மாந்தர்களின் தோல் நிறம்
மாந்தர்களின் தோல் நிறம் (human skin color) அடர் பழுப்பு நிறத்திலிருந்து மிதமான இளஞ்சிவப்பு-வெள்ளை நிறங்கள் வரை பலவிதங்களில் உள்ளன. தோல் நிறங்களில் வேறுபாடு உள்ளதற்கான காரணம் இயற்கைத் தேர்வே. முக்கியமாக உயிர்வேதியியல் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தோலை ஊடுருவும் புற ஊதாக்கதிர்களை ஒழுங்கு முறைப்படுத்தவே தோலில் நிறமாற்றத்திற்கான பரிணாமம் நிகழ்ந்தது[1].
பல விதமான காரணிகளால் மனிதனுடைய தோல் நிறம் முடிவு செய்யப்பட்டாலும், முக்கிய காரணியாக இருப்பது மெலனின் எனும் நிறமியாகும்[2]. மெலனின் தோலின் உட்புறத்தில் இருக்கும் நிறமி அணுக்கள் (Melanocytes) எனப்படும் உயிரணுக்களில் உருவாகின்றன. மெலனினே கருமை தோல் நிறமுடையவர்களின் நிறத்தை முடிவு செய்கிறது. வெளிர் தோல் நிறமுடையவர்களின் நிறத்தை முக்கியமாக முடிவுசெய்வது அடித்தோலின் அடிப்புறத்தில் இருக்கும் நீல-வெள்ளை நிறமுடைய இணைப்புத் திசுவும், அடித்தோலின் நரம்புகளில் சுற்றி வரும் இரத்த சிவப்பணுக்களே.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Muehlenbein, Michael (2010). Human Evolutionary Biology. Cambridge University Press. pp. 192–213.
- ↑ "மெலனின்". Dennis O'Neil. Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 26, 2013.