உள்ளடக்கத்துக்குச் செல்

அசிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிரியா
𒆳𒀭𒊹𒆠
அண். கிமு 2025 [a]கிமு 609 [b]
கொடி of பண்டைய அசிரியா
பண்டைய அசூர் கடவுளின் சின்னம்
கிமு 7ஆம் நூற்றாண்டில் பண்டைய அசிரியாவின் மையப் பகுதி (சிவப்பு நிறம்)
கிமு 7ஆம் நூற்றாண்டில் பண்டைய அசிரியாவின் மையப் பகுதி (சிவப்பு நிறம்)
தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)
சமயம்
பண்டைய மெசொப்பொத்தேமியா சமயம்
அரசாங்கம்முடியாட்சி
முக்கிய மன்னர்கள் 
• அண். கிமு 2025
புசூர்-ஆஷூர் I (முதல் மன்னர்) (துவக்ககால அசூர் நகர இராச்சியத்தை நிறுவியவர்)
• அண். கிமு 1974–1935
எரிசூம் I (இனப்பெயரின் மூலவர் & பழைய அசிரியப் பேரரசின் வணிக வலைதளத்தை அமைத்தவர்)
• அண். கிமு 1808–1776
சாம்சி-அதாத் I (வெளிநாட்டு அமோரிட்டு மக்களை வென்றவர். மேல் மெசொப்பொத்தேமியா வரை இராச்சியத்தை விரிவாக்கியவர்)
• அண். கிமு 1700–1691
பெல்-பனி
• அண். கிமு1363–1328
அசூர்-உபால்லித்து I (மத்தியகால அசிரியப் பேரரசை) நிறுவியவர்.
• அண். கிமு 1243–1207
துகுல்டி-நினுர்தா I
• கிமு 1114–1076
திக்லத்-பிலேசர் I
• கிமு 883–859
அசூர்னசிர்பால் II (துவக்ககால புது அசிரியப் பேரரசின் வெற்றிகளுக்கு காரணமானவர். தலைநகரை நிம்ருத்திற்கு மாற்றியவர்.)
• கிமு 745–727
திக்லத்-பிலேசர் III (அசிரியாவை அண்மைக் கிழக்கில் நிகரற்ற சக்தியாக மாற்றியவர்)
• கிமு 705–681
சென்னாசெரிப் (மிகவும் புகழ்பெற்ற அசிரிய மன்னர்; தலைநகரை நினிவேக்கு மாற்றியவர்)
• கிமு 681–669
எசர்காதோன் (அசிரியாப் பேரரசை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றவர்).
• கிமு 669–631
அசூர்பனிபால் (இறுதி அசிரியப் பேரரசர் & புகழ்பெற்ற அஷுர்பனிபால் நூலகத்தை நிறுவியவர்.
• கிமு 631–627
அஷூர்-எடில்-இலானி
• கிமு 627–612
சின்ஷரிஷ்குன்
• கிமு 612–609
அசூர்-உபால்லித்து II]] (இறுதி)
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம் முதல் இரும்புக் காலம் வரை
அண். கிமு 2600
• அசூர் நகர இராச்சியம் நிறுவப்படல்
அண். கிமு 2025 [a]
அண். கிமு 2025–1364
அண். கிமு 1363–912
கிமு 911–609
கிமு 609 [b]
• சசானியப் பேரரசினர் அசூர் நகரத்தை தாக்கி அழித்தது.
அண். கிபி 240
முந்தையது
பின்னையது
மூன்றாவது ஊர் வம்சம்
புது பாபிலோனியப் பேரரசு
மீடியாப் பேரரசு
தற்போதைய பகுதிகள் ஈராக்
 சிரியா
 இசுரேல்
 துருக்கி
 எகிப்து
 யோர்தான்
 ஈரான்
 குவைத்
 லெபனான்
 சைப்பிரசு
 பலத்தீன்
அசிரியப் பேரரசு
மெசொப்பொத்தேமியாவின் நாகரீக கால அசிரியா, பாபிலோன், சுமேரியா மற்றும் ஈலாம் பகுதிகள்
லம்மசு என அழைக்கப்பட்ட அசிரியர்களின் சிறகுடன் கூடிய எருது.

பண்டைய அசிரியா என்பது, டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய அசூர் என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா லெவண்ட், பண்டைய மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து, அனத்தோலியாவின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது மெசொப்பொத்தேமியாவின் வட அரைப்பாகத்தையே குறித்தது.

இது அசூர், நினிவே மற்றும் நிம்ருத் நகரங்களை தலைநகரங்களாக கொண்டிருந்தது. இதன் தென்பகுதி பாபிலோனியா எனப்பட்டது.[4][5]

அசிரியத் தாயகம் மலைப் பகுதிகளை அண்டி அமைந்து, டைகிரிஸ் ஆற்றோரமாக, அசுர் மலைகள் என அழைக்கப்பட்ட ஆர்மீனியாவின் கார்டுச்சிய மலைத்தொடர் வரை விரிவடைந்து இருந்தது.

அசிரிய அரசர்கள் வரலாற்றின் மூன்று கட்டங்களில் பெரும் நிலப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவை, பழைய அசிரியப் பேரரசு, மத்திய அசிரியப் பேரரசு, மற்றும் புது அசிரியப் பேரரசு எனப்பட்டன. இவற்றுள் மிகப் பலம் பொருந்தியதும், பரவலாக அறியப்பட்டதுமான அரசு, கிமு 911 க்கும், 612 க்கும் இடையில் நிலவிய புதிய-அசிரிய அரசு ஆகும். இப்பேரரசின் இறுதி பேரரசர் அசூர்பனிபால் ஆவார். கிமு 609ல் புது பாபிலோனியப் பேரரசு மற்றும் மீடியா மக்களும் இணைந்து புது அசிரியப் பேரரசை வீழ்த்தினர்.

முற்பட்ட வரலாறு

[தொகு]

அசிரியாவிலுள்ள பெரும்பாலான புதியகற்காலக் களங்கள், ஹஸ்சுனா பண்பாட்டின் மையமான டெல் ஹஸ்சுனாவில் காணப்படுகின்றன. அசிரிய அரசின் முற்பட்ட வரலாறு பற்றி அதிக தகவல்கள் கிடையா. சில யூத-கிறிஸ்துவ மரபுகளின்படி, அசுர் நகரம், ஷெம்மின் மகனான அஷுர் என்பவனால் நிறுவப்பட்டது எனக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் அஷுர் இந் நகரத்தின் காவற் கடவுளாகக் கருதப்பட்டான்.

மேல் டைகிரிஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதி தொடக்க காலங்களில் சுமெர், அக்காட், வட பபிலோனிய அரசுகளால் ஆளப்பட்டதாகத் தெரிகிறது.

தொடக்ககால அசிரிய நகர ஆட்சிகளும், அரசுகளும்

[தொகு]

அசிரிய ஆட்சியாளர்களில் முந்திய கல்வெட்டுக்கள் கி.மு 2000 ஆம் ஆண்டுக்குப் பிந்தியவை. அக்காலத்தில், அசிரியா பல நகர ஆட்சிப் பகுதிகளையும், சிறிய செமிட்டிக் அரசுகளையும் கொண்டிருந்தது. அசிரிய முடியாட்சியை நிறுவியவனாக கி.மு 1900 ஆவது ஆண்டுக்குப் பின் வாழந்தவனான ஸுலிலு என்பவன் என்று கருதப்படுகிறது.

பிந்தைய அசிரியப் பேரரசுகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Düring 2020, ப. 39.
  2. Lambert 1983, ப. 82–85.
  3. Roux 1992, ப. 187.
  4. Assyria
  5. அசிரியா

வெளியிணைப்புகள்

[தொகு]


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிரியா&oldid=4476357" இலிருந்து மீள்விக்கப்பட்டது