லூவிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூவியம்
லூவிலி
Hieroglyph Luwian BOS.jpg
லூவியப் படவெழுத்து
நாடு(கள்)இட்டைட்டுப் பேரரசு, அர்சாவா, புது-இட்டைட்டு இராச்சியம்
பிராந்தியம்அனத்தோலியா, வடக்கு சிரியா
Extinctகிமு 600 அளவில்
இந்திய-ஐரோப்பியம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3Either:
xlu — ஆப்பெழுத்து லூவியம்
hlu — படவெழுத்து லூவியம்
மொழிசார் பட்டியல்
xlu ஆப்பெழுத்து லூவியம்
 hlu படவெழுத்து லூவியம்
மொழிக் குறிப்புluvi1235[1]
{{{mapalt}}}
லூவிய மொழிப் பரம்பல்
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

லூவிய மொழி (Luwian language) அல்லது லூவியம் என்பது, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் அனத்தோலியக் கிளையைச் சேர்ந்த ஒரு தொல்பழங்கால மொழி அல்லது மொழித் தொகுதி. எழுதப்பயன்பட்ட எழுத்துமுறையின் அடிப்படையில் இரண்டுவகையான லூவியத்தை அடையாளம் கண்டுள்ளனர். ஒன்று ஆப்பெழுத்து முறையிலும், மற்றது படவெழுத்து முறையிலும் எழுதப்பட்டவை. எனினும், இவை வெவ்வேறு எழுத்து முறைகளில் எழுதப்பட்ட ஒரே மொழியா அல்லது இரண்டு மொழிகளா என்பதில் ஆய்வாளரிடையே ஒருமித்த கருத்து இல்லை.

அனத்தோலியாவில் இருந்த வேறு பல மொழிகள் லூவிய மொழியைப் போன்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது, இம்மொழிகள் ஆப்பெழுத்து லூவியம், படவெழுத்து லூவியம் என்பவற்றுடன், தமக்குரிய லூவியத்தின் கிளைகளைச் சேர்ந்தவை என்பதைக் காட்டுகின்றன. சில மொழியியலாளர்கள் இக்கிளையை "லூவியக் குழு" எனப் பெயரிட்டுள்ளனர்.

வகைப்பாடு[தொகு]

லூவிய மொழியை வகைப்படுத்துவது தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுட்சில பின்வருமாறு:

அனத்தோலியக் குழு[தொகு]

இந்திய-ஐரோப்பியக் குடும்பத்துள் அடங்கும் அனத்தோலிய மொழியான இட்டைட்டு மொழியுடன் தொடர்புள்ளது என்ற எடுகோளின் அடிப்படையில் லூவிய மொழி ஒரு அனத்தோலிய மொழி என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

டிரோசான் எடுகோள்[தொகு]

நேரடியாக லூவியத்தின் வழிவந்தது எனக் கூறமுடியாவிட்டாலும், லிசிய மொழி, லூவியத்துடன் தொடர்புள்ளது என்றும், டிரோஜான் மக்கள் லூவிய மொழியைப் பேசியிருக்கக்கூடும் என்ற கருத்தும் சில ஆய்வாளரிடையே காணப்படுகின்றது.

வேறு எடுகோள்கள்[தொகு]

பெரும்பான்மை வரலாற்று மொழியியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எடுகோள்களும் பல்வேறு காலகட்டங்களில் முன்வைக்கப்பட்டன. தைரேனிய மொழி, தார்சிய மொழி, கிரேக்க மொழி போன்றவற்றுடனும் லூசிய மொழிக்குத் தொடர்புகள் இருக்கக்கூடும் என்றும் கருத்துகள் இவற்றுள் அடங்கும்.

குறிப்புகள்[தொகு]

  1. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "லூவியம்". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/luvi1235. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லூவிய_மொழி&oldid=2610987" இருந்து மீள்விக்கப்பட்டது