உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் ராமேசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் ராமேசஸ்
பேரரசர் இராமேசஸ்
அபு சிம்பெல் தொல்லியல் களத்தில் கிடைத்த இரண்டாம் ராமசேசின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1279–1213, எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்
முன்னவர்முதலாம் சேத்தி
பின்னவர்மெர்நெப்தா
துணைவி(யர்)நெபர்தரி & 6
பிள்ளைகள்10
தந்தைமுதலாம் சேத்தி
தாய்தூயா
பிறப்புகிமு 1303
இறப்பு1213 கிமு (வயது 90)
அடக்கம்கல்லறை 7
நினைவுச் சின்னங்கள்அபு சிம்பெல் கோயில்கள், இரண்டாம் ராமேசஸ் சிலை, அபிதோஸ், ராமேசியம், கர்னாக், அல்-உக்சுர் [1][2]
மெம்பிசில் உடைந்த இரண்டாம் ராமேசஸ் சிலை

இரண்டாம் ராமேசஸ்[3][4] [5]) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19வது வம்சத்தின் முன்றாவது பார்வோன் ஆவார். பண்டைய எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14-ம் அகவையில் இளவரசராகவும், 20-ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் எகிப்தின் மன்னராக ஆட்சிபுரிந்தார். [6]தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 சேத் திருவிழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு. மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். இவரது சிறந்த ஆட்சிக் காலத்தை எகிப்தியவியல் அறிஞர்கள் ராமேசியம் காலம் என்பர். முதலாம் சேத்தியின் மகனான இரண்டாம் ராமேசசின மனைவி பெயர் நெபர்தரி ஆகும்.

இவர் பண்டைய அண்மை கிழக்கு பிரதேசத்தில் உள்ள மெசொப்பொத்தேமியாவின் இட்டைட்டு பேரரசு மற்றும் தெற்கு எகிப்திற்கு கீழ் உள்ள நூபியா பகுதிகள், மற்றும் லிபியா பகுதிகளை வென்றவர்.

இவர் எகிப்தை ஆண்ட முதல் வம்ச மன்னர்கள் முதல் 18-ஆம் வம்ச பார்வோன்களின் பெயர்கள் வரை, பாபிரஸ் எனும் காகிதத்திலும், அபிதோஸ் கோயில் சுவரின் கற்பலகையில் குறுங்கல்வெட்டுகளாக பொறித்து வைத்தார். அவைகளை துரின் மன்னர்கள் பட்டியல் மற்றும் அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் என்பர்.

நிறுவிய கட்டிடங்கள்

[தொகு]

பார்வோன் இரண்டாம் ராமேசஸ் பண்டைய அபிதோஸ், கர்னாக், அல்-உக்சுர், பை-ராமேசஸ் போன்ற நகரங்களில் அபு சிம்பெல் கோயில்கள், இரண்டாம் ராமேசஸ் சிலை, ராமேசியம் வளாகங்களை அமைத்தார்.

இரண்டாம் ராமேசஸ் நிறுவிய கிளியோபாட்ராவின் ஊசி எனும் கல்தூபி, பாரிஸ்

இரண்டாம் ராமேசசின் ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடத் தொகுதிகள் பின் வருமாறு;

பார்வோன்களின் அணிவகுப்பு

[தொகு]

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் இரண்டாம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]

பெரும் எகிப்திய அருங்காட்சியகத்தின் நுழைவாயில் மண்டபத்தில் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் சிலை, நவம்பர் 2019

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காணக்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mortuary temple of Ramesses II at Abydos". Archived from the original on 22 December 2008. பார்க்கப்பட்ட நாள் 28 October 2008.
  2. Anneke Bart. "Temples of Ramesses II". Archived from the original on 28 April 2008. பார்க்கப்பட்ட நாள் 23 April 2008.
  3. "Ramses". Webster's New World College Dictionary. (2004). Wiley Publishing. அணுகப்பட்டது 27 April 2011. 
  4. "Rameses". Webster's New World College Dictionary. (2004). Wiley Publishing. அணுகப்பட்டது 27 April 2011. 
  5. Or 1276–1210 BC, according to http://www.9news.com.au/world/2017/10/31/12/35/bible-eclipse-egypt-study-cambridge பரணிடப்பட்டது 31 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம்
  6. Ramses II
  7. 7.0 7.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Hasel, Michael G. 1994. “Israel in the Merneptah Stela," Bulletin of the American Schools of Oriental Research 296, pp. 45–61.
  • Hasel, Michael G. 1998. Domination and Resistance: Egyptian Military Activity in the Southern Levant, 1300–1185 BC. Probleme der Ägyptologie 11. Leiden: Brill Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10984-6
  • Hasel, Michael G. 2003. "Merenptah's Inscription and Reliefs and the Origin of Israel" in Beth Alpert Nakhai (ed.), The Near East in the Southwest: Essays in Honor of William G. Dever, pp. 19–44. Annual of the American Schools of Oriental Research 58. Boston: American Schools of Oriental Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89757-065-0
  • Hasel, Michael G. 2004. "The Structure of the Final Hymnic-Poetic Unit on the Merenptah Stela." Zeitschrift für die alttestamentliche Wissenschaft 116:75–81.
  • James, T. G. H. 2000. Ramesses II. New York: Friedman/Fairfax Publishers. A large-format volume by the former Keeper of Egyptian Antiquities at the British Museum, filled with colour illustrations of buildings, art, etc. related to Ramesses II

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramses II
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ராமேசஸ்&oldid=3848628" இலிருந்து மீள்விக்கப்பட்டது