உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் ஏழாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்
எகிப்தின் ஏழாம் வம்சம்
கிமு 2181–கிமு 2160
தலைநகரம்மெம்பிஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 2181
• முடிவு
கிமு 2160
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]]
[[எகிப்தின் எட்டாம் வம்சம்]]

பண்டைய எகிப்தின் ஏழாம் வம்சம் (Seventh Dynasty of Egypt) கிமு 22-ஆம் நூற்றாண்டின் எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் ந்டைபெற்ற ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கலவரத்தின் போது பண்டைய எகிப்தின் ஏழாம் வம்சத்தினர் பண்டைய எகிப்தை கிமு 2181 முதல் கிமு 2160 முடிய 21 ஆண்டுகள் மட்டுமே ஆண்டனர்.[1] இவ்வம்சத்தவரின் தலைநகரமாக மெம்பிஸ் நகரம் விளங்கியது.

பழைய எகிப்திய இராச்சியத்தின் முடிவில் கிமு 2181 முதல் கிமு 2055 வரையான 125 ஆண்டுகளை பண்டைய எகிப்தின் இருண்ட காலம் என எகிப்தியவில் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த 125 ஆண்டுகளே எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் ஆகும். [2] எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் பண்டைய எகிப்தை ஏழாம் வம்சம், எட்டாம் வம்சம், ஒன்பதாம் வம்சம் பத்தாம் வம்சம் மற்றும் பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன்கள் ஆண்டுகள் ஆண்டனர். எகிப்தின் முதல் இடைநிலக் காலத்தில் பண்டைய எகிப்தை மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து என இரண்டாகப் பிரித்து இரண்டு வம்சங்களின் பார்வோன்கள் ஆண்டனர்.

ஏழாம் வம்ச பார்வோன்கள்[தொகு]

 1. ஜெத்கரே செமாய்
 2. நெபெர்கரே கெண்டு
 3. மெரேன்ஹோர்
 4. நெபெர்கமின்
 5. நிக்கரே
 6. நெபர்கரே டெரெரு
 7. நெபர்கஹோர்
 8. நெபர்கரே பெபிசெனெப்
 9. நெபர்கமின் அனு

பண்டைய எகிப்திய வம்சங்கள்[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
 2. Kathryn A. Bard, An Introduction to the Archaeology of Ancient Egypt (Malden: Blackwell Publishing, 2008), 41.
முன்னர் எகிப்தின் ஏழாம் வம்சம்
கிமு 2181 -கிமு 2160
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்தின்_ஏழாம்_வம்சம்&oldid=3848911" இலிருந்து மீள்விக்கப்பட்டது