நூபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
NubianPharoahs.jpg
எகிப்து மற்றும் நுபியா

நுபியா (/ˈnbiə, ˈnj-/) என்பது நைல் நதிக்கரையில் அமைந்த, எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கும் சூடான் நாட்டின் கர்த்தூம் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இப்பகுதி ஆபிரிக்காவின் முதன்மையான மற்றும் பழமையான ஆற்றங்கரை நாகரீகம் உருவான பகுதி ஆகும்.

தோற்றம்[தொகு]

எகிப்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் புதிய கற்காலம் பகுதியின் ஆரம்ப காலத்தில் நுபியன் மக்கள் தங்கள் குடியிருப்புக்களை வாடி ஹல்பா பகுதியில் சுமார் கிமு 7000 ஆம் ஆண்டுகளில் மத்திய நைல் பள்ளத்தாக்கு பகுதியான இவ்விடத்தில் அமைத்ததாக நம்பப்படுகிறது.[1] இப்பகுதி நுபியா என அழைக்கப்படுகிறது. இது எகிப்திய இராச்சியத்தின் நிர்வாக பகுதியாக இருந்துள்ளது. நுபியாவின் பகுதிகளான கீழ் மற்றும் மேல் நுபியா குஷ் இராச்சியத்தின் பகுதிகளாக இருந்தது. தற்போத உள்ள கர்த்தூம் பகுதியே நுபியா ஆகும்.[2]

நுபியாவின் பிரமிடு

எகிப்திய இராச்சியம் வீழ்ச்சிக்கு பின் எகிப்து பகுதியில் இருந்து நுபியா விடுபட்டது.[3] போர் வீரர்களான நுபியன் மக்கள் வில், அம்பு செய்வதில் வல்லவர்கள் ஆவர்.[4] நடுக்காலம் பகுதியில் நுபியன்கள் கிருத்துவம் மதத்தைத் தழுவி மூன்று நுபியன் இராச்சியங்களை அமைத்தனர். அவை முறையை வடக்கே நோபாடியா, மத்தியில் மகுரியா மற்றும் தெற்கே அலோடியா ஆகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூபியா&oldid=2852857" இருந்து மீள்விக்கப்பட்டது