இளைய மெம்னோன் சிற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளைய மெம்னோன் சிற்பத் தலை
BM, AES Egyptian Sulpture ~ Colossal bust of Ramesses II, the 'Younger Memnon' (1250 BC) (Room 4).jpg
இளைய மெம்னோன் சிற்பம் (இரண்டாம் ராமேசஸ்), ராமேசியம்
செய்பொருள்கருங்கல்
அளவுஉயரம்:267 cm (105 in)
அகலம்:203 cm (80 in)
உருவாக்கம்ஏறத்தாழ கிமு 1270
காலம்/பண்பாடுஎகிப்தின் 19-ஆம் வம்சம்
இடம்ராமேசியம் வாசல்
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம் அறை எண் 4
இலண்டன்
அடையாளம்EA 19
ராமேசியத்தில் தற்போதும் உள்ள இளைய மெம்னோன் சிற்பம்

இளைய மெம்னோன் சிற்பம் (Younger Memnon) பண்டைய எகிப்தின் தெற்கில் அமைந்த தீபை நகரத்தின் ராமேசியம் கட்டிடத் தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கருங்கல் சிற்பங்கள் ஆகும். இதன் காலம் ஏறத்தாழ கிமு 1270 ஆகும். இது எகிப்தின் 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசசின் உடைந்த சிற்பப் பகுதி ஆகும்.

ராமேசியத்தில் நிறுவப்பட்ட ஒரே கருங்கல்லில் நிறுவப்பட்ட இரண்டு இளைய மெம்னோன் சிற்பங்களில் இதுவும் ஒன்றாகும். இச்சிற்பம் 2.7 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் (இரு தோள்களுக்கு இடையே), 7.25 டன் எடையும் கொண்டது. இதில் ஒரு சிற்பம் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1][2]மற்றொரு சிற்பம் எகிப்தின் ரமேசியத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A History of the World – Object: Statue of Ramesses II". BBC. 6 June 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Colossal bust of Ramesses II, the 'Younger Memnon' › The British Museum". Britishmuseum.org. 14 May 2010. 2 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 June 2010 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

பிரித்தானிய அருங்காட்சியக வலைத்தளம்
Publications
  • James, T. G. H.; Davies, W. V. (1983), Egyptian Sculpture, Harvard University Press, p. 41, ISBN 978-0-674-24161-9
  • G. Belzoni, Narrative of the operations and recent discoveries within the pyramids, temples, tombs, and excavations in Egypt and Nubia I (London, John Murray, 1822), pp. 61–80
  • S. Quirke and A.J. Spencer, The British Museum book of ancient Egypt (London, The British Museum Press, 1992), pp. 126–7
  • Albert M. Lythgoe, 'Statues of the Goddess Sekhmet', The Metropolitan Museum of Art Bulletin Vol. 14, No. 10, Part 2 (Oct., 1919), pp. 1+3-23
  • Stephanie Moser, Wondrous Curiosities: Ancient Egypt at the British Museum (University of Chicago Press, 2006), ISBN 0-226-54209-2

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Younger Memnon
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


ஆள்கூறுகள்: 25°43′39″N 32°36′37″E / 25.7275°N 32.6104°E / 25.7275; 32.6104