தோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தோல் படலங்கள்: மேற்றோல், உட்தோல், அடித்தோல்
மயிர், வியர்வைச் சுரப்பி & எண்ணெய்ச் சுரப்பி

தோல் எனப்படுவது விலங்குகளின், குறிப்பாக முதுகெலும்பிகளில் காணப்படும் உயிர் இழையங்களாலான வெளிப்புற உறை ஆகும். புறவுறைத் தொகுதியின் மிகப்பெரிய உறுப்பான தோல், பல்வேறு இழையப் படலங்களினால் ஆனது. இது அதன் பின்னுள்ள, தசைகள், எலும்புகள், தசைநார்கள், உள்ளுறுப்புக்கள் என்பவற்றைப் பாதுகாக்கின்றது. தோல், சூழலுடனான உடலின் இடைமுகமாக விளங்குவதால், உடலைக் கிருமிகளில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வெப்பக்காப்பு, வெப்பநிலை கட்டுப்பாடு, தொட்டுணர்வு, உயிர்ச்சத்து டி இன் தொகுப்பு, உயிர்ச்சத்து பி ஐப் பாதுகாத்தல், என்பன இதன் பிற செயற்பாடுகள் ஆகும். அதிகம் சிதைவடைந்த தோல் புதிய தோலை உருவாக்குவதன் மூலம் குணமடைய முயற்சிக்கிறது. இத் தோல் பெரும்பாலும் அதன் நிறத்தை இழந்து காணப்படும்.

மனிதக் குழுக்களிடையே தோல் நிறம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. தோலின் மேற்பரப்பு பொதுவாக எண்ணெய்ப் பற்றுக் கொண்டதாக உள்ளது, இது பனிக்காலம், வயதுமுதிர்ச்சி போன்ற சில சந்தர்ப்பங்களில் வறண்டதாகவும் காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்&oldid=2095840" இருந்து மீள்விக்கப்பட்டது