சிறுகுடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிறுகுடல்
Stomach colon rectum diagram-ta.png
சிறுகுடலைக் காட்டும் படம்
இலத்தீன் intestinum tenue
கிரேயின்

subject #248 1168

நரம்பு வயிற்று நரம்புத்திரள், அலையுநரம்பு
ம.பா.தலைப்பு சிறு+குடல்
Dorlands/Elsevier i_11/12456563

உயிரியலில் சிறுகுடல் (small intestine) என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது, முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக உள்ளது. இங்குதான் பெரும்பாலான சமிபாடு நிகழ்கிறது. சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் அமைப்புக்கள் ஊட்டச்சத்துக்கள், கமினங்களை உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன. ஐந்து வயதுக்கு மேற்பட்ட மனிதரில் சிறுகுடலின் நீளம் 4 மீட்டருக்கும் 7 மீட்டருக்கும் இடையில் காணப்படும். சிறுகுடலின் பகுதிகள் பின்வருமாறு அமைந்திருக்கும்:

  • முன்சிறுகுடல்: 26 சமீ (9.84 அங்) நீளம்.
  • நடுச்சிறுகுடல்: 2.5 மீ (8.2 அடி) நீளம்.
  • பின்சிறுகுடல்: 3.5 மீ (11.5 அடி) நீளம்.

சிறுகுடல், பெருங்குடலிலும் 4 - 5 மடங்கு நீளம் கொண்டு பெரியதாக இருந்தாலும், இதன் விட்டம் சிறியதாக இருப்பதால் சிறுகுடல் என்று அழைக்கப்படுகிறது. சராசரியாக, வளர்ந்த மனிதரில் சிறுகுடல் 2.5-3 சமீ விட்டம் கொண்டதாகவும், பெருங்குடல் 7.6 சமீ விட்டம் கொண்டதாகவும் இருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகுடல்&oldid=2251817" இருந்து மீள்விக்கப்பட்டது