கிளை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளை ஆறு (Distributary) முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து தனித்தோடும் ஆறு ஆகும். மேடு பள்ளமான பகுதியில் பல சிறிய ஆறுகள்( துணை ஆறுகள்) இணைந்து முதன்மை ஆறு உருவாவது போல் சமமான பகுதியில் முதன்மை ஆறானது பல கிளைகாகப் பிரிந்து சென்று கடலில் கலக்கிறது.இதன் மூலம் செழிப்பான,வேளாண்மைக்கு உகந்த நிலப்பகுதியான டெல்டா (Delta) உருவாகின்றது. கிளை ஆற்றைத் துணை ஆற்றோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.எடுத்துக்காட்டு: பவானி ஆறு,அமராவதி, நொய்யல்,கபினி,அர்க்காவதி போன்றவை காவிரியின் துணை ஆறுகள். கொள்ளிடம்,வெண்ணாறு,அரசலாறு போன்றவை காவிரியின் கிளை ஆறுகள். பல வேளைகளில் கிளை ஆறுகள் காலப் போக்கில் முதன்மை நீரோட்டத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டு அவையே முதன்மை நீரோட்டமாகி விடுதலும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளை_ஆறு&oldid=2529696" இலிருந்து மீள்விக்கப்பட்டது