முள்ளந்தண்டு வடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முண்ணாண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முள்ளெலும்புக் கம்பத்தினுள் காக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம்
முள்ளந்தண்டு வடத்தின் மிகநெருக்கமான தோற்றம்
கழுத்துக்குரிய முள்ளந்தண்டு வடத்தின் குறுக்கு வெட்டுமுகம்
சிறகு மற்றும் அடித்தளத் தட்டுகளின் முள்ளந்தண்டு வட விருத்தி
முள்ளந்தண்டு வடத் தடங்கள்

முண்ணாண் (Spinal Cord) அல்லது முள்ளந்தண்டு வடம் நீளமானது, மெல்லியது, மூளையிலிருந்து நீட்டிக்கும் நரம்பு இழையம் மற்றும் ஆதாரக் கலங்களின் குழாய்போன்ற கட்டானது (குறிப்பாக மூளையின் பின்கூறு) மூளையும், முள்ளந்தண்டு வடமும் ஒன்றுசேர்ந்து மைய நரம்புத் தொகுதியை உருவாக்குகின்றன. முள்ளந்தண்டு வடமானது முதலாவது மற்றும் இரண்டாவது இடுப்பு முள்ளெலும்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியினூடாக கீழ்நோக்கி நீண்டுசெல்கிறது; இது முள்ளெலும்புக் கம்பத்தின் முழு நீளத்துக்கும் நீண்டுசெல்லாது. இதன் நீளம் ஆண்களில் கிட்டத்தட்ட 45 cm (18 அங்) ஆகவும் பெண்களில் கிட்டத்தட்ட 43 cm (17 அங்) ஆகவும் இருக்கும். சூழவுள்ள எலும்பாலான முள்ளெலும்புக் கம்பமானது ஒப்பீட்டளவில் குட்டையான முள்ளந்தண்டு வடத்தைப் பாதுகாக்கிறது. மூளைக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் இடையே நரம்புச் சமிக்ஞைகளைக் கடத்துவதே முள்ளந்தண்டு வடத்தின் முதன்மையான செயல்பாடாகும், ஆனால் தன்னிச்சையாகவே பல்வேறு மறுதாக்கங்கள் எதிர்வினைகள் மற்றும் மைய வடிவமைப்பு உருவாக்கிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நரம்புச் சுற்றுகளையும் கொண்டுள்ளன. முள்ளந்தண்டு வடத்துக்கு மூன்று முக்கிய செயல்பாடுகள் உள்ளன: அ. முள்ளந்தண்டு வடத்திலிருந்து கீழ்நோக்கிச் செல்லுகின்ற இயக்க தகவல்களுக்கான வழியாகச் செயல்படும். ஆ. முள்ளந்தண்டு வடத்தில் மேல்நோக்கிச் செல்கின்ற உணர்ச்சித் தகவல்களுக்கான வழியாகச் செயல்படும். இ. குறிப்பிட்ட மறுதாக்கங்களை ஒருங்கிணைப்பதற்கான மையமாகச் செயல்படும். [1]

அமைப்பு[தொகு]

மூளையையும் புற நரம்புத் தொகுதியையும் இணைக்கின்ற தகவல்களுக்குரிய முக்கியமான பாதை முள்ளந்தண்டு வடமாகும். முள்ளந்தண்டு வடத்தின் நீளமானது எலும்பாலான முள்ளெலும்புக் கம்பத்தின் நீளத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குட்டையானது. மனிதனின் முள்ளந்தண்டு வடத்தில் மூளையின் பின்கூறில் தொடங்கி முதலாம் அல்லது இரண்டாம் அல்லது மூன்றாம் இடுப்பு முள்ளெலும்புக்கு அருகில் கூம்பு முதுகெலும்புத் தண்டு ஊடாகத் தொடர்ந்து, இழை முனை எனப்படுகின்ற இழையாலான நீட்டிப்பில் நிறைவடைகிறது. spinal cord...

இது ஆண்களில் கிட்டத்தட்ட 45 cm (18 அங்) நீளமாகவும் பெண்களில் 43 cm (17 அங்) நீளமாகவும், நீள்வட்ட வடிவமாகவும் இருக்கும் மேலும், இடுப்புப் பகுதிகளில் பெரிதாக்கப்பட்டிருக்கும். C4 இலிருந்து T1 வரை அமைந்துள்ள கழுத்து விரிவாக்கமானது அவயவங்களிலிருந்து உணர்ச்சி உள்ளீடுகள் வருகின்ற மற்றும் அவயவங்களுக்கு இயக்க வெளியீடுகள் செல்கின்ற இடத்தில் உள்ளது. T9 மற்றும் T12 ஆகியவற்றுக்கிடையே அமைந்துள்ள இடுப்பு விரிவாக்கமானது கால்களிலிருந்து வருகின்ற மற்றும் கால்களுக்குச் செல்கின்ற உணர்ச்சி உள்ளீடுகள் மற்றும் இயக்க வெளியீடுகளைக் கையாள்கின்றது. பெயரானது ஓரளவு தவறாக வழிகாட்டுகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இருந்தபோதிலும், வடத்தின் இந்தப் பகுதி உண்மையில் கிளைகளைக் கொண்டுள்ளது, இது இடுப்புப் பகுதிக்கு நீள்கிறது.

குறுக்கு வெட்டுமுகத்தில், வடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் புலன் மற்றும் இயக்க நரம்புக்கலங்களைக் கொண்டுள்ள நரம்புக்கலத்துக்குரிய வெள்ளைக் கருப்பொருள் பரப்புகள் உள்ளன. இந்த சுற்றுப் பகுதிக்கு உட்பகுதி நரம்புக் கல உடல்களால் ஆக்கப்பட்ட சாம்பல் நிறமான மூளை, வண்ணத்துப்பூச்சி வடிவமுடைய மத்திய பகுதியாகும். இந்த மத்திய பகுதியானது செரிபரமுள்ளிய திரவத்தைக் கொண்டுள்ள மூளையின் உட்குழிவுப் பள்ளங்கள் மற்றும் உட்குழிவுப் பள்ளங்கள் போன்றவை எனப்படுகின்ற இடைவெளிகளின் உடலமைப்பு சார்ந்த நீட்டமான மத்திய கால்வாயைச் சூழ்ந்துள்ளது.

முள்ளந்தண்டு வடம் முதுகுப்புறத்திலிருந்து வயிற்றுப்புறமாக அழுத்தப்பட்டு நீள்வட்ட வடிவமாக உள்ளது. வடமானது முதுகுப்புற மற்றும் வயிற்றுப்புறங்களில் தவாளிப்புகளைக் கொண்டுள்ளது. பிற்புற மத்திய பள்ளம் முதுகுப்புறத்திலுள்ள தவாளிப்பாகும், முற்பக்க மத்திய பிளவு வயிற்றுப்புறத்திலுள்ள தவாளிப்பாகும். முள்ளந்தண்டு வடத்தின் மையத்தில் கீழ்நோக்கிச் செல்லும்போது மத்திய கால்வாய் எனப்படும் குழி உள்ளது.

முள்ளந்தண்டு வடத்தைச் சுற்றி மூன்று சவ்வுகள்-மூன்றுக்கும் மிகவும் வெளிப்புறமாகவுள்ள வன்றாயி, மென்வலைதுறை மற்றும் மிகவும் உட்புறமாகவுள்ள மென்றாயி- மூளைத்தண்டு மற்றும் மூளையின் அரைக்கோளங்களில் உள்ளவற்றுடன் தொடர்ந்துள்ளன. இதேபோல, செரிபரமுள்ளிய திரவம் துணை-சிலந்தி வலை உரு இடைவெளியில் காணப்படும். வடமானது இணைகின்ற மிகநுண்ணிய பற்கள்போன்ற விளிம்புகள் கொண்ட இணையங்களால் வன்றாயியினுள் உறுதியாக்கப்படும், இவ்விணையங்கள் சூழவுள்ள மென்றாயியிலிருந்து முதுகுப்புற மற்றும் வயிற்றுப்புற வேர்களிடையே பக்கவாட்டில் நீட்டிக்கின்றன. மிகவும் வெளிப்புறத்திலான பையானது முதுகெலும்பின் கீழ் நுனிப்பகுதியிலுள்ள முக்கோண நாரி எலும்பின் இரண்டாவது முள்ளெலும்பு மட்டத்தில் முடிவடையும்.

முள்ளந்தண்டு வடமனது மூன்று படைகளாலான இழையத்தால் பாதுகாக்கப்படும், இவை சவ்வுகள் எனப்படுகின்றன, இவை தண்டைச் சூழ்ந்துள்ளன. வன்றாயி எனப்படுவது மிகவும் வெளிப்புறத்திலுள்ள படை, இது கடினமான பாதுகாப்புக் கவசத்தை உண்டாக்கும். வன்றாயி மற்றும் முள்ளெலும்புகளைச் சூழவுள்ள எழும்புக்கிடையே epidural இடைவெளி எனப்படுகின்ற இடைவெளி உள்ளது. இவ்விடைவெளி கொழுப்பு இழையத்தால் நிரப்பப்படும், மற்றும் குருதிக் கலன்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. சிலந்தி வலை உரு என்பது நடுவிலுள்ள பாதுகாப்புப் படை. இந்த இழையம் சிலந்திவலை போன்ற தோற்றம் உள்ள காரணத்தால் இந்தப் பெயர் வந்தது. சிலந்தி வலை உரு மற்றும் அதன் கீழுள்ள மென்றாயி ஆகியவற்றுக்கிடையேயுள்ள இடைவெளி துணை-சிலந்திவலையுரு இடைவெளி எனப்படும். துணை-சிலந்திவலையுரு இடைவெளி செரிபரமுள்ளிய திரவத்தை (CSF) கொண்டிருக்கும். "முள்ளந்தண்டு தட்டு" எனப்படுகின்ற மருத்துவச் செய்முறை துணை-சிலந்திவலையுரு இடைவெளியிலிருந்து, வழக்கமாக முதுகெலும்பின் இடுப்புப் பகுதியிலிருந்து, CSF ஐ எடுப்பதற்கு ஒரு ஊசியைப் பயன்படுத்தும். மென்றாயி என்பது மிகவும் உட்புறமாகவுள்ள பாதுகாப்புப் படை. இது மிகவும் மென்மையானது மற்றும் முள்ளந்தண்டு வடத்தின் மேற்பரப்புடன் இறுக்கமாக இணைந்திருக்கும்.

முள்ளந்தண்டு வடத்தின் பிரிவுகள்[தொகு]

மனிதனின் முள்ளந்தண்டு வடம் 31 வேறுபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும், வலது மற்றும் இடது முள்ளெலும்பு நரம்புகளின் (ஒருங்கிணைந்தது; உணர்ச்சி மற்றும் இயக்க) ஜோடி உருவாகும். ஆறு முதல் எட்டு வரையான இயக்க நரம்பு வேர்ப்பகுதிகள் நன்கு ஒழுங்குமுறைப்படுத்திய வகையில் வலது மற்றும் இடது வயிற்றுப்புற-பக்கவாட்டான பள்ளங்களுக்கு வெளியே கிளைவிடுகின்றன. நரம்பு வேர்ப்பகுதிகள் நரம்பு வேர்களை உருவாக்குவதற்கு இணைகின்றன. இதேபோல, உணர்ச்சி நரம்பு வேர்ப்பகுதிகள் வலது மற்றும் இடது பக்கங்களுக்கு அப்பால் முதுப்புற பக்கவாட்டான பள்ளங்களை உருவாக்கி, உணர்ச்சி நரம்பு வேர்களை உருவாக்கும். வயிற்றுப்புற (இயக்க) மற்றும் முதுகுப்புற (உணர்ச்சி) வேர்கள் இணைந்து முள்ளந்தண்டு நரம்புகளை (ஒருங்கிணைந்தது; இயக்க மற்றும் உணர்ச்சி) உண்டாக்கும், முள்ளந்தண்டு வடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்று. முள்ளந்தண்டு நரம்புகள், C1 மற்றும் C2 தவிர, முள்ளெலும்புகளுக்கு இடையேயான சிறுதுளையை (IVF) உட்புறமாக உண்டாக்கும். ஒவ்வொரு முள்ளந்தண்டு பிரிவிலும், மைய மற்றும் சுற்று நரம்புத் தொகுதிக்கிடையிலான வரம்பை உற்றுநோக்கலாம் என்பதைக் குறித்துக் கொள்ளவும். வேர்ப்பகுதிகள் சுற்று நரம்புத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

முள்ளெலும்புக் கம்பத்தின் மேற்பாகத்தில், முள்ளந்தண்டு வடத்திலிருந்து நேரடியாகவே முள்ளந்தண்டு நரம்புகள் வெளியேறுகின்றன, ஆனால் முள்ளெலும்பு வடத்தின் கீழ்ப்பாகத்தில் நரம்புகள் மேலும் கீழ்நோக்கிச் சென்றப்பின்னரே வெளியேறுகின்றன. முள்ளந்தண்டு வடத்தின் முனைவுப் பகுதி கூம்பு முதுகெலும்புத் தண்டு என அழைக்கப்படும். மென்றாயியானது இழை முனை என அழைக்கப்படும் நீட்டமாகத் தொடர்கிறது, இது முள்ளந்தண்டு வடத்தை வாலாக கீழிறக்கிறது. முள்ளந்தண்டுக் கடைவால் (“குதிரையின் வால்”) என்பது கூம்பு முதுகெலும்புத் தண்டுக்குக் கீழாகவுள்ள முள்ளெலும்புக் கம்பத்தினூடாகத் தொடர்ந்து செல்கின்ற முள்ளெலும்பு கம்பத்திலுள்ள நரம்புகளின் தொகுதிக்கான பெயராகும். முதிர்ச்சியடையும்வரை முள்ளெலும்புக் கம்பமானது வளர்கின்றது என்றாலும், கிட்டத்தட்ட நான்கு வயதில் முள்ளந்தண்டு வடமானது நீளத்தில் அதிகரிப்பதை நிறுத்துகிறது என்பதன் விளைவாகவே முள்ளந்தண்டுக்கடைவால் உருவாகிறது. உண்மையில் நாரி முள்ளந்தண்டு நரம்புகள் மேல் இடுப்புப் பகுதியில் உருவாகுவதன் காரணமாக இது உண்டாகிறது. முள்ளந்தண்டு வடத்தை முள்ளந்தண்டு நரம்புகளின் பிறப்பிடங்களை அடிப்படையாகக் கொண்டு உடலமைப்பியல் ரீதியான 31 முள்ளந்தண்டுப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முள்ளந்தண்டு வடத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒரு ஜோடி நரம்பு செல்திரளுடன் இணைந்திருக்கும், முதுகுப்புற வேர் நரம்பு செல்திரள் என்றழைக்கப்படும் இது முள்ளந்தண்டு வடத்துக்கு பக்கத்தில் வெளியில் அமைந்திருக்கும். இந்த நரம்பு செல்திரளில் உணர்ச்சி நரம்புக் கலங்களின் கல உடல்கள் உள்ளன. இந்த உணர்ச்சி நரம்புக் கலங்களின் நரம்பிழைகள் முதுகுப்புற வேர்கள் வழியாக முள்ளந்தண்டு வடத்துக்குள் செல்லும்.

வயிற்றுப்புற வேர்கள் CNS இற்குள்ளேயுள்ள கல உடன்களிலிருந்து சுற்றுப்புறத்துக்கு தகவல்களைக் கொண்டுசெல்கின்ற இயக்க நரம்புக் கலங்களிலிருந்து வரும் நரம்பிழைகளைக் கொண்டுள்ளன. முதுகுப்புற வேர்கள் மற்றும் வயிற்றுப்புற வேர்கள் இரண்டும் சேர்ந்து வந்து, அவை முள்ளந்தண்டு நரம்புகளாகுவதால் முள்ளெலும்புகளுக்கிடையான துவாரமூடாக வெளியேறும்.

வடத்தின் மையத்திலுள்ள மூளை வண்ணத்துப் பூச்சியைப் போன்றது, நரம்புக் கலங்களுக்கிடையான உடல்கள் மற்றும் இயக்க நரம்புக்கலங்களைக் கொண்டிருக்கும். இது நரம்பபணுப் பிணைப்புக் கலங்கள் மற்றும் மயலினேற்றப்படாத நரம்பிழைகளையும் கொண்டிருக்கும். மூளையிலிருந்தான வெளிநீட்டங்கள் ("சிறகுகள்") கொம்புகள் என அழைக்கப்படும். நரம்புக் கொம்புகளும் நரம்பு இணைப்பும் ஒன்றாகி "மூளை H" ஐத் தோற்றுவிக்கும்,

வெண்ணிற நரம்பு இழையம் மூளைக்கு வெளியே அமைந்திருக்கும், அதோடு பெரும்பாலும் முற்றுமுழுதாக மயலினேற்றப்பட்ட இயக்க மற்றும் புலன் நரம்பு இழைகளைக் கொண்டிருக்கும். வெண்ணிற நரம்பு இழையத்தில் "நாண்கள்" தகவலை முள்ளந்தண்டு வடத்தின் மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கிக் கொண்டுசெல்லும்.

CNS இற்குள், நரம்புக் கல உடல்கள் பொதுவாக செயல்படக்கூடிய கூட்டங்களாக ஒழுங்குபடுத்தப்படும், இது கரு என அழைக்கப்படும். CNS இலுள்ள இழைகள் தடங்களாகக் குழுவாக்கப்படும்.

ஒரு மனிதனின் முள்ளந்தண்டு வடத்தில் 33 (சில EMS உரை 25 எனக் கூறுகிறது, இடுப்பு வடத்தை ஒரேயொரு துண்டாக எண்ணுகிறது) முள்ளந்தண்டு வட நரம்புப் பிரிவுகள் உள்ளன:

  • கழுத்துக்குரிய 8 பிரிவுகள் 8 ஜோடிகள் கழுத்து நரம்புகளை உண்டாக்கும் (தலையின் பின்பகுதிக்கும் C1 முள்ளெலும்புக்கும் இடையே C1 முள்ளந்தண்டு நரம்புகள் வெளியேறும்; C1 முள்ளெலும்பின் பிற்பக்க வில்வளைவுக்கும் C2 முள்ளெலும்பின் தட்டுக்குமிடையே C2 நரம்புகள் வெளியேறும்; C3-C8 முள்ளந்தண்டு நரம்புகள் IVF வழியாக அதற்குரிய கழுத்து முள்ளெலும்புக்கு மேலாக வெளியேறும், ஆனால் இதில் C8 ஜோடி விதிவிலக்காகும், ஏனெனில் இது C7 மற்றும் T1 முள்ளெலும்புகளுக்கு இடையே IVF வழியாக வெளியேறும்)
  • 12 மார்பு பிரிவுகள் 12 மார்பு நரம்பு ஜோடிகளை உருவாக்கும் (ஒத்த T1-T12 முள்ளெலும்புகளுக்குக் கீழே IVF வழியாக முள்ளந்தண்டு கம்பத்திலிருந்து வெளியேறும்)
  • ஐந்து இடுப்பு பிரிவுகள் ஐந்து ஜோடி இடுப்பு நரம்புகளை உருவாக்கும் (ஒத்த S1-S5 முள்ளெலும்புகளுக்குக் கீழே IVF வழியாக முள்ளந்தண்டு கம்பத்தைவிட்டு வெளியேறும்)
  • 5 (அல்லது 1) நாரிப் பிரிவுகள் 5 நாரி நரம்புகளின் ஜோடிகளை உருவாக்குகின்றன (முள்ளந்தண்டு கமப்த்திலிருந்து IVF வழியாக, ஒத்த முள்ளெலும்புகளான S1-S5 க்குக் கீழாக வெளியேறும்)
  • மூன்று நாரி பிரிவுகள் இணைந்து ஒரு தனித்த பிரிவாகி ஒரு ஜோடி நாரி புட்ட தோல் நரம்புகளை உருவாக்கும் (இடுப்பு பிளவு வழியாக முள்ளந்தண்டு கம்பத்தைவிட்டு வெளியேறும்).

முள்ளந்தண்டு வடத்தைவிட முள்ளெலும்புக் கம்பம் நீளமாக வளருவதால், வயது வந்தவரில், குறிப்பாக முள்ளந்தண்டு வடத்தின் கீழ்ப்பாகத்தில், முள்ளந்தண்டு வடத்தின் பிரிவுகள் முள்ளெலும்புப் பிரிவுகளுக்கு ஒத்ததாக இருக்க மாட்டாது. கருவில், முள்ளெலும்புப் பிரிவுகள் முள்ளந்தண்டு வடத்தின் பிரிவுகளுடன் ஒத்திருக்கும். வயது வந்தவரில், முள்ளந்தண்டு வடமானது கிட்டத்தட்ட L1/L2 முள்ளெலும்பு மட்டத்தில் முடிவுறும், இது கூம்பு முதுகெலும்புத் தண்டு எனப்படுகின்ற அமைப்பை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, இடுப்பு மற்றும் நாரி முள்ளந்தண்டு வடத்தின் பிரிவுகள் முள்ளெலும்பு மட்டங்கள் T9 மற்றும் L2 ஆகியவற்றுக்கிடையில் காணப்படுகிறது.

முள்ளந்தண்டுக் கல உடல்கள் கிட்டத்தட்ட L1/L2 முள்ளெலும்பு மட்டத்தில் முடிவடையும் என்றபோதும், ஒவ்வொரு பிரிவுக்குமான முள்ளந்தண்டு நரம்புகள் ஒத்த முள்ளெலும்பு மட்டத்தில் வெளியேறும். கீழ் முள்ளந்தண்டு வடத்தின் நரம்புகளுக்கு, அவை முள்ளெலும்புக் கம்பத்தை அவற்றின் வேர்களைவிட அதிக கீழாகவே (கூடுதலாக வாலுக்குரிய பக்கமாக) வெளியேறுகின்றன. இந்த நரம்புகள் தமது வரிசைக்கிரமமான வேர்களிலிருந்து முள்ளெலும்புக் கம்பத்தைவிட்டு வெளியேறும் இடத்துக்குச் செல்லும்போது, கீழ் முள்ளந்தண்டுப் பிரிவின் நரம்புகள் முள்ளந்தண்டுக்கடைவால் எனப்படுகின்ற ஒரு தொகுதியை உருவாக்கும்.

முள்ளந்தண்டு வடம் பெரிதாகின்ற இரண்டு பிரதேசங்கள் உள்ளன:

  • கழுத்துப் பெரிதாக்கம் - ஓரளவுக்கு மேற்கை நரம்புப் பின்னல் நரம்புகளை ஒத்தது, இது மேற் புயத்த்துக்கு வலுவூட்டும். இதில் C4 முதல் T1 வரையான முள்ளந்தண்டு வடப் பிரிவுகள் உள்ளடங்கும். பெரிதாக்கத்தின் முள்ளெலும்பு மட்டங்கள் கிட்டத்தட்ட சமமானவையே(C4 முதல் T1 வரை).
  • இடைதிருக பெரிதாக்கம் - இடைதிருக நரம்புப் பின்னல் நரம்புகளை ஒத்தது, இது கீழ் புயத்துக்கு வலுவூட்டும். இதில் L2 முதல் S3 வரையான முள்ளந்தண்டு வடப் பிரிவுகள் உள்ளடங்குவதோடு, இது கிட்டத்தட்ட T9 முதல் T12 வரையான முள்ளெலும்பு மட்டங்களிலும் காணப்படும்.

முளையவியல்[தொகு]

வளர்ச்சியின்போது, முள்ளந்தண்டு வடமானது நரம்புக் குழாயின் பாகத்திலிருந்து உருவாக்கப்படும். நரம்புக் குழாய் வளர்ச்சியடையத் தொடங்கும்போது, முதுகுத்தண்டானது சோனிக் ஹெட்ஜ்ஹாக் அல்லது SHH எனப்படுகின்ற காரணியைச் சுரக்கத் தொடங்கும். இதன் விளைவாக, பின்னர் தளத் தட்டும் SHH ஐச் சுரக்கத் தொடங்க, இது 0}இயக்க நரம்புக்கலங்களை உருவாக்க அடித்தளத் தட்டைத் தூண்டும். இதேவேளையில், மேலுள்ள புறமுதலுருப்படையானது எலும்பு உருமாற்றப் புரதத்தைச் (BMP) சுரக்கும். இது BMP ஐச் சுரக்கத் தொடங்குமாறு மேல் தட்டைத் தூனும், அது பின்னர் புலன் நரம்புக்கலங்களை உருவாக்குமாறு சிறகு இடைத் தட்டைத் தூண்டும். சிறகு இடைத் தட்டும் அடித்தளத் தட்டும் குழிவு பிரிமென்சவ்வால் பிரிக்கப்படும்.

மேலும், தளத் தட்டும் நெட்ரின்களைச் சுரக்கும். நெக்ட்ரின்கள் வலியின் குறுக்கு இழைக்கு வேதிய ஈர்ப்பிகளாகவும், முன்பக்க நரம்பிழைத் தொகுதியில் வெப்பநிலை உணர் நரம்புக்கலங்களாகவும் செயல்படுகின்றன, பின்னர் அவை முன்பக்க நரம்பிழைத் தொகுதியில் முன்மூளை உள்ளறையை நோக்கி ஏறிச்செல்லும்.

இறுதியாக, கோழிக்குஞ்சு முளையத்தில் விக்டார் ஹம்பர்கர் மற்றும் ரீட்டா லெவி-மாண்டல்சினியின் கடந்தகால ஆய்வுகளை மிக அண்மைக்காலத்திய ஆய்வுகள் மேலும் நிரூபித்துள்ளமையைக் குறிப்பிடுவது முக்கியமாகும், இவை நரம்புத் தொகுதியானது சரியாக ஒன்றுகூடுவதற்கு, திட்டமிடப்பட்ட கல இறப்பினால் (PCD) நரம்புக் கலங்களை நீக்குவது அவசியம் என்பதைக் காண்பித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, தன்னிச்சையான முளையச் செயற்பாடானது நரம்புக்கல மற்றும் தசை வளர்ச்சியில் ஒரு பங்காற்றுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது, ஆனால் முள்ளந்தண்டு நரம்புக் கலங்களுக்கிடையேயான ஆரம்ப இணைப்பு உருவாக்கத்தில் பெரும்பாலும் ஈடுபடவில்லை.

உடலுணர்ச்சிசார்ந்த அமைப்பு[தொகு]

உடலுணர்ச்சிசார்ந்த அமைப்பானது முதுகுப்புறக் கம்ப-உள் நோக்கிய நரம்புநாடா தடம் (தொடுகை/அசைவுகளையுணர்தல்/அதிர்வு உணர்ச்சிக்குரிய பாதை) மற்றும் முன்பக்கவாட்டுத் தொகுதி அல்லது ALS (வலி/வெப்பநிலையை உணர்ச்சிக்குரிய பாதை) எனப் பிரிக்கலாம். இரண்டு உணர்ச்சிக்குரிய பாதைகளும், சுற்றுப்புறத்திலிருந்து மூளைய மேற்பட்டைக்கு தகவல்களைப் பெறுவதற்காக மூன்று வேறுபட்ட நரம்புக் கலங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த மூன்று நரம்புக்கலங்களும் முதன்மையான, இரண்டாம்நிலையான மற்றும் மூன்றாம் நிலையான உணர்ச்சி நரம்புக் கலங்கள் எனப் பெயரிடப்படுகின்றன. இரண்டு பாதைகளிலும், முதன்மை உணர்ச்சி நரம்புக் கலவுடல்கள் முதுகுப்புற வேர் நரம்புக்கலத்திரளில் காணப்படுகின்றன, அவற்றின் மத்திய நரம்பிழைகள் முள்ளந்தண்டு வடத்தினுள் நீண்டிருக்கும்.

முதுகுப்புறக் கம்ப-உள்நோக்கிய நரம்புநாடா தடத்தில், ஒரு முதன்மை நரம்புக் கலத்தின் நரம்பிழியானது முள்ளந்தண்டு வடத்திற்குள் நுழைந்து, பின்னர் முதுகுப்புறத் தண்டில் நுழையும். முள்ளந்தண்டின் T6 மட்டத்துக்குக் கீழாக முதன்மை நரம்பிழை உள்நுழையுமாயின், அந்த நரம்பிழையானது கம்பத்தின் மையப் பகுதியான நரம்புத்திரள் மடக்குத்தசையில் செல்லும். நரம்பிழையானது T6 மட்டத்துக்கு மேமே உள்நுழைகிறது என்றால், பின்னர் இது fasciculus cuneatus இல் நுழையும், இது நரம்புத்திரள் மடக்குத்தசைக்கு பக்கவாட்டில் உள்ளது. இரு வழிகளிலும் முதன்மை நரம்பிழையானது கீழ் மையவிழையத்துக்கு மேலுழுகிறது, இங்கு முதுகுப்புற கம்ப கருக்களில் ஒன்றில், இரண்டாம்நிலை நரம்புக்கலத்துடன் அதன் ஃபாசிகுலஸ் (fasiculus) மற்றும் நரம்பிணைப்புகளை விடுகிறது: இது எடுத்துக்கொள்ளும் பாதையைப் பொறுத்து, இது நியூக்கிலியஸ் கிராசிலிஸ் (nucleus gracilis) அல்லது நியூக்கிலியஸ் குனியேட்டஸ் (nucleus cuneatus) ஆக இருக்கலாம். இந்த நிலையில், இரண்டாம்நிலை நரம்பிழையானது அதன் கருவை விட்டு, முன்பக்கமாகவும் மையநோக்கியும் கடக்கிறது. இதைச் செய்யும் இரண்டாம்நிலை நரம்பிழைத் தொகுப்பை உள்ளக வில்வளை நார்கள் என்பர். உள்ளக வில்வளை நார்கள் ஒன்றுக்கொன்று குறுக்கானவை மற்றும் மாறுபக்கமாக மையநோக்கு நரம்புநாடா போன்று தொடர்ந்து ஏறுமுகமாகின்றன. இறுதியில், உள்நோக்கிய நரம்புநாடாவிலிருந்தான இரண்டாம்நிலை நரம்பிழைகள் முன்மூளை உள்ளறையின் வயிற்றுப்புற பிற்பக்கவாட்டான கருவில் (VPL) முடிவடையும், இங்கு இவை மூன்றாம்நிலை நரம்புக்கலங்களுடன் இணையும். அங்கிருந்து, மூன்றாம்நிலை நரம்புக்கலங்கள் உட்புற உறையின் பிற்பக்க மூட்டு வழியாக மேலேறி, முதன்மை உணர்ச்சிக்குரிய மேற்பட்டையில் நிறைவடையும்.

முன்பக்கவாட்டு தொகுதியானது சிறிதளவு வேறுபட்ட விதமாகச் செயலாற்றும். இதன் முதன்மை நரம்புக்கலங்கள் முள்ளந்தண்டு வடத்தில் நுழைந்து, பின்னர் ஜெலாட்டின் பொருளில் இணைவதற்கு முன்னதாக ஒன்று முதல் இரண்டு மட்டங்களுக்கு மேலேறும். இணைவதற்கு முன்னதாக மேலேறுகின்ற தடமானது லிஸ்ஸௌர் தடம் (Lissauer's tract) எனப்படும். இணைந்த பின்னர், இரண்டாம்நிலை நரம்பிழைகள் ஒன்றுக்கொன்றுகுறுக்காகி, முள்ளந்தண்டு வ்டத்தின் முற்பக்க, பக்கவாட்டான பகுதியில் ஸ்பைனோதால்மிக் தடமாக (spinothalamic tract) மேலேறும். இந்தத் தடமானது VPL க்கான அனைத்து வழியிலும் மேலேறி, அங்கு மூன்றாம்நிலை நரம்புக்கலங்களில் இணையும். பின்னர், மூன்றாம்நிலை நரம்புக்குரிய நரம்பிழைகள் உட்புற உறையின் பிற்பக்க மூட்டு வழியாக முதன்மை உணர்ச்சிக்குரிய மேற்பட்டைக்குச் செல்லும்.

ALS இலுள்ள சில "வலி நார்கள்" அவற்றின் பாதையிலிருந்து விலகி VPL ஐ நோக்கிச்செல்வதைக் குறிப்பிடுதல் அவசியமாகும். இதுபோன்ற ஒரு விலகலில், நரம்பிழைகளானவை மத்தியமூளையிலுள்ள சிறுவலையுரு அமைப்பை நோக்கிச் செல்கின்றன. சிறுவலையுரு அமைப்பானது பின்னர், மூளைப் பின்மேடு (வலி குறித்த நினைவுகளை உருவாக்க), மையக் கரு (centromedian nucleus) (பரவலான, குறிப்பிட்டுச் சொல்லமுடியாத வலியை உருவாக்க) மற்றும் மேற்பட்டையின் பல்வேறு பாகங்களுக்கும் நீட்டிக்கும். மேலும், சில ALS நரம்பிழைகள், மூளைப்பாலத்திலுள்ள பெரியாகியூடக்டல் கிரே (periaqueductal gray)க்கு நீட்டிக்கொள்ளும், பெரியாகியூடக்டல் கிரேயை உருவாக்கும் நரம்பிழைகள் கரு ஒட்டல் பெருந்தசைக்கு நீட்டிக்கும், இது பின்னர் வலி சமிக்ஞை உருவாகிய இடத்துக்கு திரும்ப நீட்டித்து, அதைத் தடுக்கும். இது வலி உணர்வதை சிறிதளவுக்குக் கட்டுப்படுத்த உதவும்.

இயக்க அமைப்பு[தொகு]

மூளையத்தற்குரிய மேற்பட்டையிலிருந்தும் பழங்கால மூளைத்தண்டு இயக்கக் கருவிலிருந்து வருகின்ற மேல் இயக்க நரம்புக்கலத்துக்குரிய சமிக்ஞைகளுக்கான இயக்க வழியாக புறணித் தண்டுவட தடம் செயலாற்றும்.

மேற்பட்டைக்குரிய மேல் இயக்க நரம்புக்கலங்கள் புராட்மான் பகுதிகளான 1, 2, 3, 4 மற்றும் 6 இலிருந்து உற்பத்தியாகி, உட்புற உறையின் பிற் மூட்டில், கால் மூளைத்திணிவுகள் (crus cerebri) ஊடாக, மூளைப்பாலம் ஊடாக கீழே சென்று, மையவிழையத்துக்குரிய பிரமிடுகளை அடையும், அங்கு 90% ஆன நரம்பிழைகள், பிரமிடுகளின் குறுக்குப் பின்னல் பகுதியில் எதிர்புறத்தை பதிக்கும் பக்கத்துக்குத் தாண்டிச் செல்லும். அவை பின்னர் பக்கவாட்டான புறணித் தண்டுவடம் தடமாக கீழிறங்கும். இந்த நரம்பிழைகள், முள்ளந்தண்டு வடத்தின் அனைத்து மட்ட வயிற்றுப்புற கொம்புகளுடன் இணைகின்றன. மிச்சமாகவுள்ள 10% நரம்பிழைகள் இப்பக்கவாட்டில் வயிற்றுப்பக்க புறணித் தண்டுவட தடமாக இறங்கும். இந்த நரம்பிழைகளும் வயிற்றுப்புற கொம்புகளில் கீழ் இயக்க நரம்புக்கலங்களுடன் இணையும். அவற்றில் பெரும்பாலானவை இணைவதற்குச் சற்று முன்னராக, வடத்தின் எதிர்புறத்தை பதிக்கும் பக்கத்துக்குத் தாண்டும் (முற்புற மூளை நரம்பு இணைப்பு ஊடாக).

நடுமூளை கருக்கள் நான்கு இயக்கத் தடங்களை உள்ளடக்கும், இவை மேல் இயக்க நரம்புகலத்துரிய நரம்பிழைகளை முள்ளந்தண்டு வடத்துக்குக் கீழாக கீழ் இயக்க நரம்புக்கலங்களுக்கு அனுப்பும். அவையாவன, செங்கரு முள்ளந்தண்டுவடத் தடம் (rubrospinal tract), முன்னறை முள்ளந்தண்டுவடத் தடம் (vestibulospinal tract), டெக்டோ முள்ளந்தண்டுவடத் தடம் (tectospinal tract) மற்றும் வலையுரு முள்ளந்தண்டுவடத் தடம் (reticulospinal tract) ஆகியவையாகும். The rubrospinal tract descends with the lateral புறணித் தண்டுவடம் tract, and the remaining three descend with the anterior புறணித் தண்டுவடம் tract.

கீழ் இயக்க நரம்புக்கலங்களின் செயல்பாட்டை இரண்டு வேறுபட்ட குழுக்களாகப் பிரிக்கப்படலாம்: பக்க புறணித் தண்டுவடத் தடம் மற்றும் முன் மேற்பட்டைக்குரிய முள்ளந்தண்டு தடம். பக்கவாட்டான தடமானது மேல் இயக்க நரம்புக்கலத்துக்குரிய நரம்பிழைகளைக் கொண்டிருக்கும், இவை முதுகுப் பக்கவாட்டான (DL) கீழ் இயக்க நரம்புக்கலங்களில் இணையும். DL நரம்புக்கலங்கள் சேய்மையிலுள்ள மூட்டுக் கட்டுப்பாட்டில் ஈடுபடுத்தப்படும். அதனால், இந்த DL நரம்புக்கலங்கள் முள்ளந்தண்டு வடத்தினுள் குறிப்பாக கழுத்துக்குரிய மற்றும் இடைதிருக பெரிதாக்கங்களில் மட்டுமே காணப்படும். மையவிழையத்துக்குரிய பிரமிடுகளிலுள்ள குறுக்குப் பின்னலுக்குப் பின்னர், பக்கவாட்டான புறணித் தண்டுவடத் தடத்தில் குறுக்குப் பின்னல் எதுவும் இல்லை.

முற்புற புறணித் தண்டுவடத் தடமானது இப்பக்கமாக முற்பக்க கம்பத்தில் கீழிறங்கும், அங்கு நரம்பிழைகள் ஒன்றுபட்டு, வயிற்றுப்புற கொம்பில் இப்பக்கமாக கீழ் வயிற்றுப்புறமாக உள்நோக்கிய (VM) இயக்க நரம்புக்களங்களில் இணைகின்றன அல்லது முற்புற மூளை நரம்பு இணைப்பில் குறுக்குமறுக்காகச் செல்லும், இங்கு அவை VM கீழ் இயக்க நரம்புக்கலங்களில் மாறுபக்கமாக இணைகின்றன. டெக்டோ முள்ளந்தண்டுக்குரிய, முன்னறை முள்ளந்தண்டுக்குரிய மற்றும் வலையுரு முள்ளந்தண்டுக்குரியவை முற்புற கம்பத்தில் இப்பக்கமாக கீழிறங்கும், ஆனால் முற்புற மூளை நரம்பு இணைப்புக்கு மறுபக்கத்தில் இணைய மாட்டா. இதைவிட, அவை மட்டுமே VM கீழ் இயக்க நரம்புக்கலங்களில் இப்பக்கமாக இணையும். VM கீழ் இயக்க நரம்புக்கலங்களானவை அச்சுக்குரிய எலும்புக்கூட்டின் பெரிய, நிலுவைய தசையைக் கட்டுப்படுத்தும். இந்த கீழ் இயக்க நரம்புக்கலங்கள், DL இன் நரம்புக்கலங்கள் போலல்லாது, முள்ளந்தண்டு வடம் முழுவதுமுள்ள வழி அனைத்திலுமுள்ள வயிற்றுப்புற கொம்பில் அமைந்திருக்கும்.

தண்டுவட சிறுமூளைத் தடங்கள்[தொகு]

உடலிலுள்ள அசைவு சீர்செய்யும் தகவலானது, மூன்று தடங்கள் வழியாக முள்ளந்தண்டு வடத்தில் மேல்நோக்கிச் செல்லும். L2 க்கும் கீழாக, அசைவு சீர்செய்யும் தகவலானது, வயிற்றுப்புற தண்டுவட சிறுமூளைத் தடத்தில் முள்ளந்தண்டுவடத்தில் மேல்நோக்கிச் செல்லும். முற்பக்க தண்டுவட சிறிமூளைத் தடம் எனவும் அழைக்கப்படும், உணர்ச்சி வாங்கிகள் தகவலை உள்ளெடுத்து முள்ளந்தண்டு வடத்தினுள் பயணிக்கும். இந்த முதன்மை நரம்புக்கலங்களின் கல உடல்கள் முதுகுப்புற வேர் நரம்புக்கலத் திரளில் அமைந்திருக்கும். முள்ளந்தண்டு வடத்தில், நரம்பிழைகள் இணைந்து, இரண்டாம்நிலை நரம்புக்கலத்திற்குரிய நரம்பிழைகள் ஒன்றுக்கொன்று குறுக்காகச் சென்று, பின்னர் மேன்மையான சிறுமூளைக்குரிய இணைக்காம்பு வரை செல்லும், அங்கு அவை மீண்டும் ஒன்றுக்கொன்று குறுக்காகச் செல்லும். இங்கிருந்து, தகவலானது உச்சநிலையான மற்றும் இடைச்செருகிய கருக்கள் உள்ளடங்கலான சிறுமூளையின் ஆழமான கருக்களுக்குக் கொண்டுசெல்லப்படும்.

L2 முதல் T1 வரையான மட்டங்கள் வரை, அசைவு சீர்செய்ய்ம் தகவலானது முள்ளந்தண்டு வடத்திற்குச் சென்று, இப்பக்கமாக மேலேறும், அங்கு அது கிளார்க்கின் கருவில் இணையும். இரண்டாம்நிலை நரம்புக்கலத்துக்குரிய நரம்பிழைகள் இப்பக்கமாக தொடர்ந்து மேலேறி, பின்னர் கீழ்ப்புறமான சிறுமூளைக்குரிய இணைக்காம்பு வழியாக சிறுமூளைக்குள் கடக்கும். இந்த தடமானது முதுகுப்புற முள்ளந்தண்டு சிறுமூளைக்குரிய தடம் எனப்படும்.

மேலுள்ள T1 இலிருந்து,அசைவு சீர்செய்யும் முதன்மை நரம்பிழைகள் முள்ளந்தண்டு வடத்தில் நுழைந்து, துணையான ஆப்புவடிவ கருவை அடையும்வரை இப்பக்கமாக மேலேறும், அங்கு அவை இணையும். இரண்டாம்நிலை நரம்பிழைகளானவை கீழ்ப்புறமான சிறுமூளைக்குரிய இணைக்காம்பு வழியாக சிறுமூளைக்குள் செல்லும், அங்கு மீண்டும் அந்த நரம்பிழைகள் சிறுமூளைக்குரிய ஆழமான கருக்களில் இணையும். இந்தத் தடமானது குனியோசெரிபெல்லர் (cuneocerebellar) தடம் எனப்படும்.

இயக்க தகவலானது மூளையிலிருந்து, கீழிறங்குகின்ற முள்ளந்தண்டு வடத் தடங்கள் வழியாக முள்ளந்தண்டு வடத்துக்குச் செல்லும். கீழிறங்கும் தடங்கள் இரண்டு நரம்புக்கலங்களை உள்ளடக்கும்: மேல் இயக்க நரம்புக்கலம் (UMN) மற்றும் கீழ் இயக்க நரம்புக்கலம் (LMN) [2]. ஒரு நரம்புச் சமிக்ஞையானது, முள்ளந்தண்டு வடத்தில் கீழ் இயக்க நரம்புக்கலத்துடன் இணையும்வரை மேல் இயக்க நரம்புக்கலத்திலிருந்து கீழ்நோக்கிச செல்லும். பின்னர், கீழ் இயக்க நரம்புக்கலமானது நரம்புச் சமிக்ஞையை முள்ளந்தண்டு மூலத்துக்குக் கடத்தும், இங்கு வெளிச்செல்கின்ற நரம்பு நார்கள் இயக்க சமிக்ஞையை இலக்குத் தசையை நோக்கிக் காவும். கீழிறங்கும் தடங்கள் வெண்பொருளால் ஆனது. வேறுபட்ட செயல்பாடுகளைப் புரியும் பல கீழிறங்கும் தடங்கள் உள்ளன. புறணித் தண்டுவடத் தடங்கள் (பக்கவாட்டான மற்றும் முற்பக்கமான) ஒருங்கிணைக்கப்பட்ட மூட்டு இயக்கங்களுக்குப்[2] பொறுப்பானவை.

காயம்[தொகு]

முள்ளந்தண்டுக் கம்பத்துக்கு ஏற்படும் கேட்டால் முள்ளந்தண்டு வடக் காயங்கள் ஏற்படலாம் (இழுபடுதல், நெரிபடுதல், அழுத்தம் பிரயோகித்தல், உடைதல், கீறல்விழுதல், இன்னும்பல). முள்ளெலும்புகள் அல்லது முள்ளெலும்புகளிடைத் தட்டுகள் நொறுங்கலாம், இதனால் எலும்பின் கூரிய துண்டால் முள்ளந்தண்டு வடம் துளையிடப்படலாம். வழக்கமாக, முள்ளந்தண்டு வட காயங்களுக்கு உள்ளானவர்கள், அவர்களின் உடலின் குறிப்பிட்ட பாகங்களில் உணர்வை இழப்பார்கள். ஆபத்தில்லாத சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர் கை அல்லது காலின் செயற்பாட்டை மட்டும் இழக்கக்கூடும். கூடுதலான ஆபத்துள்ள காயங்கள் கீழங்கவாதம், நாலங்கவாதம் அல்லது முள்ளந்தண்டு வடத்து காயம் ஏற்பட்ட இடத்துக்கு கீழுள்ள முழு உடலையும் (கைகால் வழங்காமை அல்லது பாரிசவாதம் என அழைக்கப்படும்) செயலிழக்கச் செய்யும்.

முள்ளந்தண்டு வடத்தில் மேலுள்ள இயக்க நரம்புக்கல இழைகளுக்கு ஏற்படும் சேதம் இப்பக்க குறைபாடுகளின் சிறப்பியல்பான வடிவத்தை விளைவிக்கும். இதில் வன்தன்னெதிரிணக்கம், அதிவிறைப்பு மற்றும் தசை பலவீனம் ஆகியவை உள்ளடங்கும். கீழுள்ள இயக்க நரம்புக்கலச் சேதமானது அதற்கென உரிய சிறப்பியல்பான வடிவ குறைபடுகளை விளைவிக்கும். குறைபாடுகளின் முழுப் பக்கத்தைவிட, சேதத்தால் பாதிக்கப்பட்ட தசைத் துண்டத்துடன் தொடர்பான ஒரு அமைப்பு உள்ளது. மேலதிகமாக, கீழ் இயக்க நரம்புக்கலங்களானவை தசைப் பலவீனம், தளர்ச்சி, குறைந்த தன்னெதிரிணக்கம் மற்றும் தசை நலிவு ஆகியவற்றால் குறிப்பிடப்படும்.

முள்ளந்தண்டுக் காயம் காரணமாக முள்ளந்தண்டு அதிர்ச்சி மற்றும் நரம்பு ஆற்றல் முடுக்க அதிர்ச்சி ஆகியன ஏற்படலாம். முள்ளந்தண்டு அதிர்ச்சி என்பது பொதுவாக தற்காலிகமானது, 24-48 மணிநேரங்களுக்கு மட்டுமே நீடித்திருக்கும், மேலும் தற்காலிகமாக உணர்ச்சி மற்றும் இயக்க செயல்பாடுகளைத் தற்காலிகமான இழக்கும். நரம்பு ஆற்றல் முடுக்க அதிர்ச்சியானது சில வாரங்களுக்கு நீடித்திருந்து, காயப்பட்ட இடத்துக்குக் கீழாக உள்ள தசைகள் வழங்காமல் விடுவதன் காரணமாக தசை நயம் இழக்கப்படலாம்.

மிகப் பொதுவாக காயத்துக்கு உள்ளாகும் முள்ளந்தண்டு வடத்தின் இரு பகுதிகளாவன, கழுத்துக்குரிய முள் (C1-C7) மற்றும் நாரி முள் (L1-L5). (குறிப்பு C1, C7, L1, L5 ஆகியன முள்ளின் கழுத்துக்குரிய, மார்புக்குரிய அல்லது நாரிக்குரிய பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட முள்ளெலும்பின் இருப்பிடத்தைக் குறிக்கும்.)

முள்ளந்தண்டு வட மரபுத்தொகுதிக்குரிய வரைபடம்[தொகு]

ஜூலை 16, 2008 ஆம் ஆண்டில், அலென் இன்ஸ்டிடியூட் ஃபார் பிரெய்ன் சயின்ஸ், ஆன்லைன் "அலென் ஸ்பைனல் கோர்ட் ஆட்லஸை" (பால் அலென் என்பவர் ஆதரவளித்தார்) தொடங்கியது. இதன் முதலாவது வெளியீடானது 4000 தொகுதி டிஜிட்டல் படங்களை உள்ளடக்கியது, இவை வேறுபட்ட மரபணுக்களுக்கான இடம்சார்ந்த வெளிப்பாட்டு அமைப்புகளைக் காண்பித்தன.[3] பூரணமானபோது, வயது வந்த மற்றும் இளமைப்பருவ சுண்டெலி முள்ளந்தண்டு வடங்களில் 20,000 மரபணுக்களை வரையத் திட்டமிடப்பட்டது. முள்ளந்தண்டு வட ஆட்லஸானது சுண்டெலி மூளையின் அலென் இன்ஸ்டிடியூட்டின் ஆரம்பகால ஆட்லஸ் போலவே ஒழுங்கமைக்கப்பட்டது.[4][5]

மேலும் பார்க்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Spinal cord
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • முள்ளந்தண்டுக்கடைவால் (கோடா இக்குவைனா)
  • கூம்பு முதுகெலும்புத் தண்டு (கோனஸ் மெடுல்லாரிஸ்)
  • சவ்வுகள் (மெனின்ஜஸ்)
  • முள்ளந்தண்டு நரம்புகள்
  • நாரித் துளை
  • நடுநிலை ஊசி
  • வாத மரப்பு நோய்க் குறிகள்

குறிப்புதவிகள்[தொகு]

  1. Maton, Anthea; Jean Hopkins, Charles William McLaughlin, Susan Johnson, Maryanna Quon Warner, David LaHart, Jill D. Wright (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. பக். 132–144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-981176-1. https://archive.org/details/humanbiologyheal00scho. 
  2. 2.0 2.1 சலடின் அனட்டமி அண்ட் பிசியோலாஜி 5வது பதிப்பு.
  3. "Gene Search :: Spinal Cord". mousespinal.brain-map.org. பார்க்கப்பட்ட நாள் 2010-02-23.
  4. "msnbc.msn.com, ஜீன் மப் சாட்ஸ் ஸ்பைனல் கோட் மிஸ்டீரிஸ்". Archived from the original on 2011-02-02. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  5. "sciencenews.org/view, மப் குவஸ்ட் ஃபார் தி மவுஸ் ஸ்பைனல் கோட்". Archived from the original on 2011-05-24. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.

புற இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Organ systems வார்ப்புரு:Nervous system வார்ப்புரு:Spinal cord

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளந்தண்டு_வடம்&oldid=3583642" இலிருந்து மீள்விக்கப்பட்டது