கிளியோபாட்ராவின் ஊசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளியோபாட்ராவின் ஊசி, நியூயார்க்கு நகரம்
கிளியோபாட்ராவின் ஊசி, இலண்டன்
இரண்டாம் ராமேசஸ் நிறுவிய கிளியோபாட்ராவின் ஊசி, பாரிஸ்

கிளியோபாட்ராவின் ஊசி (Cleopatra's Needle) பண்டைய எகிப்தின், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் மற்றும் 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் எழுப்பிய ஊசி போன்ற செங்குத்தான மூன்று கல்தூபிகள் ஆகும்.[1] கிபி 1819-இல் அலெக்சாந்திரியா, அல்-உக்சுர் மற்றும் ஹெலியோபோலிஸ் நகரங்களை தொல்லியல் அகழ்வாய்வு செய்கையில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்தூபிகளுக்கு பின்னர் பிரான்சு நாட்டவர்கள் கிளியோபாட்ராவின் ஊசிகள் எனப்பெயரிட்டனர். [2] பண்டைய எகிப்தை கிமு 332 முதல் கிமு 32 முடிய ஆண்ட தாலமி வம்சத்தின் ஏழாம் கிளியோபாற்றாவுக்கும் இக்கல்தூபிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 19-ஆம் நூற்றாண்டில் இந்த மூன்று கல்தூபிகளை சீரமைத்து அதில் ஒன்று நியுயார்க் நகரத்திலும், ஒன்று இலண்டன் நகரத்திலும், ஒன்று பாரிசு நகரத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[3]

கிளியோபாட்ராவின் கல்தூபி, இலண்டன்[தொகு]

இலண்டன் கிளியோபாட்ரா ஊசி, எகிப்தின் பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் கிமு 1450-இல் ஹெலியோபோலிஸ் நகரத்தில் நிறுவினார். இந்த கிளியோபாட்ரா ஊசியை, கிபி 1819-இல் எகிப்திய மன்னர் முகமது அலி பாட்சா, ஐக்கிய இராச்சியத்திர்ற்கு பரிசாக வழங்கினார். சில காரணங்களுக்காக இது எகிப்திலே இருந்தது. [4]பின்னர் 1877-இல் இது இலண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.[5]

கிளியோபாட்ராவின் கல்தூபி, நியுயார்க்[தொகு]

நியுயார்க் கிளியோபாட்ரா ஊசியை, எகிப்திய இசுலாமிய சுல்தான் முகமது அலி பாட்சாவால், ஐக்கிய அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கப்பட்டது.இது நியூயார்க் நகர மையப் பூங்காவில் உள்ளது. [6]

கிளியோபாட்ராவின் கல்தூபி, பாரிஸ்[தொகு]

எகிப்தின் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் என்பவர் அல்-உக்சுர் எனுமிடத்தில் நிறுவிய இந்த கல்தூபியை, கிபி 1828-இல் எகிப்தின் சுல்தான் முகமது அலி பாட்சா பிரான்சு மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Obelisk, PILLAR
  2. Lucas, Paul (1724). Voyage du sieur Paul Lucas, fait en MDCCXIV, &c. par ordre de Louis XIV dans la Turquie, l'Asie. Sourie, Palestine, haute & Basse Egypte, &c.. 2. Rouen. பக். 24–25. 
  3. {https://www.ancient-origins.net/artifacts-other-artifacts/cleopatra-s-needle-story-behind-obelisks-007051 Cleopatra’s Needle: The Story Behind the Obelisks]
  4. "Egyptians are upset by Britain’s disregard for a gift" (in en). The Economist. https://www.economist.com/middle-east-and-africa/2018/10/04/egyptians-are-upset-by-britains-disregard-for-a-gift. 
  5. Cleopatra’s Needle: How This Egyptian Monument Came to Be in London
  6. "Obelisk". Central Park Conservancy (February 12, 2015).

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]