செம்தேத் நசிர் காலம்
செம்தேத் நசிர் காலம் கிமு 3100 — கிமு 2900 | |
---|---|
செம்தேத் நசிர் காலப் பண்பாட்டுக் களங்கள் (வெளிர் பழுப்பு நிறத்தில்), உரூக் பண்பாட்டுக் களங்கள் (மஞ்சள் நிறத்தில்) | |
புவியியல் பகுதி | மெசொப்பொத்தேமியா |
காலப்பகுதி | வெண்கலக் காலம் |
காலம் | கிமு 3100 முதல் — கிமு 2900 வரை |
வகை களம் | செம்தேத் நசிர் தொல்லியல் மேடு |
முக்கிய களங்கள் | அபு சலாபிக், சுருப்பக், பாரா, கபாஜா, நிப்பூர், உக்கயர், ஊர் மற்றும் உரூக் தொல்லியல் மேடுகள் |
முந்தியது | உரூக் காலம் |
பிந்தியது | மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் காலம் |
செம்தேத் நசிர் காலம் ( Jemdet Nasr Period) (கிமு 3100 — கிமு 2900) பண்டைய அண்மை கிழக்கின் கீழ் மெசொப்பொத்தேமியாவில், சுமேரிய நகரமான செம்தேத் நசிர் நகரத்தில், (தற்கால தெற்கு ஈராக்கில்) கிமு 3100 முதல் கிமு 2900 வரை காணப்பட்ட ஒரு தொல்பொருள் பண்பாடுக் காலம் ஆகும். செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டின் பெயரால் இதற்கு செம்தேத் நசிர் காலம் எனப்பெயரிடப்பட்டது. செம்தேத் நசிர் காலத்திற்குப் பின்னர் உரூக் காலமும், அதன் பின்னர் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் காலமும் துவங்கியது.
வரலாற்று ஆய்வுகள்
[தொகு]1900 ஆண்டுகளில் ஆப்பெழுத்துகளில் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட 36 களிமண் பலகைகள் தொல்பொருட்கள் வணிகச் சந்தையில் விற்பனைக்கு வந்தது. 1903-இல் இப்பலகைகளை வாங்கிய செர்மானிய தொல்லியல் அறிஞர், இப்பலகைகளின் செய்திகளை ஆய்ந்து, இவைகள் செம்தேத் நசிர் தொல்லியல் களத்தைச் சேர்ந்தது என முடிவு செய்து, 1926-இல் செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்தார். அகழாய்வின் போது களிமண் செங்கற் கட்டிடத்தில் துவக்க கால ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட 150 முதல் 180 களிமண் பலகைகளை கண்டெடுத்தார்.
செம்தேத் நசிர் அகழாய்வுகளின் மூலம் 1930-இல் உரூக் மற்றும் உபைதுகள் காலம் வரையறுக்கப்பட்டது.[1]
அகழாய்வு முடிவுகளின்படி, செம்தேத் நசிர் காலத்திற்குப் பின் மெசொப்பத்தோமியாவில் உரூக் காலமும், அதன் பின்னர் துவக்க வம்சத்தவர்களின் காலமும் கணிக்கப்பட்டது. செம்தேத் நசிர் தொல்லியல் அகழ்வாய்வுக்குப் பின்னர் நடு மெசொப்பொத்தோமியாவில் அபு சலாபிக், சிருப்பக், கபாஜா, நிப்பூர், உக்கியர், ஊர் மற்றும் உரூக் ஆகிய தொல்லியல் களங்கள் அகழாய்வு செய்யப்பட்டது.[2]
காலமும், காலவரிசையும்
[தொகு]பழைய அறிவியல் கணக்குப்படி, செம்தேத் நசிர் தொல்லியல் பண்பாட்டுக் காலத்தை கிமு 3,200 - கிமு 3,000 என வறையறை செய்தனர். நவீன அறிவியல் கருவிகளின் துணையுடன் செய்யப்பட்ட ஆய்வில் செம்தேத் நசிர் பண்பாட்டு காலம் கிமு 3,100–2,900 காலத்தியது என கண்டறிந்துள்ளனர்.[3][4][5][6]
செம்தேத் நசிர் தொல்லியல் பண்பாட்டின் சமகாலத்தியது என மேல் மெசொப்பொத்தேமியாவின் ஐந்தாம் நினிவே, கீழ் மெசொப்பொத்தேமியாவின் உரூக் மற்றும் ஆதி ஈலாம் தொல்லியல் பண்பாட்டுகளை தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுவர்.[7]
செம்தேத் நசிர் பண்பாட்டுக் காலத்திய சமுதாயம்
[தொகு]செம்தேத் நசிர் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட கட்டிடங்கள், ஆப்பெழுத்து களிமண் பலகைகள், உருளை வடிவ முத்திரைகள் மூலம் செம்தேத் நசிர் பண்பாடு சிறந்து விளங்கியதென்றும், இங்கு நீர் பாசான வடிகால்கள், வேளாண்மை, கைவினைத் தொழில்கள், பழத்தோட்டங்கள் மூலம்அ பொருளாதாரம் சிறந்து விளங்கியது என அறியப்படுகிறது. மேலும் மக்கள் ஆடு - மாடுகளை மேய்க்கும் தொழிலும் சிறந்து விளங்கியுள்ளது. வணிகம் சிறிய அளவில் நடந்துள்ளதற்கு, இத்தொல்லியல் களத்தில் அழகிய நவரத்தின மணிகள் செம்சேத் நசிர் முத்திரைகள் மூலம் ஊர், உரூக் மற்றும் லார்சா நகரங்கள் குறித்து அறிய அறியமுடிகிறது.[8]
செம்தேத் நசிரி காலத்திய தொல்பொருட்கள்
[தொகு]-
ஓவியம் தீட்டப்பட்ட பீங்கான் பாத்திரம், கபாஜா தொல்லியல் களம்
-
சிற்பங்களுடன் கூடிய கோப்பை, செம்தேத் நசிர் முதல் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் காலம் முன்னர் வரையிலானது, கிமு 3300-2600.
-
மேற்படி கோப்பையின் பின்புறத்தில் வெற்றி வீரன், காளை மற்றும் சிங்க உருவங்கள், அக்ராப் தொல்லியல் மேடு, துவக்க வம்சக் காலம், கிமு 3000-2600
-
கல் கிண்ணம்
-
உருளை முத்திரை
-
பிந்தைய உரூக்/செம்தேத் நசிர் காலத்திய உருளை முத்திரை (கிமு 3350-2900).
-
பிந்தைய உரூக்/செம்தேத் நசிர் காலத்திய உருளை முத்திரை (கிமு 3350-2900).
-
பிந்தைய உரூக்/செம்தேத் நசிர் காலத்திய உருளை முத்திரை (கிமு 3350-2900).
-
பிந்தைய உரூக்/செம்தேத் நசிர் காலத்திய உருளை முத்திரை (கிமு 3350-2900).
இதனையும் காண்க
[தொகு]- பண்டைய அண்மை கிழக்கு
- உரூக் பண்பாடு
- கிஷ்
- அசுன்னா பண்பாடு
- ஹலாப் பண்பாடு
- உபைது பண்பாடு
- மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Matthews 2002, ப. 1–7
- ↑ Matthews 2002, ப. 20
- ↑ Pollock 1992, ப. 299
- ↑ Pollock 1999, ப. 2
- ↑ Postgate 1992, ப. 22
- ↑ van de Mieroop 2007, ப. 19
- ↑ Matthews 2002, ப. 37
- ↑ Matthews 2002, ப. 33–37
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Matthews, Roger (2002), Secrets of the dark mound: Jemdet Nasr 1926-1928, Iraq Archaeological Reports, vol. 6, Warminster: BSAI, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85668-735-9
- Pollock, Susan (1992), "Bureaucrats and managers, peasants and pastoralists, imperialists and traders: Research on the Uruk and Jemdet Nasr periods in Mesopotamia", Journal of World Prehistory, 6 (3): 297–336, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF00980430
- Pollock, Susan (1999), Ancient Mesopotamia. The Eden that never was, Case Studies in Early Societies, Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-57568-3
- Postgate, J.N. (1992), Early Mesopotamia. Society and economy at the dawn of history, London: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-11032-7
- van de Mieroop, M. (2007), A History of the Ancient Near East, ca. 3000-323 BC, Malden: Blackwell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-22552-8
- Woods, Christopher (2010), "The earliest Mesopotamian writing", in Woods, Christopher (ed.), Visible language. Inventions of writing in the ancient Middle East and beyond (PDF), Oriental Institute Museum Publications, vol. 32, Chicago: University of Chicago, pp. 33–50, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-885923-76-9, archived from the original (PDF) on 2021-08-26, பார்க்கப்பட்ட நாள் 2019-10-30