அரசிகளின் சமவெளி
இராணிகளின் சமவெளி படவெழுத்துக்களில் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
Ta-set-neferu T3-st-nfrw அழகின் இருப்பிடம் | ||||||||
இராணிகளின் சமவெளியில் கல்லறைகள், அல்-உக்சுர், எகிப்து |
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
அரசிகளின் சமவெளி (Valley of the Queens) (அரபு மொழி: وادي الملكات பண்டைய எகிப்திய பார்வோன்களின் இறந்த இராணிகளையும், இளவரசிகளையும் மம்மியாக்கி கல்லறைகளில் அடக்கம் செய்யும் இடமாகும். இது தற்கால எகிப்து நாட்டின் பண்டைய தீபை நகரத்தின் சமவெளிகளில் உள்ளது. இராணிகளின் சமவெளியை பண்டைய எகிப்திய மொழியில் அழகின் இருப்பிடம் என்றழைப்பர்.[1] இறந்த பார்வோன்களின் மம்மிகள் மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டது.[2] இராணிகளில் சமவெளி மேல் எகிப்தில் பாயும் நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது எகிப்தின் பண்டைய தீபை நகரத்தின் ஒரு பகுதியாகும். இந்த இராணிகளின் சமவெளியில் பதினெட்டாம் வம்சம், பத்தொன்பதாம் வம்சம், மற்றும் இருபதாம் வம்சங்களின் இறந்த இராணிகள் மற்றும் இளவரசிகள் மற்றும் அரச குழந்தைகளின் சடலங்களை மம்மியாக்கி இச்சமவெளியின் கல்லறைகளில் அடக்கம் செய்வது வழக்கம்.
அரசிகளின் கல்லறைகளில் குறிப்பிடத்தக்கது இரண்டாம் ராமேஸ்சின் இராணி நெபர்தாரி மற்றும் இராணி தியுதியின் கல்லறைகள் ஆகும்.[3]
இதனையும் காணக
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Sims, Lesley (2000). A Visitor's Guide to Ancient Egypt. Saffron Hill, London: Usborne Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7460-30673.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
ஆதாரங்கள்
[தொகு]- Bunson, Margaret (1991). "Valley of the Queens". Encyclopædia of Ancient Egypt. New York.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- "Tour Egypt: Valley of the Queens in Thebes, Egypt". பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.
- "Getty Conservation Institute: Valley of the Queens". Archived from the original on 14 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)