உள்ளடக்கத்துக்குச் செல்

அலோடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலோடியா
6 ஆம் நூற்றாண்டு முதல்–1500 ஆம் ஆண்டு வரை
A map showing the extent of Alodia in the 10th century
10 ஆம் நூற்றாண்டுகளில் அலோடியா இராச்சியம்
தலைநகரம்சோபா
பேசப்படும் மொழிகள்நுபியன்
கிரேக்கம்
சமயம்
கிருத்துவம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்நடுக்காலம்
• தொடக்கம்
6 ஆம் நூற்றாண்டு முதல்
• அழிப்பு
1500 ஆம் ஆண்டு வரை
முந்தையது
பின்னையது
குஷ் இராச்சியம்
புன்ச் சுல்தானேட்
பௌகில் இராச்சியம்
அல்-அப்வாப் இராச்சியம்
தற்போதைய பகுதிகள் சூடான்

அலோடியா (ஆங்கிலம்:Alodia கிரேக்கம்: Ἀλοδία,[1] அரபு மொழி: علوة‎, Alwa), என்பது நடுக்காலம் பகுதியில் இருந்த நுபியன் இராச்சியம் ஆகும். இந்த இராச்சியம் மத்திய மற்றும் தெற்கு சூடான் பகுதிகளை உள்ளடக்கியது. இராச்சியத்தின் தலைநகரமாக சோபா நகரம் விளங்கியது. இந்த நகரம் நீல மற்றும் வெள்ளை நைல் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கர்த்தூம் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

எழுச்சி[தொகு]

குஷ் இராச்சியம் வீழ்ச்சிக்குப் பின் 6 ஆம் நூற்றாண்டு பகுதிகளில் வளர்ச்சி அடைந்தது. அலோடியா என்ற பெயர் ஏறத்தாழ 569 ஆண்டில் அறியப்பட்டது ஆகும். அலோடியா இராச்சியம் மூன்று நுபியன் இராச்சியம் கிருத்துவ மதத்திற்கு மாறிய பின் 580 ஆம் ஆண்டு எழுச்சி கொண்டது.

வளர்ச்சி[தொகு]

அண்டை இராச்சியங்களான நோபாடியா மற்றும் மகுரியா இராச்சியங்களுடன் நல்ல பிணைப்புடன் இருந்தது. 9 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் இராச்சியத்தின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. இதன் ஆட்சி பகுதி, இராணுவம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் என அனைத்தும் வளர்ச்சி கண்டது. அலோடியா இராச்சியம் பலமிக்க அரசரால் ஆளப்பட்டு மாகாணங்களில் ஆளுநர்கள் அரசரால் பணியில் அமர்த்தப்பட்டனர். இதன் தலைநகர் சோபா ஆகும். மேலும் இந்த நகரம் விலைமதிப்பு மிக்க தங்கம், தோட்டங்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ள இடமாகும்.[2]

வணிகம்[தொகு]

நோபாடியா, மகுரியா, மத்திய கிழக்கு மேற்கு ஆபிரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வணிக தொடர்பில் இருந்தது.[3] இவர்கள் யானை தந்தம், தங்கம், உப்பு [4] மற்றும் உள்நாட்டு உற்பத்தி செய்யும் பொருட்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்தனர்.[5] பட்டு, தோல் மற்றும் பல வெளிநாட்டு உற்பத்தி செய்யும் பொருள் முதலியவற்றை இறக்குமதி செய்தனர்.[6]

கல்வி[தொகு]

மக்கள் நுபியன் மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிகளில் சிறந்து விளங்கினர். சமகாலத்தில் ஆபிரிக்க பழங்குடி மக்களின் மொழிகளும் சில இனக்குழுக்களான மக்கள் பயன்படுத்தினர்.

வீழ்ச்சி[தொகு]

12 ஆம் நூற்றாண்டு பிற்பகுதி மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் இராச்சியம் வீழ்ச்சி கண்டது. குறிப்பாக தெற்கில் இருந்து வந்த ஊடுருவல் மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பிளேக் நோய் தாக்கம் முதலிய காரணங்கள் ஆகும். அரேபியர்கள் நுபியன் பகுதியில் இடம்பெயர்ந்து ஆதிக்க சக்தியாக இருந்தனர். 1500 ஆம் ஆண்டில் புன்ச் மற்றும் அரேபியர்களினால் அலோடியா வீழ்ச்சி கண்டது. இதனால் இங்கு இஸ்லாம் மதம் பெருகியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Patoura-Spanou 2008, ப. 445.
  2. Zarroug 1991, ப. 20.
  3. Werner 2013, ப. 166.
  4. Welsby & Daniels 1991, ப. 334.
  5. Zarroug 1991, ப. 84.
  6. Zarroug 1991, ப. 82.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோடியா&oldid=2772585" இலிருந்து மீள்விக்கப்பட்டது