நிறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்வேறு நிறங்கள் தீட்ட நிறக்குச்சிகள் (நிறப் பென்சில்கள்)

நிறம் என்பது, ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கையினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு காட்சி விளைவு ஆகும்.

வானவில்.

புவியைப் பொறுத்தவரை சூரியனே ஒளியின் முதன்மையான மூலம் ஆகும். சூரிய ஒளி வெள்ளை நிறமாகக் காணப்பட்டாலும், அது ஏழு நிறங்களின் கலவை ஆகும். இயற்கையில் வானவில் தோன்றும் போது இந்த ஏழு நிறங்களும் பிரிவடைந்து தோன்றுவதைக் காணமுடியும். பட்டகத்தின் ஊடாக வெள்ளொளியைச் செலுத்தி இதே விளைவைப் பெறமுடியும்.

இயற்பியலில் நிறம்[தொகு]

கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலுள்ள நிறங்கள்.

நிறம் அலை நீள இடைவெளி அதிர்வெண் இடைவெளி
சிவப்பு ~ 625-740 nm ~ 480-405 THz
செம்மஞ்சள் ~ 590-625 nm ~ 510-480 THz
மஞ்சள் ~ 565-590 nm ~ 530-510 THz
பச்சை ~ 500-565 nm ~ 600-530 THz
இளநீலம் ~ 485-500 nm ~ 620-600 THz
நீலம் ~ 440-485 nm ~ 680-620 THz
ஊதா ~ 380-440 nm ~ 790-680 THz

Continuous optical spectrum
Spectrum441pxWithnm.png
Designed for monitors with gamma 1.5.

Computer "spectrum"
Computerspectrum.png
The bars below show the relative intensities of the three
colors mixed to make the color immediately above.

கதிரவனிலிருந்து புவியை நோக்கி வரும் கதிர் வீச்சின் ஒரு சிறு பகுதி மட்டுமே பூமியின் மேற்பரப்பை அடைய முடிகின்றது. அவற்றுள்ளும் ஒரு சிறிய பகுதி மட்டுமே கண்ணிற்குத் தெரியக்கூடிய ஒளியாகும். இவ்வாறு கண்ணுக்குப் புலப்படக்கூடிய கதிர்கள் 400 தொடக்கம் 700 நானோ மீட்டர் அலை நீள வீச்சினுள் அடங்கியவை. இதனுள் அடங்கும் வெவ்வேறு அலை நீளம் கொண்ட ஒளிக் கதிர்கள் கண்ணில் வெவ்வேறு நிறப் புலனுணர்வுகளை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தன. இந்த வீச்சின் ஒரு முனையில் சிவப்பு நிற ஒளியும், மறு முனையின் ஊதா நிறமும் உள்ளன[1].

நிறப் புலனுணர்வு[தொகு]

பொருட்கள் வெளிவிடுகின்ற அல்லது தெறிக்கின்ற ஒளிக் கதிர்கள் கண்ணுக்குள் சென்று அங்குள்ள விழித் திரையில் விழுகின்றன. இத் திரை கட்புலன் உணர்வுக்குரிய நரம்பு முனைகளைக் கொண்டுள்ளது. சுமார் --- மில்லியன்கள் எனக் கணக்கிடப் பட்டுள்ள இந் நரம்பு முனைகள் இரண்டு வகைப்படுகின்றன. இவை கூம்புகள் என்றும் கோல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் கூம்புகளே நிறப் புலனுணர்வுக்கு அடிப்படையானவை. பல்வேறு நிறங்களையும் வேறுபடுத்தி உணரும் வகையில் கூம்புகள் மூன்று வகைகளாக அமைந்துள்ளன. ஒரு வகை சிவப்பு நிறத்துக்குரிய ஒளியை உணரவல்லது. ஏனைய இரண்டு வகைகளும் பச்சை, நீலம் ஆகிய நிறங்களை உணரக்கூடியன. இதனால் இம் மூன்று வகைக் கூம்புகளுக்கும் சிவப்புக் கூம்பு, பச்சைக் கூம்பு, நீலக் கூம்பு எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இவ்வாறு மனிதக் கண்களால் உணரப்படுகின்ற அடிப்படையான மூன்று நிறங்களே முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன.

பொருளின் நிறம்[தொகு]

ஒரு பொருளின் நிறம் அப்பொருள் இருக்கும் சூழலை பொருத்தும் நமது கண் உள் வாங்கும் ஒளியின் விகிதாச்சாரத்தை முன்னிட்டும் அமையும்.சில நேரங்களில் ஒரே நிறங்களும் வெவ்வேறு நிறங்களாக காட்சிப்பிழையாக தோன்றும்.

நிறப்பார்வையின் கோட்பாடுகள்[தொகு]

ச்

அரிஸ்டாட்டில் மற்றும் பிற பண்டைய விஞ்ஞானிகள் ஏற்கனவே ஒளி மற்றும் நிற பார்வை பற்றிய இயல்புகளை எழுதியிருந்த போதிலும், அதைஉணர்வின் ஆதாரமாக வண்ண ஒளி பிறக்கிறது என்றே நம்பினர். ஸர் ஐசக் நியூட்டன் , 1672ல் கோதே நிறங்கள் பற்றிய அவரது விரிவான கோட்பாட்டை பதிப்பித்தார்.அதுவே நிறங்கள் பற்றிய அடிப்படை அறிவியலுக்கு வழிவகுத்தது.

நியூட்டன் கருத்தின்படி, வெள்ளை ஒளி, அனைத்து வண்ணங்கள் உள்ள கலவை ஆகும். அது ஒரு முப்பட்டை கண்ணாடி வழியாக கடந்து செல்லும் போது நிறங்கள் வெவ்வேறு கோணங்களில் கலைந்து நிறமாலை உறுவாகிறது,

ஆகவே, நிறங்கள் வெள்ளை ஒளியில் மட்டுமே உள்ளன என்பதை அவர் நிரூபித்தார்.

முதன்மை நிறங்கள்[தொகு]

முதன்மை நிறங்களும் அவற்றின் விகிதாச்சாரத்தில் உருவாகும் வேறு நிறங்களும்

சிவப்பு, பச்சை , நீலம் ஆகிய மூன்று நிறங்களும் முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன. இம் மூன்று நிறங்களையும் உரிய விகிதங்களில் கலப்பதன் மூலம் வேண்டிய நிறங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பட்டகமும் ஒளியும்[தொகு]

ஐன்ஸ்டினுக்கு முந்தய அறிஞர்கள் யாவரும் வெள்ளொளி நிறமற்றது எனவே நம்பிக்கொண்டிருந்தனர்.மேலும் வெள்ளொளி நிறமற்றது பட்டகத்தில் உள்ள ஒளிகளே அவற்றை உருவாக்குகின்றன என்று நம்பினர்[2].ஐன்ஸ்டின் தனது ஒளியின் இரட்டைத்தன்மை கோட்பாட்டை வெளியிட்ட பின் ஹைஜன் ஒளியிணை ஆராய்ந்து , வெள்ளொளி பல நிறங்களையுடைய ஒளிகளின் கூட்டு ஒளி என நிறுபித்தார்.அதன் பின் பட்டகம் ஒளியிணைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவின[3].மழை பெய்யும் போது மழைத்துளி பட்டகமாக செயல்பட்டு வெள்ளொளியில் உள்ள நிறங்களைப் பிரிக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Craig F. Bohren (2006). Fundamentals of Atmospheric Radiation: An Introduction with 400 Problems. Wiley-VCH. ISBN 3-527-40503-8. http://books.google.com/?id=1oDOWr_yueIC&pg=PA214&lpg=PA214&dq=indigo+spectra+blue+violet+date:1990-2007. 
  2. "The Discovery of the Spectrum of Light". பார்த்த நாள் 19 December 2009.
  3. F. J. Duarte and J. A. Piper (1982). "Dispersion theory of multiple-prism beam expanders for pulsed dye lasers". Opt. Commun. 43: 303–307. doi:10.1016/0030-4018(82)90216-4. Bibcode: 1982OptCo..43..303D. 

வெளியிணைப்புகள்[தொகு]

இணைய நிறங்கள் கருப்பு சாம்பல் வெள்ளி வெள்ளை சிவப்பு அரக்கு ஊதா fuchsia பச்சை குருத்து இடலை மஞ்சள் செம்மஞ்சள் நீலம் கருநீலம் கிளுவை அஃகம்
 
நிறம், அலைநீள்ம்,அதிர்வெண் மற்றும் ஒளியின் ஆற்றல்
Color

(nm)

(THz)

(μm−1)

(eV)

(kJ mol−1)

அகச்சிவப்பு >1000 <300 <1.00 <1.24 <120
சிவப்பு 700 428 1.43 1.77 171
ஆரஞ்சு 620 484 1.61 2.00 193
மஞ்சள் 580 517 1.72 2.14 206
பச்சை 530 566 1.89 2.34 226
நீலம் 470 638 2.13 2.64 254
ஊதா 420 714 2.38 2.95 285
அருகிலிருக்கும் புற ஊதா கதிர்கள் 300 1000 3.33 4.15 400
தூர புற ஊதா கதிர்கள் <200 >1500 >5.00 >6.20 >598
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறம்&oldid=2229308" இருந்து மீள்விக்கப்பட்டது