விக்டோரியா ஏரி

ஆள்கூறுகள்: 1°S 33°E / 1°S 33°E / -1; 33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டோரியா ஏரி
ஆள்கூறுகள்1°S 33°E / 1°S 33°E / -1; 33
முதன்மை வெளியேற்றம்நைல் ஆறு
வடிநிலப் பரப்பு184,000 km2 (71,000 sq mi)
238,900 km2 (92,200 sq mi) basin
வடிநில நாடுகள் தன்சானியா
 உகாண்டா
 கென்யா
குடியேற்றங்கள்புக்கோபா, தான்சானியா
முவான்சா, தான்சானியா
கிசுமு, கென்யா
கம்ப்பாலா, உகாண்டா
என்ட்டெபெ, உகாண்டா

விக்டோரியா ஏரி (Lake Victoria) அல்லது விக்டோரியா நியான்சா என்பது ஆப்பிரிக்காவில் உள்ள மாபெரும் ஏரிகளுள் ஒன்றாகும். கின்யருவாண்டா மொழியிலும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பண்டு மொழிகளிலும் விக்டோரியா ஏரியானது விக்டோரியா நியான்சா என்று அழைக்கப்படுகிறது [1]. யான் ஆனிங் சிபெக் என்ற பிரிட்டனின் தேடல் ஆய்வாளர் இந்த ஏரியைக் கண்டறிந்து ஆவணப்படுத்திய பின்னர் மகாராணி விக்டோரியாவின் பெயரை இதற்கு வைத்தார். நைல் ஆற்றின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்கு ரிச்சர்ட் பிரான்சிசு பர்ட்டனுடனான ஒரு பயணத்தின் போது 1858 ஆம் ஆண்டில் சிபெக் இதை நிறைவேற்றினார் [2][3].

விக்டோரியா ஏரியின் பரப்பளவு 68,800 சதுர கிலோமீட்டர்கள் ஆகும் [4][5]. பரப்பளவின் அடிப்படையில் இதுவே இக்கண்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். மேலும் உலகின் வெப்பமண்டலத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியும் [6], வட அமெரிக்காவின் சுப்பிரியர் ஏரிக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரி விக்டோரியா ஏரியாகும். கொள்ளளவு அடிப்படையில் 2,750 கனகிலோமீட்டர்கள் [7] கொண்ட இந்த ஏரி உலக அளவில் ஒன்பதாவது மிகப்பெரிய கண்ட ஏரியாகக் கருதப்படுகிறது.

நேரடியான மழை மற்றும் ஆயிரக்கணக்கான சிறு நீரோடைகளிலிருந்து விக்டோரியா ஏரி அதன் தண்ணீரைப் பெறுகிறது. மிகப்பெரிய நதியான ககெரா ஆறு இந்த ஏரியின் மேற்குக் கரையில் வந்து கலக்கிறது. விக்டோரியா ஏரியின் வடக்குக் கரையில் உகாண்டாவின் யிஞ்ஞசாவுக்கு அருகில் , நைல் ஆற்றில் தண்ணீரை விடுவிக்கிறது [4].

விக்டோரியா ஏரியின் அதிகபட்ச ஆழம் 84 மீட்டர்களாகவும் இதன் சராசரி ஆழம் 40 மீட்டர்கள் ஆகவும் உள்ளது [8]. இதன் ஆழமற்ற பகுதி ஆப்பிரிக்காவில் பரந்து விரிந்துள்ளது. விக்டோரியா ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி மொத்தம் 184000 கிலோமீட்டர்களாகும். 7142 கிலோமீட்டர்கள் அளவுக்கு நீண்ட கடற்கரையை கொண்டுள்ள இவ்வேரி 1:25000 மட்டத்தில் எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளது [9]. இந்நீளத்தில் 3.7 சதவீதம் அளவுக்கு தீவுகளைக் கொண்டு மூன்று நாடுகளுக்காக பிரிக்கப்பட்டுள்ளது [10]. கென்யா 6%, உகாண்டா 45 சதவீதம், தான்சானியா 49 சதவீதம் என்ற அளவுகளாக இப்பங்கீடு அமைகிறது [11].

நிலவியல்[தொகு]

நிலவியல் ரீதியாக, விக்டோரியா ஏரி ஒப்பீட்டளவில் இளம் வயது கொண்டதாக உள்ளது. சுமார் 400,000 ஆண்டுகள் பழமையானதாகவும் உள்ளது. மேலெழுந்த புவியோட்டுத் தொகுதி மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளைத் தடுத்தபோது விக்டோரியா ஏரி உருவாகியதாகக் கருதப்படுகிறது [12]. விக்டோரியா ஏரியின் புவியியல் வரலாற்றில், இது மிகச் சிறிய ஏரிகளின் தொடராக பலமாற்றங்களைக் கண்டு இதன் தற்போதைய மேலோட்டமான ஆழம் நிகழ்ந்திருக்கலாம் [10]. ஏரியின் கீழ்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புவி உள்ளகத்தின் ஆய்வின்படி, விக்டோரியா ஏரி உருவான காலத்திலிருந்து குறைந்தபட்சம் மூன்று முறையாவது முற்றிலும் வறண்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது[12]. உலகளாவிய அளவில் மழைப்பொழிவு சரிந்திருந்த பனியுகக் காலப்பகுதியில் இவ்வுலர் சுழற்சிகள் ஒருவேளை நிகழ்ந்தவையாக இருக்கலாம் [12]. கடைசியாக கிட்டத்தட்ட 17300 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வேரி முற்றிலுமாக உலர்ந்திருக்கலாம். 14700 ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் இது நிரம்பியிருக்கலாம் [13].

நீரியல்[தொகு]

விக்டோரியா ஏரி தனது 80 சதவீத நீருக்கு மழையையே நம்பியிருக்கிறது[10]. ஒரு வருடத்துக்கு சராசரியாக 2 முதல் 2.2 மீட்டர் அளவுக்கு ஏரி நீர் ஆவியாகிறது. இடைநிலப் பகுதிகளில் ஏற்படும் பனிப்பொழிவைக் காட்டிலும் இது இரண்டு மடங்காகும்[14]. சியோ, நோசியா, யலா, நிண்டோ, சோன்டு மிரியு, மோகுசி, மிக்ரி போன்ற ஏழு சிறு நதிகள் விக்டோரியா ஏரிக்கு நீரை வழங்குகின்றன. மேற்கில் இருந்து கடந்து செல்லும் மிகப்பெரிய ஒற்றை நதியான ககேரா நதி வழங்கும் நீரைக்காட்டிலும் இந்த சிற்றாறுகள் இணைந்து விக்டோரியா ஏரிக்கு மிக அதிகமாக நீரை வழங்குகின்றன [15]

விடோரியா ஏரியும், பெரும் பிளவுப் பள்ளத்தாக்கும்

விக்டோரியா நதியிலிருந்து வெளியே செல்லும் நீர்தான் நைல் நதியின் முக்கிய மூலமாகும். ஏரியால் வழங்கப்படும் தண்ணீரின் அளவை கணக்கிட்டால் இவ்வேரியே நைல் நதிக்கான பிரதானமான மூலமாக அறியப்படுகிறது. உகாண்டாவிற்கு அருகிலுள்ள யின்சாவுக்கு அருகில் இது நைல்நதியுடன் சேர்கிறது. இருப்பினும் ககேரா நதியின் கிளை நதிகளும் இந்த ஏரிக்கு நீர் வழங்கும் மூலங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் நைல் நதி ஆல்பர்ட் ஏரியை அடையும் வரை விக்டோரியா நைல் என்றே அழைக்கப்படுகிறது.

கடலடி இயல்[தொகு]

விக்டோரியா ஏரி பொதுவாக ஆழம் குறைந்த ஏரி என்றே கருதப்படுகிறது. இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 80 மீட்டராகவும் சராசரி ஆழம் 40 மீட்டராகவும் உள்ளது [16]. 2016 ஆம் ஆண்டு எண்ணிம முறையில் 10,000 புள்ளிகளை கொண்டு விக்டோரியா ஏரியின் முதல் கடலாடி இயல் வரைபடம் தயாரிக்கப்பட்டது.

உயிரினங்கள்[தொகு]

விக்டோரியா ஏரியும் அதன் சுற்றுப்புறங்களும் பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. . குறிப்பாக நீர்யானை, நீர்நாய்கள், நைல் முதலைகள், பலவகையான ஆமைகள், நன்னீர் நண்டுகள் போன்றவை அதிக அளவில் விக்டோரியா ஏரியில் வாழ்கின்றன [17].

மீன்கள்[தொகு]

விக்டோரியா ஏரியில் மட்டுமே காணப்படும் பலவகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் பலவும் கடந்த 50 ஆண்டுகளில் அழிவுறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. விக்டோரியா ஏரியில் 500 க்கும் மேற்பட்ட சிச்லிட் வகை மீன்கள் உள்ளன.

மீன்பிடித்தொழில்[தொகு]

விக்டோரியா ஏரி மிக அதிக அளவுக்கு உள்நாட்டு மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் விக்டோரியா ஏரியில் தனித்து விளங்கும் மீன்கலான சிச்லிட் போன்றவையே அதிக அளவில் பிடிக்கப்பட்டது. ஆனால் சிச்லிட் போன்றவை 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியிலேயே அதீதமீன்பிடித்தல் காரணமாக குறைய தொடங்கிவிட்டன. மீன் எண்ணிக்கையை அதிகரிக்க விக்டோரியா ஏரிக்கு சொந்தமில்லாத சில மீன் இனங்கள் அறிமுகப்பட்டன.

கோரைபுற்கள்[தொகு]

நீர் கோரைகள் விக்டோரியா ஏரியில் அதிக அளவு வளர்ந்துள்ளன. இதற்கு காரணம் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுகள், ஆலை மற்றும் விவசாய குப்பைகள் அதிகஅளவில் ஏரியில் நேரடியாக சேர்க்கப்படுவதே காரணம். ஏரியில் கொட்டப்படும் கழிவுகள் ஏரியில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் அளவை உயர்தின. இதனால் நீர் கோரைகள் விக்டோரியா ஏரியை அதிக அளவு ஆக்கிரமிக்க துவங்கின. [18]

நீர் கோரைகளால் மீன் பிடி தொழில் பாதித்தது. அதே போல் நீர்மின் நிலையமும், விக்டோரியா ஏரியில் நீரெடுக்கும் ஆலைகளும் பாதிக்கப்பட்டன. ஆனால் நீர் கோரைகளால் சில நன்மைகளும் விளைந்தன. குறிப்பாக அழிந்துவிட்டதாக நம்பட்ட சில மீன் இனங்கள் மீண்டும் விக்டோரியா ஏரியில் காணதொடங்கின. அதீத நீர் கோரைகள் அதிக அளவில் மீன்பிடித்தலை தடுத்தன. கோரைகளை நீக்க பலவழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாலுபால் அணை[தொகு]

விக்டோரியா நைலை உருவாக்குகின்ற உகாண்டாவில் உள்ள யின்சா மட்டுமே விக்டோரியா ஏரியிலிருந்து நீரை வெளியேற்றும் ஒரே வழியாக உள்ளது. குறைந்தது 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்த நீர் ஒரு இயற்கையாக அமைந்த பாறை மதகு மூலம் முழுவதுமாக உலர்ந்து போனது. 1952 ஆம் ஆண்டில், பிரித்தானிய உகாண்டா அரசாங்கத்திற்காக செயல்படும் பொறியியலாளர்கள், வனத்தின் கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தவும், பாறை மதகின் படிப்படியான அரிப்பைக் குறைக்கவும் ஒரு செயற்கை தடையை உருவாக்கினர். ஏரியின் நீரின் அளவைப் பொறுத்து, "ஏற்றுக் கொண்ட வளைவு" என்று அழைக்கப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒரு வினாடிக்கு 300 முதல் 1,700 கன மீட்டர் அளவிலான அதிகபட்ச ஓட்ட விகிதத்தை இவ்வமைப்பு வழங்கியது.

2002 ஆம் ஆண்டில் உலக வங்கி உதவியுடன், கியிரா நீர்மின் மின் நிலையம் என்ற இரண்டாவது நீர்மின்சக்தி வளாகம் ஒன்றை நிறைவு செய்தது. 2006 ஆம் ஆண்டில் விக்டோரியாவின் நீர் அளவு 80 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக இருந்தது, கென்யாவிலுள்ள நைரோபியில் வசிக்கும் ஒரு சுயாதீன நீர்வாழ்வியலாளரான டேனியல் குல் உடன்படிக்கையின் கீழ் [19] அனுமதிக்கப்பட்டுள்ளதை விட இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் வெளியிடப்படுவதைக் கணக்கிட்டார். ஏரியின் மட்டத்தில் ஏற்படும் சமீபத்திய நீர்குறைவுக்கு இதுவே முதன்மையான காரணம் என்றும் கருதப்பட்டது.

மாசடைதல்[தொகு]

ஏரிக்குள் கச்சா கழிவுகளை வெளியேற்றுவதும், உள்நாட்டு மற்றும் தொழில்துறை கழிவுகளை உறிஞ்சுவதும், பண்ணைகளில் இருந்து வெளியேறும் உரங்களுக்கும் இரசாயனங்களுமே விக்டோரியா ஏரி மாசடைவதற்கான முக்கிய காரணங்களாகும்.

விக்டோரியா ஏரியின் வடிநிலத்தில் பொதுவாக கிராமப்புற மக்கள் நிரம்பியுள்ளார்கள். குறிப்பாக ஏரியின் கரையோரங்களில் முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்கள் உள்ளன. கியுமு, கிசி, மற்றும் கென்யாவின் ஓமா பே , உகாண்டாவின் கம்பாலா, யின்சா மற்றும் எண்டெப்; மற்றும் தான்சானியாவின் புக்கோபா, முவான்சா முசோமா உள்ளிட்ட நகரங்கள் இதில் அடங்கும். இந்த நகரங்கள் மற்றும் நகரங்கள் உள்ள தொழிற்சாலைகள் நேரடியாக விக்டோரியா ஏரியில் அல்லது அதன் கிளை ஆறுகளில் கழிவுகளை நேரடியாக்ச் சேர்க்கின்றன [20].

சுற்றுச்சூழல் தரவுகள்[தொகு]

2016 ஆம் ஆண்டில் விக்டோரியா ஏரிக்கு ஒரு சுற்றுச்சூழல் தரவு தொகுப்பிடம் உருவானது. இந்த தரவில் கடற்கரை, கடலடியியல், மாசு, வெப்பநிலை, காற்று திசையன், மற்றும் ஏரி மற்றும் பரந்த வடிநிலங்கள் தொடர்பான தரவுகள் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Victoria Nyanza. The Land, the Races and their Customs, with Specimens of Some of the Dialects". World Digital Library. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
  2. Dalya Alberge (11 September 2011). "How feud wrecked the reputation of explorer who discovered Nile's source". The Observer. பார்க்கப்பட்ட நாள் 29 December 2013.
  3. Moorehead, Alan (1960). "Part One: Chapters 1–7". The White Nile. Harper & Row. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-06-095639-9. https://archive.org/details/whitenile0000moor_d0v5. 
  4. 4.0 4.1 vanden Bossche, J.-P.; Bernacsek, G. M. (1990). Source Book for the Inland Fishery Resources of Africa, Issue 18, Volume 1. Food and Agriculture Organization, United Nations. பக். 291. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:92-5-102983-0. https://books.google.co.uk/books?id=WLZRxM9vfXoC&pg=PA291. பார்த்த நாள்: 4 January 2016. 
  5. Fishnet, Lake Victoria, Vector Polygon, ~2015 - LakeVicFish Dataverse. doi:10.7910/dvn/lrshef. https://dataverse.harvard.edu/citation?persistentId=doi:10.7910/DVN/LRSHEF. 
  6. Peter Saundry. "Lake Victoria".
  7. Holtzman J.; Lehman J. T. (1998). "Role of apatite weathering in the eutrophication of Lake Victoria". in John T. Lehman. Environmental Change and Response in East African Lakes. Springer Netherlands. பக். 89–98. doi:10.1007/978-94-017-1437-2_7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-94-017-1437-2. 
  8. United Nations, Development and Harmonisation of Environmental Laws Volume 1: Report on the Legal and Instituional Issues in the Lake Victoria Basin, United Nations, 1999, page 17
  9. Shoreline, Lake Victoria, vector line, ~2015 - LakeVicFish Dataverse. doi:10.7910/dvn/5y5ivf. https://dataverse.harvard.edu/citation?persistentId=doi:10.7910/DVN/5Y5IVF. 
  10. 10.0 10.1 10.2 C. F. Hickling (1961). Tropical Inland Fisheries. London: Longmans. https://archive.org/details/tropicalinlandfi0000hick. 
  11. J. Prado, R. J. Beare, J. Siwo Mbuga & L. E. Oluka, 1991. A catalogue of fishing methods and gear used in Lake Victoria. UNDP/FAO Regional Project for Inland Fisheries Development (IFIP), FAO RAF/87/099-TD/19/91 (En). Rome, Food and Agricultural Organization.
  12. 12.0 12.1 12.2 John Reader (2001). Africa. Washington, D. C.: National Geographic Society. பக். 227–228. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7922-7681-7. https://archive.org/details/africa0000read. 
  13. Verheyen, Salzburger, Snoeks, and Meyer (2003). Origin of the Superflock of Cichlid Fishes from Lake Victoria, East Africa. Science 300: 325—329.
  14. Simeon H. Ominde (1971). "Rural economy in West Kenya". in S. H. Ominde. Studies in East African Geography and Development. London: Heinemann Educational Books Ltd.. பக். 207–229. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-02073-1. https://books.google.com/books?id=WgamvCA98usC&pg=PA220. 
  15. P. J. P. Whitehead (1959). "The river fisheries of Kenya 1: Nyanza Province". East African Agricultural and Forestry Journal 24 (4): 274–278. 
  16. "LV_Bathy". faculty.salisbury.edu. பார்க்கப்பட்ட நாள் 24 October 2016.
  17. Kingdon, J. (1997). The Kingdon Guide to African Mammals. Academic Press Limited, London. ISBN 0-12-408355-2.
  18. https://www.britannica.com/place/Lake-Victoria
  19. Fred Pearce (9 February 2006). "Uganda pulls plug on Lake Victoria". New Scientist 2538: 12. http://www.newscientist.com/article.ns?id=mg18925384.100. பார்த்த நாள்: 14 ஜூன் 2017. 
  20. "Water Hyacinth Re-invades Lake Victoria". Image of the Dat (நாசா). February 21, 2007. http://earthobservatory.nasa.gov/IOTD/view.php?id=7426. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியா_ஏரி&oldid=3580895" இலிருந்து மீள்விக்கப்பட்டது