பழைய அசிரியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பழைய அசிரியப் பேரரசு
Aššūrāyu
[[துவக்க அசிரியர்களின் காலம்|]]
கிமு 2025 -–1378
 

 

கிமு 1721ல் மேல் மெசொப்பொத்தேமியாவில் பழைய அசிரியப் பேரரசு
தலைநகரம் அசூர் கிமு 2025
டெல்-லெய்லான் எனும் சுபாத்-என்லில் கிமு 1754 [1]
அசூர், கிமு 1681
மொழி(கள்) அக்காதியம், சுமேரியம்(வீழ்ச்சியடைந்த காலம்)
சமயம் பண்டைய மெசபதோமிய சமயங்கள் [2]
அரசாங்கம் முடியாட்சி
இஸ்சியாக் அசூர்
 -  கிமு 2025 முதலாம் புசூர் - அசூர் (முதல்)
 -  கிமு 1378 இரண்டாம் அசூர்- நடின் - அகே (இறுதி)
வரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்
 -  உருவாக்கம் கிமு 2025 -
 -  குலைவு 1378
தற்போதைய பகுதிகள்  சிரியா

 ஈராக்


அசிரியப் பேரரசர் காரும் காலத்திய அனதோலியா

பழைய அசிரியப் பேரரசு (ஆட்சிக் காலம்:கிமு 2025 - கிமு 1378) (Old Assyrian Empire) அசிரிய மக்களின் நான்கு கால கட்டங்களில் இருந்த பேரரசுகளில் இரண்டாவதாகும். பிற மூன்று கால கட்டங்களில் இருந்த அசிரிய இராச்சியங்கள் பண்டைய அசிரியா, மத்திய அசிரியப் பேரரசு மற்றும் புது அசிரியப் பேரரசுகள் ஆகும். பழைய அசிரியப் பேரரசின் தலைநகராக அசூர் மற்றும் டெல்-லெய்லான் எனும் சுபாத்-என்லில் நகரங்கள் விளங்கியது. பழைய அசிரியப் பேரரசு கிமு 2025 முதல் 1378 முடிய ஆண்டனர்.

பண்டைய அண்மை கிழக்கில், யூப்ரடீஸ் - டைகிரீஸ் ஆறுகள் பாயும் மேல் மெசொப்பொத்தேமியாவில், தற்கால ஈராக் மற்றும் சிரியாவில் வாழ்ந்த அசிரியர்கள் கிழக்கு செமிடிக் மொழியான அக்காதியம் பேசினர்.

நாகரீகங்களின் தொட்டில் எனப்போற்றப்படும் மெசொப்பொத்தேமியாவில் சுமேரியாவின் அக்காடியப் பேரரசு, பாபிலோன், அசிரியா இராச்சியங்கள் கலை, பண்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்ந்த நிலையில் இருந்தன.

பழைய அசிரியப் பேரரரசு உச்சத்தில் இருந்த போது கிழக்கில் தற்கால ஆர்மீனியா, அஜர்பைஜன், மற்றும் ஈரான், ஈராக், சிரியா, தெற்கில் அரேபியத் தீபகற்பம், மேற்கில் சைப்பிரஸ், பண்டைய எகிப்து, பண்டைய லிபியா ஆகிய பகுதிகளில் அசிரியர்களின் ஆட்சியில் இருந்தது.[3]

முந்தைய அக்காடியப் பேரரசில் சிறு நகரமாக இருந்த அசூர் நகரத்தில் கிமு 2600ல் அசிரிய மக்கள் கோயில்கள், அரண்மனைகள், நகரச் சதுக்கங்கள் கட்டி, அதனை தமது இராச்சியத்திற்கு பெயராகவும், தலைநகரமாகவும் கொண்டனர். அசூர் நகரம் நிறுவுவதற்கு முன்னர் அசிரியாவை சுபர்த்து என்றும் சாசானியப் பேரரசில் அசோரிஸ்தான் எனவும் அழைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

பழைய அசிரியப் பேரரசர் இலு - சுமா காலத்தில் தற்கால துருக்கி மற்றும் சிரியாவின் அனதோலியா, லெவண்ட் மற்றும் மெசொப்பொத்தேமியாவின் தெற்கின் பாபிலோனியப் பகுதிகளில் அசிரியர்களின் குடியிருப்புகள் ஏற்படுத்தினர்.

மெசொப்பொத்தேமியாவில் கிமு 2450ல் அசிரியர்கள், சுமேரியர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். அசிரிய மக்களின் முதல் கோயிலை அசூர் நகரத்தில் அசிரியப் பேரரசர் உஷ்பியா கிமு 2050ல் நிறுவினார். பின்னர் நகரத்துடன் அசூர் கோயிலைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் எழுப்பப்பட்டது.

கிமு 2500 - 2400க்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடைகள் மேய்க்கும் நாடோடி இன மக்களாக இருந்த அசிரியர்கள், அனதோலியாவின் ஹட்டியர்கள் மற்றும் உரியர்கள், மற்றும் ஈலாம் பகுதியின் குடியன், லுல்லுபி மற்றும் அமோரிட்டு இன மக்களிடம் பகை பாராட்டினர்.[4]

கிமு 2400ல் சுமேரிய மக்கள் அக்காடியப் பேரரசின் அசிரிய-பாபிலோனிய குடிமக்கள் ஆயினர்.[5][6]கிமு 2025ல் அசிரியர்கள் மொசபதோமியாவில் பழைய அசிரியப் பேரரசை நிறுவினர்.

மித்தானி இராச்சியம்[தொகு]

பழைய அசிரியப் பேரரசுக்கும், மத்திய அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிமு 1475 முதல் கிமு 1275 முடிய மித்தானியர்கள் அசிரியர்களின் பேரரசைக் கைப்பற்றி ஆண்டனர்.

இதனையும் காண்க[தொகு]

பழைய அசிரியப் பேரரசின் ஆட்சியாளர்கள்[தொகு]

பழைய அசிரியப் பேரரசர்களின் பட்டியல்:[7]

 • முதலாம் புசூர் - அசூர் - கிமு 2025
 • இலு -சுமா - கிமு 1945 - 1906

மேற்கோள்கள்[தொகு]

 1. Tell Leilan
 2. Ancient Mesopotamian religion
 3. Albert Kirk Grayson (1972). Assyrian Royal Inscriptions: Volume I. Wiesbaden: Otto Harrassowitz. பக். 108.  §716.
 4. Georges Roux (1964), Ancient Iraq[page needed]
 5. Guy Deutscher (linguist) (2007). Syntactic Change in Akkadian: The Evolution of Sentential Complementation. Oxford University Press US. பக். 20–21. ISBN 978-0-19-953222-3. https://books.google.com/?id=XFwUxmCdG94C. 
 6. Woods C. 2006 "Bilingualism, Scribal Learning, and the Death of Sumerian". In S. L. Sanders (ed) Margins of Writing, Origins of Culture: 91–120 Chicago [1]
 7. Rowton, M.B. (1970). The Cambridge Ancient History. 1.1. Cambridge University Press. பக். 195. ISBN 0521070511. https://books.google.com/books?id=7SOL7ypj7bAC&printsec=frontcover&cad=0#PPA195,M1. 
 8. 8.0 8.1 Glassner, Jean-Jacques (2004). Mesopotamian Chronicles. Society of Biblical Literature. பக். 136–144. ISBN 1589830903. https://books.google.com/books?id=1i5b6STWnroC&printsec=frontcover&cad=0#PPA136,M1. 
 9. 9.0 9.1 Lendering, Jona (31 March 2006). "Assyrian King List". பார்த்த நாள் 2008-08-13.
 10. Glassner, Jean-Jacques (2004). Mesopotamian Chronicles. Society of Biblical Literature. பக். 88. ISBN 1589830903. https://books.google.com/books?id=1i5b6STWnroC&printsec=frontcover&cad=0#PPA88,M1. 

வெளி இணைப்புகள்[தொகு]ஆள்கூற்று: 36°00′N 43°18′E / 36.0°N 43.3°E / 36.0; 43.3

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_அசிரியப்_பேரரசு&oldid=2561717" இருந்து மீள்விக்கப்பட்டது