ஆரு (பண்டைய எகிப்திய தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆரு (Aaru) பண்டைய எகிப்திய தொன்மவியலில் இதனை நாணல் புலம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] வாழ்வு, இறப்பு, மறுவாழ்வு மற்றும் பாதாளம் ஆகியவற்றுக்கு காரணமான எகிப்தியக் கடவுளான ஓசிரைஸ் ஆட்சி செய்யும் பரலோக சொர்க்கமாகும். இது நைல் நதி வடிநிலக் கடவுளான கா (ஆன்மாவின் ஒரு பகுதி) என விவரிக்கப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தியர்கள் ஆன்மா இதயத்தில் வாழ்கிறது என்று நம்பினர். எனவே, மரணத்தின் போது, இதயத்தை மட்டும் எடைபோடும் வழக்கம் ஏற்பட்டது. இறப்பிறகுப் பின் ஆன்மாக்கள் நாணல் வயல்களுக்கு நடுவில் அபாயகரமான பயணத்தைத் தொடங்குகிறது. இறப்பிறகுப் பின் ஆன்மாக்கள் ஆரு எனுமிடத்தில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். [2]

தகுதியுள்ள ஆன்மாக்கள் ஆருவை அடைவதற்கு முன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு பல ஆபத்துக்களை எதிர்கொள்கின்றன. இறந்தவர்களின் ஆன்மாக்கள் தொடர்ச்சியான வாயில்கள் வழியாக உள்ளே நுழைகிறது. வாயில்களின் சரியான எண்ணிக்கை ஆதாரங்களைப் பொறுத்து மாறுபடும்; ஆன்மாக்கள் ஆயுதம் ஏந்திய தீய பேய்களால் பாதுகாக்கப்படுவதாக விவரிக்கப்படுகிறது. ஆரு பொதுவாக சூரியன் உதிக்கும் கிழக்கில் உள்ளதாக கருதப்படுகிறது. பூமிக்குரிய நைல் நதி டெல்டாவின் எல்லையற்ற நாணல் வயல்கள் என விவரிக்கப்படுகிறது. நைல் நதியின் இந்த வடிநிலத்தீன் சிறந்த வேட்டை மற்றும் விவசாய நிலம், இங்குள்ள ஆன்மாக்கள் நித்தியமாக வாழ அனுமதிக்கிறது. இன்னும் துல்லியமாக சொல்வதாயின் ஆரு, நாணல் வயல்களில் மூடப்பட்டிருக்கும் தீவுகளின் வரிசையாகக் கருதப்பட்டது. இந்த ஆரு எனும் நாணல் வயல், ஓசிரைஸ் கடவுள் வசித்த பகுதி "பிரசாதங்களின் புலம்" என்று அழைக்கப்படுகிறது,

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Field of Reeds (Aaru)
  2. Fadl, Ayman. "Egyptian Heaven". Article. Aldokkan. 2012-03-15 அன்று பார்க்கப்பட்டது.

ஊசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]