ஆமொன் ரா வளாகம்
Jump to navigation
Jump to search

கர்னாக் கோயிலின் முதலாவது நுழைவாயில் அமைப்பு.

அமூன் கோயிலின் நிலப்படம்
எகிப்தில் உள்ள லக்சோருக்கு அருகில் கர்னக்கில் அமைந்துள்ள அமொன் ரே வளாகம், கர்னாக் கோயில் தொகுதியை உருவாக்குகின்ற நான்கு பகுதிகளுள் ஒன்றாகும். பண்டைய எகிப்தியப் பண்பாட்டுக்கு உரிய கட்டிடங்களைக் கொண்ட இந் நான்கு பகுதிகளுள் பெரியதும், பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதுமான ஒரே பகுதியும் இதுவே. இக் கோயில் பண்டைய எகிப்தியர்களின் கடவுளான இரா எனும் அமூன் சூரியக் கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.[1]
இக்களம் 250,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. மிகவும் பெரிதான இப் பகுதி பல அமைப்புக்களையும், கொண்டு அமைந்துள்ளது. இதன் பல பகுதிகளில், அகழ்வாய்வும், மீளமைப்பும் நடைபெற்று வருவதால் அப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதன் வட மேற்குப் பகுதியில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.