மூக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nose
Canine-nose.jpg
நாய்s have very sensitive noses
Details
இலத்தீன் Nasus
Identifiers
TA A06.1.01.001
A01.1.00.009
FMA 46472
Anatomical terminology

உடற்கூற்றின்படி, மூக்கு (Nose) என்பது, முதுகெலும்பிகளின் முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும். இது, சுவாசத்துக்காகக் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவதற்காக அமைந்த மூக்குத்துளைகளைக் கொண்டு அமைந்துள்ளது. பல விலங்குகளில், மூக்குத்துளைகளுள் சிறிய ரோமங்கள் உள்ளன. இவை வளியில் உள்ள துகள்கள் மூக்கு வழியாக நுரையீரலை அடையாமல் பாதுகாக்கின்றன. மூக்கின் உள்ளும் அதன் பின்புறமும், மோப்ப மென்சவ்வுகளும், வடிகுழல்களும் (sinuses) காணப்படுகின்றன. மூக்கு வழியாக உட்செல்லும் வளி மூக்குக் குழிக்குப் பின்புறத்தில், தொண்டை வழியாகச் சென்று சுவாசத் தொகுதியின் பிற பகுதிகளை அடைகின்றது. மனிதரில் மூக்கு முகத்தின் நடுப் பகுதியின் அமைந்துள்ளது. பல பாலூட்டிகளில் இது நீண்டிருக்கும் முகத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும்.

உடலுக்கும், சூழலுக்கும் இடையிலான ஒரு இடைமுகம் என்ற வகையில் மூக்கும் அதனோடு தொடர்புள்ள பிற அமைப்புக்களும், உட்செல்லும் வளியைத் பதனப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளையும் செய்கின்றது.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கு&oldid=2140822" இருந்து மீள்விக்கப்பட்டது