ராமேசியம் மன்னர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமேசியம் மன்னர்கள் பட்டியல், பண்டைய எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் இரண்டாம் ராமேசேசின் நினைவுக் கோயிலின் சுவரில் குறுங்கல்வெட்டுகளில் எகிப்தின் 18-ஆம் வம்சம் மற்றும் 19-ஆம் வம்ச மன்னர்களின் பெயர்ப் பட்டியல் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது.

இந்த மன்னர்களின் பட்டியலை முதலில் கண்டறிந்து 1845-ஆம் ஆண்டில் வெளியிட்டவர் ஜீன்-பிராகோய்ஸ் சாம்போலியன் ஆவார்.[1] பின்னர் 1849-ம் ஆண்டில் இந்த மன்னர்களின் பட்டியலை மறுசீரமைத்தவர் கார்ல் ரிச்சர்டு லெப்சியஸ் ஆவார்.[2]

இப்பட்டியலில் 19 குறுங்கல்வெட்டுகளில் 14 பார்வோன்களின் பெயர்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் அமர்னா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர்களின் பட்டியல் விடுபட்டுள்ளது.

இரண்டாம் ராமேசஸ் நினைவுக் கோயில் சுவரில் ராமேசியம் மன்னர்கள் பட்டியல்

பட்டியலில் உள்ள மன்னர்கள் பெயர்[தொகு]

ராமேசியம் நினைவுக் கோயில் சுவரில் இரண்டு வரிசையில் 14 குறுங்கல்வெட்டுகளில் 14 பார்வோன்களின் பெயர் செதுக்கப்பட்டுள்ளது. மேல் வரிசையில் 5 பார்வோன்களின் பெயரும், கீழ் வரிசையில் 9 பார்வோன்களின் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது. இச்சுவரில் இரண்டு காட்சிகள் உள்ளது. இடப்புற காட்சியில் 14 பார்வோன்களின் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது போன்றும், வலதுபுறத்தில் 5 பார்வோன்களின் சிலைகளை ஊர்வலத்தில் எடுத்துச் செல்வது போன்று சித்திரம் வரையப்பட்டுள்ளது.

இடது வரிசை வலது வரிசை
வரிசை எண் மன்னர் குறுங்கல்வெட்டில் அரியணைப் பெயர் வரிசை எண் மன்னர் குறுங்கல்வெட்டில் அரியணைப் பெயர்
1 முதலாம் தூத்மோஸ் ஆக்கேபெர்கரே 15 ஹொரெம்ஹெப் ஜெசேர்கெபெருரேரே-செதெபென்ரே
2 முதலாம் அமென்கோதேப் ஜேசேர்கரே 16 மூன்றாம் அமென்கோதேப் நெப்மாத்திரி
3 முதலாம் அக்மோஸ் நெப்பெடையர் 17 நான்காம் தூத்மோஸ் மென்கெபெருரே
4 இரண்டாம் மெண்டுகொதேப் நெப்ஹெபேப்திரி 18 இரண்டாம் அமென்கோதேப் ஆக்ஹெபெருரே
5 மெனஸ் மெனி 19 மூன்றாம் தூத்மோஸ் மெகெபெர்ரே
6 இரண்டாம் ராமேசஸ் உசர்மாத்திரி-செதெபென்ரே
7 முதலாம் சேத்தி மென்மாத்திரி
8 முதலாம் ராமேசஸ் மென்பெத்தியரே
9 ஹொரெம்ஹெப் ஜேசெர்கெபெருரெ-செதெப்பனரே
10 மூன்றாம் அமென்கோதேப் நெப்மாத்திரி
11 நான்காம் தூத்மோஸ் மென்கெபெருரே
12 இரண்டாம் அமென்கோதேப் ஆக்கேபெருரே
13 மூன்றாம் தூத்மோஸ் மென்கெபெர்ரே
14 இரண்டாம் தூத்மோஸ் ஆக்கெபெரேன்ரே

இதனுடன் மூன்றாம் ராமேசேசின் மெடிநெத் அபு மன்ன்னர்கள் பட்டியலை ஒப்பிடும் போது வடிவத்தில் ஒன்றாக உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jean-François Champollion (1845). Monuments de l'Égypte et de la Nubie, Vol II, plates 149bis-150, Paris
  2. Carl Richard Lepsius (1849). Denkmaeler aus Aegypten und Aethiopien, III, plate 163, Leipzig

உசாத்துணை[தொகு]

  • Jean François Champollion: Monuments de l'Égypte et de la Nubie, II, plates 149bis-150 (Paris: 1845)
  • Carl Richard Lepsius: Denkmaeler aus Aegypten und Aethiopien, III, plate 163, (Berlin: 1849)
  • The Epigraphic Survey: Medinet Habu: Volume IV, OIP 51, Plate 213 (Chicago: 1940)
  • Kenneth A. Kitchen: Ramesside Inscriptions, Vol V, pp. 205:9-11; 209:9-10 (Oxford: 1983)