உரோமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரோமம் என்பது மனிதன் அல்லாத பாலூட்டிகளில் வளரும் உடல் முடி ஆகும். இது அவ்வுயிரினங்களை குளிர் போன்ற காலநிலைகளில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு வகையான எலிகளும் நாய்களும் உடலில் முடியில்லாமல் (உரோமம் இல்லாமல்) உள்ளன.

உரோமத்தில் இரு அடுக்குகள் உள்ளன. அவை கீழ் உரோமம் அல்லது அடி உரோமம், மேல் உரோமம் அல்லது காக்கும் உரோமம் என அழைக்கப்படுகின்றன.

  • கீழ் உரோமம் உடலை ஒட்டியவாறு இருக்கும், இது அடர்த்தி மிகுந்து காணப்படும், இதன் முதன்மையான பணி உடல் சூட்டை கட்டுக்குள் வைத்திருப்பதே.
  • மேல் உரோமம் நீளமாகவும், மென்மையாகவும் இருக்கும், இது கீழ் உரோமத்துடன் ஒட்டி வந்திருக்கும். இது கீழ் உரோமத்தை மழை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும், ஆதலால் பெரும்பாலும் இது நீர் ஒட்டா தன்மையுடன் இருக்கும்.

உரோமத்திலிருந்து ஆடைகள் செய்யப்படுகிறது. இது குளிர் பகுதிகளில் உள்ளவர்கள் குளிரிலிருந்து பாதுகாத்து கொள்ள உதவுகிறது.

செந்நரி உரோமம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமம்&oldid=2742504" இருந்து மீள்விக்கப்பட்டது