ஹொரெம்ஹெப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹொரெம்ஹெப்
ஹொரெம்ஹெப்பின் சிலை
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1319 – 1292 [1], பதினெட்டாம் வம்சம்
முன்னவர்ஆய்
பின்னவர்முதலாம் ராமேசஸ்
துணைவி(யர்)அமேனியா, மூத்நெத்மெத்
இறப்புகிமு 1319
அடக்கம்கல்லறை எண் 57
நினைவுச் சின்னங்கள்ஹொரெம்ஹெப்பின் கல்லறை, மெம்பிசு

ஹொரெம்ஹெப் (Horemheb) பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தின் இறுதி பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியத்தை 17ஆண்டுகள் ஆண்டார்.[2] இவருடன் எகிப்தில் பதினெட்டாம் வம்சத்தின் ஆட்சி முடிவுற்று, பத்தொன்பதாம் வம்சத்தை நிறுவிய முதலாம் ராமேசஸ் ஆட்சி நிலவியது. பார்வோன் ஹோரெம்ஹெப்பின் கல்லறைக் கோயில், மெம்பிசு நகரத்தின் மன்னர்களின் சமவெளியில் 57-ஆம் கல்லறையில் உள்ளது. 20-ஆம் நூற்றாண்டில் தியோடர் எம் டேவிஸ் எனும் தொல்லியல் அறிஞர் ஹெரெம்ஹெப்பின் கல்லறையை அகழ்வாய்வுவில் சிதைந்த நிலையில் மெம்பிசு நகரத்தில் கண்டுபிடித்தார்.

பார்வோன் துட்டன்காமன் மற்றும் ஆய் ஆட்சியில் எகிப்தின் படைத்தலைவராக இருந்த ஹோரெம்ஹெப், ஆயின் மகளான மூத்நெத்மெத்தை மணந்தவர். பின்னர் ஒரு புரட்சியின் மூலம் பார்வோன் ஆய்யை வீழ்த்தி எகிப்தின் அரியணை ஏறியவர். இவர் பார்வோன் அக்கெனதெனின் கல்லறைக் கோயிலை சிதைத்து, அதிலிருந்து கிடைத்த கட்டுமானப் பொருட்களைக் கொண்டு தனது கல்லறைக் கோயிலை மெம்பிசு நகரத்தில் நிறுவினார்.

ஹெரெம்ஹெப்பின் இறப்பிற்கு பின்னர் அவரது மகன் முதலாம் ராமேசஸ் எனற பெயருடன் பத்தொன்பதாம் வம்சதை நிறுவி, புது எகிப்திய இராச்சியத்தின் பார்வோன் ஆனார்.[3]

அமூன் கடவுளின் சிலை அருகே ஹோரெம்ஹெப்பின் சிலை, இத்தாலி


ஹொரெம்ஹெப்கல்லறை 57-இல் சித்திரங்கள்


அமூன் கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் ஹொரெம்ஹெப் சுவர் கல்வெட்டு, கர்னாக்
ஹொரெம்ஹெப்கல்லறை 57-இல் சித்திரங்கள்
ஹொரெம்ஹெப் சக்காராவில் நிறுவிய மண்டபம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Horemheb
  2. "Chronology table". Ancient Egyptian Chronology. Handbook of Oriental Studies. Brill. 2006. பக். 493. https://archive.org/details/ancientegyptianc00horn_842. 
  3. "Ramesses". carlos.emory.edu. மூல முகவரியிலிருந்து 2017-06-28 அன்று பரணிடப்பட்டது.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Cyril Aldred, Two monuments of the reign of Ḥoremḥab, in: Journal of Egyptian Archaeology 54 (1968), 100–106.
  • Jürgen von Beckerath, Nochmals die Regierungsdauer des Ḥaremḥab, in: SAK 6 (1978), 43–49.
  • Jürgen von Beckerath, Chronologie des pharaonischen Ägypten, MÄS 46, Philip Von Zabern, Mainz: 1997.
  • Alan Gardiner, The Inscription of Mes: A Contribution to Egyptian Juridical Procedure, Untersuchungen IV, Pt. 3 (Leipzig: 1905).
  • Nicholas Grimal, A History of Ancient Egypt, Blackwell Books: 1992.
  • K.A. Kitchen, The Basis of Egyptian Chronology in relation to the Bronze Age," Volume 1: pp. 37–55 in "High, Middle or Low?: Acts of an International Colloquium on absolute chronology held at the University of Gothenburg 20–22 August 1987." (ed: Paul Aström).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொரெம்ஹெப்&oldid=2989163" இருந்து மீள்விக்கப்பட்டது