இரண்டாம் நெபுகாத்நேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நபூ-குதுரி-உசூர்
Nabû-kudurri-usur
பபிலோனிய மன்னர்
Nebukadnessar II.jpg
இரண்டாம் நெபுகாத்நேசர் மன்னரின் தலை பொறிக்கப்பட்ட ஒரு வேலைப்பாடு. அன்டன் நீசுட்ரோம், 1901.[1]
ஆட்சி அண். கிமு 605 – அண். கிமு 562
முன்னிருந்தவர் நபோபலசார்
பின்வந்தவர் ஆமெல்-மர்தூக்
தந்தை நபோபலசார்
பிறப்பு அண். கிமு 634
இறப்பு அண். கிமு 562 (அகவை 71/72)

இரண்டாம் நெபுகாத்நேசர் (Nebuchadnezzar II, அண். கிமு 634 – கிமு 562) பபிலோனியாவின் தலைசிறந்த மன்னராக விளங்கியவர். புதிய-பாபிலோனிய இராச்சியத்தின் மிக நீண்ட காலப் பேரரசராக விளங்கியவர்.[2]

இவா் உலகப்புகழ் பெற்ற பாபிலோன் நகரை கட்டி எழுப்பினாா். இது அக்காலத்தில் உலக ஆச்சரியங்களுள் ஒன்றாக விளங்கியது. " தொங்கும் தோட்டம்" என்ற புதிய தோட்டத்தை விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கினாா். "தொங்கும் தோட்டம்" நெபுகாத்நேசா் தனது மனைவியின் நினைவாக அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. நெபுகாத்நேசா் தனது தலைநகரில் அமைத்த கட்டிடங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்ட அனைத்து வகையான கட்டிட அமைப்புகளும் திட்டமிட்டு சுமார் 16 கிமீ சுற்றளவில் இரண்டு சுவர்களுக்கு இடையே பிரமாண்டமான 'இசுத்தார்கேட்' அமைத்து பாதுகாப்பாக அமைக்கப்பட்ட நகரமாகும். இவர் மேலும் ஒரு பெரிய அழகான புகழ்பெற்ற அரண்மனையை கட்டினார். அது, 'தி மார்வெல் ஆப் தி மேன்கைண்ட்' என்று அழைக்கப்பட்டது. மேலும் இவர் ஒரு கப்பல் துறைமுகத்தை பெர்சியன் கல்ப் என்ற இடத்தில் முதன்முதலில் அமைத்து உலகப்புகழ் பெற்றாா்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Anton Nyström, Allmän kulturhistoria eller det mänskliga lifvet i dess utveckling, bd 2 (1901)
  2. Freedman 2000, பக். 953.
  3. "Manorama Tell me why" July 2017

உசாத்துணைகள்[தொகு]