ஊர்-நம்மு
ஊர்-நம்மு | |
---|---|
ஊர், சுமேரியா மற்றும் அக்காதியப் பேரரசர் | |
மன்னர் ஊர்-நம்முவின் உருளை வடிவ முத்திரை | |
புது சுமேரியப் பேரரசு | |
ஆட்சி | கிமு 2112 – கிமு 2095 |
பின்வந்தவர் | சுக்லி |
அரசி | மன்னர் உது ஹெங்கலின் மகள் |
வாரிசு(கள்) | சுக்லி |
சமயம் | சுமேரிய சமயம் |
ஊர்-நம்மு (Ur-Nammu or Ur-Namma, Ur-Engur, Ur-Gur), சுமேரியம்: 𒌨𒀭𒇉, (கிமு 2047- கிமு 2030), அக்காடியப் பேரரசின் ஆட்சிக்குப் பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவின் சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்சத்தை நிறுவியவரும், ஊர் நகர அரசை 18 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னரும் ஆவார். இவர் சந்திரக் கடவுளுக்கு எழுப்பிய ஊரின் சிகூரட் கோயில் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.
மன்னர் ஊர் நம்மு இயற்றிய சட்டத் தொகுப்பு இயற்றியது, ஊர் நகர அரசை கட்டி எழுப்பியது மற்றும் ஊரின் சிகூரட் கோயில் நிறுவியதே[1][2][3] இவரது ஆட்சியின் சிறப்பம்சம் ஆகும்.
ஆட்சிக்காலம்
[தொகு]மூன்றாவது ஊர் வம்சத்தை நிறுவிய மன்னர் ஊர்-நம்மு மெசொப்பொத்தேமியாவின் லகாசு, உரூக், நிப்பூர், எரிது, கிஷ், லார்சா நகர இராச்சியங்களை கைப்பற்றி ஆண்டார்.
மன்னர் ஊர்-நம்மு, ஊர் நகரத்தில் சுமேரிய கடவுள்களுக்காக பல உயர்ந்த கோயில்களை நிறுவினார்[4]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Year-names for Ur-Nammu
- ↑ Ur, ANCIENT CITY, IRAQ
- ↑ UR, IRAQ
- ↑ "Archived copy". Archived from the original on 2007-07-08. பார்க்கப்பட்ட நாள் 2007-07-08.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- Site drawings of the temple built by Ur-Nammu at Ur to the moon god Nanna.
- Nabonidus dedication to the Ziggurat
- The Code of Ur-Nammu at Britannica
- Foundation Figurine of King Ur-Nammu at the Oriental Institute of Chicago பரணிடப்பட்டது 2013-11-10 at the வந்தவழி இயந்திரம்
- The "Ur-Nammu" Stela. Penn Museum. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-931707-89-3.
- The face of Ur-Namma. A realistic statue of Ur-Namma shows us how he may have looked.
- A brief description of the reign of Ur-Namma.
- I am Ur-Namma. The life and death of Ur-Namma, as told in Babylonian literature.