தசை மண்டலம்
தசை மண்டலம் | |
---|---|
மனித தசைகள் முன்பக்கத் தோற்றம். 19 ஆம் நூற்றாண்டு விளக்கப்படம். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | சிஸ்டமா மஸ்குலாரே |
TA98 | A04.0.00.000 |
TA2 | 1974 |
FMA | 72954 |
உடற்கூற்றியல் |
தசை மண்டலம் (Muscular system) என்பது எலும்பு, வாியற்ற தசை மற்றும் இதய தசை ஆகிய உறுப்புகள் சேர்ந்ததாகும். தசைமண்டலமானது, உடல் இயக்கத்திற்கும், உடல் அமைப்பிற்கும் மற்றும் இரத்த ஓட்டமானது உடல் முழுவதும் பாய்வதற்கும் பயன்படுகிறது. முதுகெலும்புடைய உயிாினங்களின் தசை மண்டலமானது நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது; இருந்த போதிலும் சில தசைகள் தன்னிச்சையாக இயங்கக்கூடியதாக உள்ளது. எலும்பு மற்றும் தசை மண்டலம் இரண்டும் சேர்ந்து தசை-எலும்பு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இது மனித உடலின் இயக்கத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
தசைகள்
[தொகு]தசை மண்டலமானது மூன்று தனித்துவமான வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன, எலும்புத் தசைகள், வரியற்ற தசைகள் மற்றும் இதய தசை ஆகும். உடலுக்கு வலிமை, சமநிலை, தோற்ற அமைப்பு, உடல் இயக்கம் மற்றம் தட்பவெப்பத்தையும் கொடுத்து பாதுகாக்கிறது.[1][2]
எலும்புத் தசை
[தொகு]எலும்புத் தசை மற்ற வரித்தசையைப் போன்றது. இது மையோசைட் மற்றும் தசைநார்களால் ஆனது. வரித் தசைகள் எலும்புடன் இணைந்துள்ளதால் இவை எலும்புத் தசைகள் எனப்படுகிறது. மையோபைபிரில்கள் இணைந்து சார்கோமியர்கள் ஆகின்றன. இவைதான் வரித்தசைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. செயல்பாட்டுதிறனின் துாண்டலின் காரணமாக, எலும்புத் தசைகள் சுருங்கி சார்க்கோமியர்கள் சிறிதாகிறது. இவை இணைந்து செயல்படுகிறது. நகரும் இழை மாதிரி தான் தசை சுருங்குவது குறித்த சிறந்த மாதிரியாக நன்கு புறிந்து கொள்ள முடிகிறது. சார்கோமியரில் ஆக்டின் மற்றும் மையோசின் இழைகள் ஒன்றுக்கொன்று சுருங்கும் அசைவினைச் செய்கின்றன. மையோசின் இழைகள் கிளப் போன்ற தலையமைப்பைக் கொண்டது. இதில் ஆக்டின் இழைகள் வெளித் தள்ளிக் கொண்டு இருக்கும்.[3] பெரிய அமைப்பான மையோசின் இழைகள் மையோசின் தலைகள் எனப்படும். இதில் இணையக்கூடிய சில புள்ளிகள் காணப்படுகின்றன. இதிலும் ஆக்டின் இழைகள் தான் உள்ளன. மையோசின் தலைகள், இணைந்து செயல்படக் கூடிய விதத்தில் உள்ளது. அவை சார்கோமியரின் நடுப்பகுதியை நோக்கி ஊசலாடிக் கொண்டிருக்கும். பின்பு, அவை அதிலிருந்து பிரிந்து அடுத்த பக்கத்திலுள்ள இயங்கக்கூடிய பகுதியான ஆக்டின் இழைகளில் போய் ஒட்டிக் கொள்ளும் இது தான் ராட்ச் வகையான இயங்கி அமைப்பு எனப்படுகிறது. இந்த செயல்பாடு நடைபெற அதிக அளவிலான அடினோசின் 3 பாஸ்பேட்(ATP) சக்தியை செல் உட்கொள்ளிறது. ஏடிபியானது மையோசின் தசைகள் மற்றும் ஆக்டின் இழைகளுக்கு இடையே சாய்வாக இணைந்துள்ளது. இதில் சக்தியானது இழக்கப்படும் போது மையோசின் தலைகள் தனித்து விடப்பட்டு ஊசலாடுகின்றன. அப்பொழுது ஏடிபியானது உபயோகப்படுத்தப்பட்டு அடினோசின் 2 பாஸ்பேட்டாக (ADP) மாற்றப்படுகிறது. இருந்த போதிலும் தசைகளானது சிறிதளவு ஏடிபியை சேமித்து வைக்கின்றது. பின்பு இவை முழுவதுமாக அடினோசின் 2 பாஸ்பேட்டாக மாற்றப்படுகிறது. தசைத் திசுக்களில் அதி விரைவாக செயல்படக் கூடிய வேதிப்பொருட்களும், கிரியேட்டின் பாஸ்பேட்டும் உள்ளது. இவை மிக வேகமாக செயல்பட்டு அடினோசின் 2 பாஸ்பேட்டை, அடினோசின் 3 பாஸ்பேட்டாக மாற்றுகிறது.[2] சார்கோமியரின் ஒவ்வொரு சுழற்சிக்கும் கால்சியம் அயனிகள் தேவைப்படுகிறது. கால்சியமானது சார்கோபிளாஸ்மிக் ரெடிகுலத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சார்கோமியருக்குள் செல்கிறது. அப்பொழுது தசையானது துாண்டப்பட்டு சுருங்குகிறது. இங்கு கால்சியமானது ஆக்டினுடைய பிணைப்புப் பகுதியிைனை மூடுவதில்லை. தசையானது நீண்ட நேரம் சுருங்கியிருக்க வேண்டிய தேவையில்லாதபொழுது, கால்சியம் அயனிகள், சார்கோமியரிலிருந்து பீச்சியடிக்கப்பட்டு மீண்டும் சார்கோபிளாஸ்மிக் ரெடிகுலத்தில் சேமிக்கப்படுகிறது.
இதய தசை
[தொகு]இதய தசையானது எலும்புத் தசையிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. தசை நார்கள் பக்கவாட்டில் ஒன்றுக்கொண்று இணைக்கப்பட்டுள்ளது. இது வரியற்ற தசை போன்றுவுள்ளது. அதன் இயக்கமானது தன்னிச்சையான இயக்கமாகும். இதயத் தசையானது சைனஸ் முடிச்சால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது தானியக்க நரம்பு மண்டலத்தின் துண்டுதலால் இயங்குகிறது.
வரியற்ற தசை
[தொகு]வரியற்ற தசையில் கட்டுப்பாடான சுருங்குவதற்கான அமைப்பு இல்லை. வரியற்ற தசை மென்மையான, எளிதான இயக்கு தசை என்றும் கூறுவர். இத்தசைகள் செரிமானப் பாதையின் சுவர்கள், குருதி நாளங்கள், சிறுநீரக தோற்றப் பாதைகள், தோல் ஆகியவற்றில் காணப்படுகின்றன. உட்புறச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த இவ்வகையான தசைச் சுருக்கம் தேவைப்படுகிறது. இது கெட்டுவிட்டால் உடல் சீரமைப்பு கெட்டுவிடும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.innerbody.com/image/musfov.html
- ↑ 2.0 2.1 https://www.livescience.com/26854-muscular-system-facts-functions-diseases.html
- ↑ ww.innerbody.com/image/musfov.html
- ↑ பேராசிாியர். எம்.எஸ்.கோவிந்தசாமி (2007). "தசை". அறிவியல் களஞ்சியம் தொகுதி - 11 11. Ed. நே.ஜோசப். தஞசாவுர்: தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு: 234. 346. அணுகப்பட்டது 17 மே 2018.