உள்ளடக்கத்துக்குச் செல்

பலெர்மோ கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலெர்மோ கல்
உயரம்43.5 செண்டி மீட்டர்
அகலம்25 செண்டி மீட்டர்
உருவாக்கம்கிமு] 2338
தற்போதைய இடம்பலெர்மோ, சிசிலி, இத்தாலி

பலெர்மோ கல் (Palermo Stone), பண்டைய எகிப்தைஆண்ட எகிப்தின் முதல் வம்ச (கிமு 3150 – கிமு 2890) பார்வோன்கள் முதல் ஐந்தாம் வம்ச (கிமு 2392 – கிமு 2283) பார்வோன்களின் பெயர்கள் மற்றும் ஆட்சிக் காலம் குறித்த வரலாற்றுப் பதிவுகளை, பண்டைய எகிப்திய மொழியில் குறித்த, ஏழு கற்பலகைகளில் ஒன்றாகும். மேலும் இக்கற்பலகைகளில் எகிப்தில் ஒவ்வொரு ஆண்டிலும் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும், பண்டைய எகிப்திய மொழியில் குறிக்கப்பட்டுள்ளது. இக்கற்பலகைகளை பழைய எகிப்து இராச்சியத்தவர்களால் நிறுவப்பட்டது.[1]நிறுவப்பட்டது.

இக்கற்பலகைகளில் ஒன்று தற்போது இத்தாலி நாட்டின் பலெர்மோ நகரத்தின் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளதால், இதற்கு பலெர்மோ கல் எனப்பெயராயிற்று. இற்கற்பலகைகள், எரிமலை குழம்புக் கற்களால் ஆனது. இந்தக் கற்பலகையின் ஐந்து துண்டுகள் கெய்ரோ நகர அருங்காட்சியகத்திலும், ஒரு துண்டுக் கற்பலகை இலண்டன் அருங்காடசியகத்திலும் உள்ளது.

பண்டைய எகிப்தின் பார்வோன்கள் பெயர்கள், ஆட்சிக் காலம் மற்றும் அரச குடும்பத்தினர் குறித்த செய்திகள் கூறும் எழு துண்டு கற் பலகைகள். P பலெர்மோ கல், 1-5 ஐந்து துண்டு கற்பலகைகள் கெய்ரோவில் உள்ளது மற்றும் L துண்டு இலண்டனில் உள்ளது

தொல்லியல் வரலாறு[தொகு]

இற்கற்பலகைகள் விவரிக்கும் வரலாற்றுப் பதிவுகள், ஐந்தாவது வம்சத்தை விட பிற்பகுதியில் இருந்து வந்ததா என்பது தெரியவில்லை. எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சத்தின் (கிமு 747-656) ஆட்சிக்குப் பின்னர் இந்த கற்பலகைகள் மிகவும் பின்னர் செய்யப்பட்டது என இற்கற்பலகையின் உள்ளடக்கத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பலேர்மோ கல் மற்றும் பிற துண்டுகளால் பாதுகாக்கப்படுவதால், அவை விவரிக்கும் காலகட்டத்தில் செதுக்கப்படவில்லை என்றும், அவைகள் நேரடியாக பழைய எகிப்திய இராச்சியத்தின் அசலை அடிப்படையாகக் கொண்டவை என பண்டைய எழுத்துக் கலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [2]

முக்கியத்துவம்[தொகு]

பலெர்மோ கல் மற்றும் இது தொடர்பான பிற கற்பலகைகள் பழைய எகிப்து இராச்சிய காலத்திய பண்டைய எகிப்திய மொழியின் ஆவணமாகும். இக்கற்பலகைகள் எகிப்தின் முதல் வம்சம் முதல் எகிப்தின் ஐந்தாம் வம்ச பார்வோன்களின் பெயர்களையும், அவர்களது ஆட்சிக் காலங்களையும், வரலாற்றையும் விவரிக்கும் முக்கிய எழுத்து ஆவணம் ஆகும்.[3][4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dodson, Aidan (2004) The Complete Royal Families of Ancient Egypt, p.62. Thames & Hudson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05128-3.
  2. Wilkinson, Toby A. H. (2000), p.23ff.
  3. Palermo Stone, EGYPTIAN ARCHAEOLOGY
  4. The Palermo Stone

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Palermo stone
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பலெர்மோ_கல்&oldid=3846693" இலிருந்து மீள்விக்கப்பட்டது