உள்ளடக்கத்துக்குச் செல்

பட எழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(படவெழுத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பட எழுத்து முறையில் இருந்து உருவான பண்டை எகிப்திய எழுத்து முறை.

பட எழுத்து (Logogram) என்பது, ஒரு சொல்லை அல்லது ஒரு உருபனைக் குறிக்கப் பயன்படும் வரிவடிவம் ஆகும். இவற்றுக்குப் பேச்சு மொழியில் ஒத்த வடிவம் கிடையாது. பட எழுத்துக்களைச் சில வேளைகளில் கருத்தெழுத்து (ideogram) என்றும் குறிப்பது உண்டு. ஆனால், கருத்தெழுத்துக்கள், பட எழுத்துக்களைப்போல் சொற்களையும், ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக எண்ணங்களைக் குறிக்கின்றன.

பட எழுத்துக்கள் பல்வேறு முறைகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட காட்சிக் கூறுகளால் ஆனவை. இவை அகர வரிசை எழுத்து முறைகளைப்போல் ஒலியன் கூறுகளால் ஆக்கப்பட்டவை அல்ல. அகர வரிசை முறையில் எழுதப்பட்ட சொற்களின் ஒலியமைப்பைச் சுலபமாக நினைவில் வைத்திருக்க முடிவதுபோல, பட எழுத்துக்களின் பொருளை இலகுவாக நினைவில் வைத்திருக்கவும், ஊகிக்கவும் கூடியதாக இருக்கும். பட எழுத்துக்களில் இன்னொரு சிறப்பம்சம், ஒரே பட எழுத்தைப் பல்வேறு மொழிகளிலும் அதே பொருளைக் கொடுக்குமாறு பயன்படுத்த முடியும் என்பதாகும்.

குறிப்பு: தமிழ் எழுத்துக்கள் ஒலியன்களை நேரடியாக குறிப்பதில்லை, மாறாக பிறப்பிடத்தைக் குறிக்கின்றன. இன்றய உலகின், பட எழுத்து காலப்போக்கில் ஒலியம் குறிக்கும் எழுத்து (அல்பாபெற்) என பரிணாமம் அடந்தது என்பது தவறான கொள்கை. பட எழுத்து பிறப்பிடங்களைக் குறிக்கும் ஓர் விஞ்ஞான அடிப்படை கொண்ட எழுத்தாக மாறி அதன்பின் தவறான எழுந்தமான கொள்கையான எழுத்துக்குறிப்பது ஒலியம்களை என்றாகிற்று.

பட எழுத்து முறைகள்[தொகு]

பட எழுத்து முறைகளே உலகின் முதல் உண்மை எழுத்து முறைகள் ஆகும். பண்டைய எகிப்து, அண்மைக் கிழக்கு, சீனா, நடு அமெரிக்கா போன்ற தொடக்ககால நாகரிகங்கள் பலவற்றில் ஏதாவதொரு வடிவத்தில் பட எழுத்து முறைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருந்த சிந்துவெளி எழுத்துக்கள் பட எழுத்துக்கள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. முழுமையாகப் பட எழுத்துக்களையே பயன்படுத்தும் எழுத்துமுறை நடைமுறைச் சாத்தியம் அற்றது. அவ்வாறான எழுத்து முறைகள் எதுவும் அறியப்படவில்லை. மாறாக எல்லாப் பட எழுத்து முறைகளிலுமே பட எழுத்துக்கள், அவை குறிக்கும் பொருளின் உச்சரிப்பு ஒலி ஒப்புமையின் அடிப்படையில் வேறு பொருள் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு தொகுதி பட எழுத்துக்கள் அவற்றின் ஒலிப் பெறுமானத்துக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. பட அசையெழுத்து (logosyllabary) என்னும் சொல் இத்தகைய சொற்கள் பகுதியாக ஒலியன் இயல்பு கொண்டிருப்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட_எழுத்து&oldid=3448799" இலிருந்து மீள்விக்கப்பட்டது