மேற்கு
மேற்கு (West) என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் மறையும் திசையைக் குறிக்கும்.
காலையில் கதிரவன் எழும் திசையை நோக்கி நின்று நம் கைகள் இரண்டையும் தோளுயரத்திற்கு உயர்த்தி நின்றால், நம் வலக்கை காட்டும் திசை தெற்கு, இடக்கை காட்டும் திசை வடக்கு, நம் முதுகுப்புறம் மேற்கு. திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வலம் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது
மரபுப்படி ஒரு வரைபடத்தின் இடது பக்கம் மேற்கு ஆகும்.
பலுக்கல்
[தொகு]ஒரு வரைபடத்தில் இடது புறம் இருப்பது மேற்கு திசையாகும். இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். மேற்கு திசை வடக்கு திசையிலிருந்து 270° திசைவில் அமைந்து இருக்கும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://en.wikipedia.org/wiki/Joseph_CampbellThe Mythic Image. https://en.wikipedia.org/wiki/Princeton_University_Press, 1981.
வெளியிணைப்புகள்
[தொகு]- பூமி சுழலும் திசை பரணிடப்பட்டது 2016-03-07 at the வந்தவழி இயந்திரம்
திசைகள் |
---|
கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு |