. பக். 100–127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8165-2173-9. https://archive.org/details/ArchaeologicalLandscapesOfTheNearEast2003. 
  5. Tell (MOUND)
  6. Bailey, Douglass W.; Tringham, Ruth; Bass, Jason; Stevanović, Mirjana; Hamilton, Mike; Neumann, Heike; Angelova, Ilke; Raduncheva, Ana (1998-01-01). "Expanding the Dimensions of Early Agricultural Tells: The Podgoritsa Archaeological Project, Bulgaria". Journal of Field Archaeology 25 (4): 373–396. doi:10.1179/009346998792005298. பன்னாட்டுத் தர தொடர் எண்:0093-4690. 
  7. MacDonald, Kevin C. (1997). "More forgotten tells of Mali: an archaeologist's journey from here to Timbuktu". Archaeology International 1 (1): 40–42. doi:10.5334/ai.0112. 
  8. Davidson, Donald A.; Wilson, Clare A.; Lemos, Irene S.; Theocharopoulos, S. P. (2010-07-01). "Tell formation processes as indicated from geoarchaeological and geochemical investigations at Xeropolis, Euboea, Greece". Journal of Archaeological Science 37 (7): 1564–1571. doi:10.1016/j.jas.2010.01.017. 
  9. Kotsakis, Kostas (1999). "What Tells can Tell: Social Space and Settlement in the Greek Neolithic". in Halstead, Paul (in en). Neolithic Society in Greece. Sheffield: Sheffield Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781850758242. https://books.google.com/books?hl=en&lr=&id=tgdthHDYY5UC&oi=fnd&pg=PA66. 
  10. "Amateur Archaeologists Get the Dirt on the Past", த நியூயார்க் டைம்ஸ்

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்லியல்_மேடு&oldid=3580875" இலிருந்து மீள்விக்கப்பட்டது