வெள்ளை நைல்
வெள்ளை நைல் (White Nile) ஆப்பிரிக்காவின் சூடான், உகாண்டா மற்றும் எகிப்து நாடுகளில் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறும் நீல நைல் ஆறுமே நைல் ஆற்றின் முக்கியமான கிளை ஆறுகள் ஆகும்.[1] இந்த ஆற்றின் தண்ணீரில் உள்ள களிமண் படிவுகள் தண்ணீரை வெளிர் நிறமாக மாற்றுவதன் காரணமாக வெள்ளை என்ற பெயர் முன்னொட்டாகச் சேர்ந்துள்ளது.[2]
வெள்ளை நைல் ஆறு விக்டோரியா ஏரியில் உற்பத்தியாகிறது. அங்கு இது விக்டோரியா நைல் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இது முதலில் வடக்காகவும் பின்னர் மேற்கு நோக்கியும் உகாண்டா, கியோகா ஏரி, ஆல்பர்ட் ஏரி ஆகியவற்றின் வழியாகப் பாய்கிறது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளிவரும் பாது இது ஆல்பர்ட் நைல் எனவும் இது சூடான் நாட்டுக்குள் பாயும் போது மலை நைல் எனவும் அழைக்கப்படுகிறது.[3]
பின்னர் இது சூடான் சமவெளிகளில் பாய்ந்து இறுதியில் கார்த்தௌம் என்னும் இடத்தில் நீல நைல் ஆற்றுடன் இணைந்து நைல் ஆறாக உருவெடுக்கிறது. விக்டோரியா ஏரியில் இருந்து கார்த்தௌம் வரை இவ்வாற்றின் நீளம் தோராயமாக 3700 கிலோமீட்டர்கள் ஆகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Elsanabary, Mohamed Helmy Mahmoud Moustafa (2012), Teleconnection, Modeling, Climate Anomalies Impact and Forecasting of Rainfall and Streamflow of the Upper Blue Nile River Basin, Canada: University of Alberta, doi:10.7939/R3377641M, hdl:10402/era.28151
- ↑ The New American Cyclopaedia: A Popular Dictionary of General Knowledge, Volume 12. 1867. p. 362. Archived from the original on 30 March 2023. Retrieved 30 March 2023.
- ↑ Dumont, Henri J. (2009). The Nile: Origin, Environments, Limnology and Human Use. Springer Science & Business Media. pp. 344–345. ISBN 9781402097263. Archived from the original on 30 March 2023. Retrieved 30 March 2023.
- ↑ Penn, James R. (2001). Rivers of the World: A Social, Geographical, and Environmental Sourcebook. ABC-CLIO. p. 299. ISBN 9781576070420. Archived from the original on 30 March 2023. Retrieved 30 March 2023.