உள்ளடக்கத்துக்குச் செல்

மித்தானி இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மித்தானி இராசியம்
கிமு 1475–கிமு 1275
கிமு 1400ல் பண்டைய அண்மை கிழக்கில் மித்தானி இராச்சியத்தின் அமைவிடம் (காவி நிறத்தில்)
கிமு 1400ல் பண்டைய அண்மை கிழக்கில் மித்தானி இராச்சியத்தின் அமைவிடம் (காவி நிறத்தில்)
தலைநகரம்வாசுகன்னி
பேசப்படும் மொழிகள்உரியன் மொழி
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• கிமு 1475
கிர்தா (முதல்)
• கிமு 1275
இரண்டாம் சத்துவரா (இறுதி)
வரலாற்று சகாப்தம்செப்புக் காலம்
• தொடக்கம்
கிமு 1475
• முடிவு
கிமு 1275
முந்தையது
பின்னையது
[[பழைய அசிரியப் பேரரசு]]
யம்ஹத்
மத்திய அசிரியப் பேரரசு

மித்தானி இராச்சியம் (கிமு 1475 - 1275) (Mitanni) (/mɪˈtæni/; தற்கால வடக்கு சிரியா, மற்றும் தென்கிழக்கு அனதோலியாவின் பிரதேசங்களை கிமு 1475 முதல் கிமு 1275 முடிய ஆண்ட, இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான உரியன் மொழி பேசியவர்கள் ஆவார். மித்தானி இராச்சியத்தின் தலைநகரம் வாசுகன்னி ஆகும்.

மித்தானியர்கள் இட்டைட்டு பேரரசின் அமோரிட்டு நகரத்தை வீழ்த்தி, மெசொப்பொத்தேமியாவில் மித்தானி இராச்சியத்தை கிமு 1475ல் நிறுவினர்.[1]

மெசொப்பொத்தேமியாவில் மித்தானியர்கள் பழைய அசிரியப் பேரரசுக்கும், மத்திய அசிரியப் பேரரசுக்கும் இடையே பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி தங்கள் இராச்சியத்தை நிறுவியவர்கள்.

துவக்கத்தில் எகிப்தின் 18வது வம்ச ஆட்சிக்கும், மித்தானியர்களுக்கும் கடும் பகை இருந்தது. இட்டைட்டுப் பேரரசின் ஆதிக்கத்தால், தங்களை காத்துக் கொள்ள மித்தானியர்களும், எகிப்தியர்களும் உடன்படிக்கை செய்துகொண்டனர்.

மித்தானியர்கள் யூப்ரடீஸ் - டைகிரீஸ் ஆறுகளுக்கு மேற்புறப் பகுதிகளை கிமு 1475 முதல் 1275 முடிய ஆண்டனர். 1275ல் மித்தானி இராச்சியம் இட்டைடுகள் மற்றும் அசிரியர்களின் தொடர் தாக்குதல்களால் 1275ல் மித்தானி இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. பின்னர் மத்திய அசிரியப் பேரரசில் மித்தானி ஒரு மாகாணமாக விளங்கியது.

மித்தானி மன்னர் சௌஷ்ததரின் அரச முத்திரை

மித்தானி இராச்சிய ஆட்சியாளர்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Trevor Bryce (2005). The Kingdom of the Hittites. Oxford University Press. p. 98.

உசாத்துணை

[தொகு]
  • Gaal, E. "The economic role of Hanilgalbat at the beginning of the Neo-Assyrian expansion." In: Hans-Jörg Nissen/Johannes Renger (eds.), Mesopotamien und seine Nachbarn. Politische und kulturelle Wechselbeziehungen im Alten Orient vom 4. bis 1. Jahrtausend v. Chr. Berliner Beiträge zum Vorderen Orient 1 (Berlin, Reimer 1982), 349–354.
  • Harrak, Amir "Assyria and Hanilgalbat. A historical reconstruction of the bilateral relations from the middle of the 14th to the end of the 12th centuries BC." Studien zur Orientalistik (Hildesheim, Olms 1987).
  • Kühne, Cord "Politische Szenerie und internationale Beziehungen Vorderasiens um die Mitte des 2. Jahrtausends vor Chr. (zugleich ein Konzept der Kurzchronologie). Mit einer Zeittafel." In: Hans-Jörg Nissen/Johannes Renger (eds.), Mesopotamien und seine Nachbarn. Politische und kulturelle Wechselbeziehungen im Alten Orient vom 4. bis 1. Jahrtausend v. Chr. Berliner Beiträge zum Vorderen Orient 1 (Berlin, Reimer 1982), 203–264.
  • Novák, Mirko: "Mittani Empire and the Question of Absolute Chronology: Some Archaeological Considerations." In: Manfred Bietak/Ernst Czerny (eds.): "The Synchronisation of Civilisations in the Eastern Mediterranean in the Second Millennium BC III"; Österreichische Akademie der Wissenschaften Denkschrift Band XXXVII; Wien, 2007; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7001-3527-2; pp. 389–401.
  • Starr, R. F. S. Nuzi (London 1938).
  • Thieme, P., The 'Aryan Gods' of the Mitanni Treaties, Journal of the American Oriental Society 80, 301–317 (1960)
  • Von Dassow, Eva Melita. Social Stratification of Alalah Under the Mittani Empire. [S.l: s.n.], 1997.
  • Weidner, "Assyrien und Hanilgalbat". Ugaritica 6 (1969)
  • Wilhelm, Gernot: The Hurrians, Aris & Philips Warminster 1989.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mitanni
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்தானி_இராச்சியம்&oldid=3714847" இலிருந்து மீள்விக்கப்பட்டது