உள்ளடக்கத்துக்குச் செல்

எகபடனா

ஆள்கூறுகள்: 34°48′23″N 48°30′58″E / 34.80639°N 48.51611°E / 34.80639; 48.51611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகபடனா
ஹமதான்
ஈரானின் எகபடனா தொல்லியலில் களத்தில் கண்டெடுக்கப்பட்ட, அகாமனிசியப் பேரரசு காலத்திய தங்கக் குடுவை
எகபடனா is located in ஈரான்
எகபடனா
Shown within Iran
இருப்பிடம்எகப்படானா தொல்லியல் நகரம், அமாதான் மாகாணம், ஈரான்
பகுதிசக்ரோசு மலைத்தொடர்
ஆயத்தொலைகள்34°48′23″N 48°30′58″E / 34.80639°N 48.51611°E / 34.80639; 48.51611
வகைநகரம்

எகபடனா (Ecbatana) பண்டைய அண்மை கிழக்கின், தற்கால வடமேற்கு ஈரானின் சக்ரோசு மலைத்தொடரில் அமைந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். இதனை அகமதானா அல்லது ஹன்மதானா (Hagmatāna or Haŋmatāna) என்றும் அழைப்பர்.[1] யூதர்களின் இலக்கியப் படி, எகபடானா என்பதற்கு ஒன்றுகூடுமிடம் எனப்பொருளாகும்.

எகபடானா நகரம், முன்னர் மீடியாப் பேரரசில் இருந்தது. எகபடனா மலையின் தொல்லியல் மேட்டை ஹமதான் என்று கருதப்படுகிறது.[2]

கிரேக்க வரலாற்று மற்றும் புவியியல் அறிஞரான எரோடோட்டசு, கிமு எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எகபடானா நகரம், மீடியாப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது என்கிறார்.[2] மலைப்பாங்கான பகுதியில் அமைந்த எகபதானா நகரம், பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர்களின் கோடைக்கால வாழ்விடமாக விளங்கியது. பின்னர் இந்நகரம் பார்த்தியப் பேரரசின் தலைநகரமாகவும், நாணயங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களாகவும் விளங்கியது.

பாரசீகப் பேரரசில் செல்வச் செழிப்பு மிகுந்த எகபடானா நகரம், கிழக்கு - மேற்கு ஆசிய நகரங்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்தது.[3] கிமு 330ல் பேரரசர் அலெக்சாண்டரின் ஆணையின் படி, அவரது படைத்தலைவர்களில் ஒருவரான பார்மேனியன் எகபடானாவில் கொல்லப்பட்டார்.[2]

தொல்லியல்

[தொகு]

சார்லஸ் போசி எனும் தொல்லியல் அறிஞர் 1913ல் இகபடானாவின் தொல்லியல் மேட்டை முதன் முதலில் அகழ்வாய்வு செய்தார்.[4] பின்னர் 1977ல் எகபடானாவில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எகபடானா சுற்றிலும், மக்கள் பெருக்கத்தாலும், நகர வளர்ச்சியாலும், குறுகிய பரப்பிலே அகழ்வாய்வுகள் மேற்கொள்ள முடிந்தது. [5] எகபடானாவின் கபௌதர் அகாங் எனுமிடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிமு 1400 - 1200 வரையிலான இரும்புக் காலத்திய கருவிகளும், மட்பாண்டங்களும் வெளிப்பட்டது. எகபதானா தொல்லியல் களம் பண்டைய அரண்மனையாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வரண்மனை 1.4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டிருந்தது.[2] இவ்வரண்மனை மீடியாப் பேரரசு காலத்தவைகள் ஆகும்.

அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட நான்கு தூண்கள் கொண்ட திறந்த வெளி மண்டபம் சொராட்டியர்களின் தீக்கோயில் ஆக இருக்கலாம் எனத்தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.[6]

எகபடானா தொல்லியல் ஆய்வில் நகரத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட களிமண் மற்றும் கற்களாலான பெரும் பாதுகாப்புச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அகாமனிசியப் பேரரசு அல்லது மீடியாப் பேரரசு காலத்திய இரண்டு அடுக்கு அஸ்திவார அமைப்புகளும், சில களிமண் செங்கல் அமைப்புகளும் கண்டெடுக்கப்பட்டது. எகபடனா தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட சேதமடைந்த சிங்கச் சிற்பங்கள் அகாமனிசியப் பேரரசு அல்லது பார்த்தியப் பேரரசு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற பிணக்குகள் உள்ளது.

எகபடனா நகரத்தில் பார்த்தியப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை வைத்து, இந்நகரம் பார்த்திய மன்னர்களின் கோடைக்கால தலைநகரமாக இருந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது.[2] 2006ல் எகபடானாவில், 36 ஹெக்டேர் பரப்பளவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.[7]

வரலாற்றுக் குறிப்புகள்

[தொகு]

மீடியப் பேரரசின் தலைநகராக எகபடான நகரம் ஏழு கோட்டைச் சுவர்களால் சூழப்பட்டிருந்தது என கிரேக்க வரலாற்றுக் குறிப்புகள் கூறுகிறது. கிமு ஐந்தாம் நூற்றாண்டின் கிரேக்க வரலாறு மற்றும் புவியியல் அறிஞர் எரோடோட்டசு எகபடானா நகரத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மீடியாப் பேரரசின் எகபடானா நகரத்தின் கோட்டைச் சுவர்களைப் போன்று, புது பாபிலோனியாப் பேரரசின் நகரக் கோட்டைச் சுவர்கள், அரண்மனைகள், கோயில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

பேரரசர் அலெக்சாண்டர் தனது இறுதிக் காலத்தில் பெர்சப்பொலிஸ் மற்றும் பசர்காடே நகரங்களில் கைப்பற்றிய தங்கம் உள்ளிட்ட கருவூலங்களை எகபடானா நகரத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.[8] யூதர்களின் பழைய ஏற்பாட்டில் எஸ்ரா நூல் 6:2ல், பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ் காலத்திய எகபடானா நகரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

பிணக்குகள்

[தொகு]

எகபடனா குறித்து பல பிணக்குகள் இருப்பினும், வரலாற்று ஆசிரியர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் எகபடானா நகரமும், ஹமதான் நகரமும் ஒன்றே ஒத்துக்கொள்கின்றனர்.[2]

எகபடானா/ஹமதான் நகரத்தைப் பற்றிய குறிப்புகள், அசிரியர்கள் எங்கும் குறிப்பிடவில்லை. கிமு 550/549-களில் எகபடானா நகரம் பாரசீகப் பேரரசர் முதலாம் சைரசின் தலைநகராக விளங்கியது எனக்கருதப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
 1. Stausberg, Michael; Vevaina, Yuhan Sohrab-Dinshaw (2015-04-27). The Wiley-Blackwell Companion to Zoroastrianism (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118786277.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "ECBATANA". Iranica. பார்க்கப்பட்ட நாள் 10 April 2014.
 3. Sulimani, Iris (2011). Diodorus' Mythistory and the Pagan Mission: Historiography and Culture-heroes in the First Pentad of the Bibliotheke. Leiden: BRILL. p. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004194069.
 4. N. Chevalier, Hamadan 1913, Une mission oublie?e, Iranica Antiqua, vol. 24, pp. 245–53, 1989
 5. Neil Asher Silberman (ed.), The Oxford Companion to Archaeology, Volume 1 (2012), p. 121]
 6. Michael Stausberg, Yuhan Sohrab-Dinshaw Vevaina (eds.), The Wiley Blackwell Companion to Zoroastrianism (2015), p. 394
 7. CHN | News பரணிடப்பட்டது 2007-02-18 at the வந்தவழி இயந்திரம்
 8. Balfour, Edward (1885). The Cyclopædia of India and of Eastern and Southern Asia. London: Bernard Quartitch. p. 1027.

மேற்கோள்கள்

[தொகு]
 • Perrot and Chipiez, History of Art in Persia (Eng. trans., 1892);
 • M Dieulafoy, L'Art antique de Ia Perse, pt. i. (1884);
 • J. de Morgan, Mission scientifique en Perse, ii. (1894).
 • Peter Knapton et al., Inscribed Column Bases from Hamadan, Iran, vol. 39, pp. 99–117, 2001

 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Sayce, A. H. (1911). "Ecbatana". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 8. Cambridge University Press.  Please update as needed.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ecbatana
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகபடனா&oldid=3732933" இலிருந்து மீள்விக்கப்பட்டது