அதிர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுருள்வில்லில் ஏற்படும் ஒத்த அதிர்வு
உத்திரத்தின் மீது ஏற்படும் அதிர்வு

அதிர்தல் (Vibration) என்பது ஒரு இயந்திரவியல் கோட்பாடு. நீளும் தன்மையுடைய சுருள்வில் அல்லது சுழல்தண்டின் மீது விசை செயல்படும்போது அல்லது விசை நிறுத்தப்படும்போது ஏற்படும் சமநிலை, அதிர்வு எனப்படும். இதற்கு காரணம் விசை செயல்படும்போது சுருள்வில்லின் மீது ஏற்படும் திரிபு ஆற்றலே (Strain Energy) ஆகும்.

முக்கிய உறுப்புகள்[தொகு]

அதிர்வு காலம் அடுத்தடுத்த இரண்டு அதிர்வுகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி அதிர்வு காலம் எனப்படும். இதன் அலகு நொடி ஆகும்.

சுழற்சி: ஒரு முழுமையான அதிர்வு சுழற்சி எனப்படும்

அதிர்வெண்: ஒரு நொடிக்கு எடுத்துக்கொள்ளபடும் சுழற்சியின் அளவு அதிர்வெண் எனப்படும். இதன் அலகு ஹெர்ட்ஸ் எனப்படும்.

வகைகள்[தொகு]

இயல்பு அதிர்வு: சுருள்வில் இடப்பெயர்ச்சி அடைந்ததற்கு பின் எந்தவொரு புறவிசையும் செலுத்தபடவில்லையெனில் அதுவே இயல்பு அதிர்வு எனப்படும்

விசை அதிர்வு: சுருள்வில் இடப்பெயர்ச்சி அடைந்ததற்கு பின் புறவிசையும் செலுத்தப்பட்டால் அதுவே விசை அதிர்வு எனப்படும்.

தணித்த அதிர்வு: ஒவ்வொரு சுழற்சிக்கு பின்னும் அதிர்வின் வீச்சு குறைந்துகொண்டே வந்தால் அது தணித்த அதிர்வு எனப்படும்.

இயல்பு அதிர்வின் வகைகள்[தொகு]

நீளவாக்கு அதிர்வு ( Longitudinal Vibration ): சுழல்தண்டின் அச்சிற்கு நேரான திசையில் துகளானது அதிவடைந்தால் அது
நீளவாக்கு அதிர்வு எனப்படும்.இம்முறையில் நீள்தகைவும் ( Tensile Stress )இறுக்கதகைவும் ( Compressive Stress ) மாறி மாறி ஏற்படும்.

குறுக்கீட்டு அதிர்வு ( Transverse Vibration ): சுழல்தண்டின் அச்சிற்கு செங்குத்து திசையில் துகளானது அதிவடைந்தால்
அது குறுக்கீட்டு அதிர்வு எனப்படும். இம்முறையில் வளைவுதகைவு ( Bending Stress) உருவாகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிர்வு&oldid=2752455" இருந்து மீள்விக்கப்பட்டது