உணர்வுத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பார்வைக்குரிய புலன் உணர்வுத் தொகுதியின் முக்கியமான உறுப்பான கண்.

உணர்வுத் தொகுதி அல்லது உணர்வு மண்டலம் (Sensory system) என்பது, புலன் உணர்வு தொடர்பான தகவல்களைச் செயற்படுத்தும் நரம்புத் தொகுதியின் ஒரு பகுதி ஆகும். உணர்வுத் தொகுதி, உணர்வு ஏற்பிகளையும், நரம்பு வழிகளையும் கொண்டது. மூளையின் ஒரு பகுதியும் உணர்வதில் ஈடுபடுகின்றது. பொதுவான உணர்வுத் தொகுதிகளாவன, பார்வை, கேட்டல், தொட்டுணர்வு, சுவை, முகர்ச்சி மற்றும் சமநிலை என்பனவாகும். கண், செவி, தோல். நாக்கு, மூக்கு ஆகியவை ஏற்புப் புலன் உறுப்புக்களாகத் தொழிற்படுகின்றன. இந்த ஏற்புப் புலன் உறுப்புகளால் உணரப்படும் உலகிலுள்ள பொருள் சார்ந்த பகுதிகள், மூளையினால் புரிந்துகொள்ளப்படும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது[1].

ஏற்புப் புலம் (receptive field) என்பது ஒரு ஏற்புப் புலனுறுப்பால் உணரப்படக்கூடிய உலகின் ஒரு பகுதியாகும். எடுத்துக் காட்டாக, கண்ணால் பார்க்கக்கூடிய உலகின் பகுதி அதன் ஏற்புப் புலம் ஆகும். இது, கண்ணில் உள்ள கோல்களும், கூம்புகளும் உணரக்கூடிய ஒளியின் பகுதியாகும்[2]. பார்வைத் தொகுதி, கேட்டல் தொகுதி, தொட்டுணர்வுத் தொகுதி என்பவற்றுக்கு அவற்றின் ஏற்புப் புலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

புலனறிவு மற்றும் ஏற்பிகள்[தொகு]

புலன்கள் தொடர்பாக ஒரு பொருளைக் கொண்டிருக்கும் வேறுபட்ட வரையறையின் காரணமாக, எண்ணற்ற குறிப்பிட்ட உணர்வுகளுக்கு நரம்பியல் அறிஞர்களிடையே விவாதம் இருப்பினும், கௌதம புத்தர் மற்றும் அரிஸ்டாட்டில் ஐந்து 'பாரம்பரிய' மனித உணர்வுகளை வகைப்படுத்தியுள்ளனர் இவை உலகளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: தொடு உணர்வு, சுவையுணர்வு, நுகர்ச்சியுணர்வு, பார்வையுணர்வு மற்றும் கேட்டலுணர்வு ஆகியவையே அவையாகும். கடுமையுணர்வு (nociception), சமநிலையுணர்வு (equilibrioception), மயக்கவுணர்வு (kinaesthesia), மற்றும் வெப்பவுணர்வு (thermoception) போன்ற பிற உணர்வுகள் மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளில் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாக உள்ளன. மனிதர்களைத் தவிர பிற உயிரிகளில் காந்தஏற்புணர்வு (magnetoception) மற்றும் மின்னேற்புணர்வு (electroreception) சில வகை சிறப்பு வகை உணர்வுகள் கானப்படுகின்றன. [3]

புலனுணர்வு ஏற்பி[தொகு]

புலனுணர்வு ஏற்பி ( Sensory receptor) என்பது ஓர் உயிரினத்தின் உட்புற அல்லது வெளிப்புற சூழலின் தூண்டலுக்கு, புலனுணர்ச்சி அமைப்பில் உள்ள ஒர் உணர்ச்சி நரம்பு துலங்கலை வெளிப்படுத்தும் செயலாகும். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலை வெளிப்படுத்தும் விதமாக, தூண்டல் ஏற்பட்ட அதே செல்லில் அல்லது அதற்கடுத்துள்ள ஒரு செல்லில் தரமான வினைநுட்பத்தை அல்லது செயல்திறலை உருவாக்க புலனுணர்வு ஏற்பி புலனுணர்வு நுண்ணிடைமாற்றம் மூலமாக ஒரு தொடக்கத்தை வழங்குகிறது.

மனிதனின் புலனுணர்ச்சி அமைப்பு

செயற்பாடுகள்[தொகு]

சுவை மற்றும் மணம் ஆகியனவற்றுடன் தொடர்புடைய புலனுணர்வு ஏற்பிகள், குறிப்பிட்ட சில வேதிப்பொருட்களால் பிணைக்கப்பட்ட ஏற்பி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. மணம் சார்ந்த மூலக்கூறுகளின் மூலக்கூறு அமைப்புடன், இடைவினை நிகழ்த்துகின்ற மோப்ப ஏற்பி நரம்புகளில் உள்ள மணம் ஏற்பிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதைப்போலவே சுவைப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள சுவை மொட்டுகள் உணவில் உள்ள சுவை சார்ந்த வேதிப்பொருட்களுடன் இடைவினை நிகழ்த்த ஒரு செயல்திறலை உருவாக்குகின்றன.

தொடுவுணர்ச்சி ஏற்பி மற்றும் ஒளி ஏற்பி போன்ற மற்ற புலனுணர்வு ஏற்பிகள் உடலியக்கம் மூலம் இடைவினை நிகழ்த்துகின்றன. ரோடாப்சின் போன்ற சிறப்புப் புரதங்களைப் பெற்றுள்ள ஒளி ஏற்பி செல்கள் ஒளியால் தூண்டப்படும் உடலியக்க ஆற்றலை மின் அதிர்வு அறிவிப்புக் குறிகளாக மாற்றி இடைவினை நிகழ்த்துகின்றன. சிலவகை தொடுவுணர்ச்சித் தூண்டல்களுக்கு உடல்சவ்வுகள் உள்ளிழுத்து அல்லது சுருங்கி உடனடியாக துலங்கலை வெளிப்படுத்துகின்றன.

புலனுணர்வு ஏற்பியின் செயல்பாடுகளே ஒரு புலனுணர்ச்சி அமைப்பின் முதலாவது அங்கமாகும்.

தனிப்பட்ட ஒவ்வொரு வகையான புலனுணர்வு தூண்டலுக்கேற்பவும் புலனுணர்வு ஏற்பிகள் எதிர்வினையாற்றுகின்றன. புலனுணர்வு ஏற்பிகள் உணரும் தூண்டல்களின் அளவிற்கு ஏற்பவே துலங்கல்களின் அளவும் உறுதிப்படுத்தப்படுகின்றன.

புலனுணர்வைக் கடத்தத் தொடங்குவதன் மூலம் புலனுணர்வு ஏற்பியானது புலனுணர்வு வகைக்கேற்ற துலங்கலை வெளிப்படுத்துகிறது. புலனுணர்வு ஏற்பியின் தொடக்க நிலையிலிருந்து நிகர விலகலை நிறைவேற்றுகிறது. (தூண்டல் துலங்கலுக்கான உத்தேச நிலையுடன் [4] உயிர் இயற்பியல் [5] விளக்கப் படம் பார்க்கவும்).

வேதிஏற்பிகள்[தொகு]

வேதி ஏற்பிகள் அல்லது வேதி உணரிகள் குறிப்பிட்ட வேதியற் பொருட்களை அடையாளம் கண்டு அதனை மின் உணரியாக மாற்றுகிறது. இரண்டு அடிப்படை வேதி உணரிகள் கானப்படுகின்றன.

தொலை வேதி ஏற்பிகள்[தொகு]

நுகர்வு உறுப்புகள் மூலம் வேதியப் பொருட்களின் காரம், நெடி, வாசனை போன்றவற்றின் மூலம் மோப்ப நரம்புகள் தூண்டப்பட்டு அவை நரம்பணுக்கள் வழியாக மூளைக்கு கடத்தப்படுகின்றன.

நேரடி வேதி ஏற்பிகள்[தொகு]

நாவிலுள்ள சுவை மொட்டுக்கள் மூலம் நேரிடையாக தொடர்பு ஏற்படுவதால் அவ்விடத்திலுள்ள நரம்பணுக்கள் பிரான வாயுவில் ஏற்படும் அடர்வு மாறுதல்கள் மூலம் நேரடி வேதி ஏற்பு அமைப்பு செயல்படுகின்றன. [6]

மேற்கோள்[தொகு]

  1. Krantz, John. "Experiencing Sensation and Perception - Chapter 1: What is Sensation and Perception?" (Pdf). பார்த்த நாள் April 15, 2017.
  2. Kolb & Whishaw: Fundamentals of Human Neuropsychology (2003)
  3. Hofle, M., Hauck, M., Engel, A. K., & Senkowski, D. (2010). Pain processing in multisensory environments. [Article]. Neuroforum, 16(2), 172.
  4. [1]
  5. [2]).
  6. Satir, P. & Christensen, S.T. (2008) Structure and function of mammalian cilia. in Histochemistry and Cell Biology, Vol 129:6
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்வுத்_தொகுதி&oldid=2419071" இருந்து மீள்விக்கப்பட்டது