உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 945–கிமு 720
தலைநகரம்புபாஸ்திஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• தொடக்கம்
கிமு 945
• முடிவு
கிமு 720
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம்]]
[[எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்]]

எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம் (Twenty-second Dynasty of Egypt) எகிப்தின் மூன்றாம் இடைநிலக் காலத்தின் போது பண்டைய எகிப்தை கிமு 945 முதல் கிமு 720 முடிய 225 ஆண்டுகள் ஆண்ட வம்சம் ஆகும். இவ்வம்சத்தினர் கீழ் எகிப்து (வடக்கு எகிப்து) மற்றும் நடு எகிப்து பகுதிகளை ஆண்ட பார்வோன் முதலாம் சோசென்க், தனீஸ் அருகே நைல் நதி வடிநிலத்தில் புபாஸ்திஸ் எனும் புதிய நகரகத்தை நிறுவி எகிப்தை ஆண்டனர்.[1][2]

மேல் எகிப்தை (தெற்கு எகிப்து) ஆண்ட எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சத்தவர்கள் இந்த இருபத்தி இரண்டாம் வம்சத்தவர்களின் ஒரு கிளையினர் ஆவார்.

இருபத்தி இரண்டாம் வம்ச பார்வோன்கள்

[தொகு]
இருபத்தி இரண்டாம் வம்ச பார்வோன்கள்
பார்வோன் ஆட்சிக் காலம்
முதலாம் சோசென்க் கிமு 943–922
முதலாம் ஒசோர்கோன கிமு 922–887
இரண்டாம் சோசென்க் கிமு 887–885
முதலாம் டேக்லோத் கிமு 885–872
இரண்டாம் ஓசோர்கோன் கிமு 872–837
மூன்றாம் சோசென்க் கிமு 837–798
நான்காம் சோசென்க் கிமு 798–785
பாமி கிமு 785–778
ஐந்தாம் சோசென்க் கிமு 778–740
இரண்டாம் பெடுபாஸ்ட் கிமு 740–730
நான்காம் ஓசோர்கோன் கிமு 730–716

பண்டைய எகிப்திய வம்சங்கள்

[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]