குரல்வளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குரல்வளை
Illu conducting passages-ta.jpg
Conducting passages
Kehlkopf Pferd.jpg
குதிரையின் குரல்வளையூடான வெட்டுப் பார்வை

1 நாவடி எலும்பு
2 குரல்வளை மூடி
3 vestibular fold
4 vocal fold
5 Ventricularis muscle
6 குரல்வளை அறை
7 Vocalis muscle
8 Adam's apple
9 rings of குருத்தெலும்பு
10 infraglottic cavity
11 first bronchial tube cartilage
12 bronchial tube
கிரேயின்

subject #236 1072

தமனி superior laryngeal, inferior laryngeal
நரம்பு superior laryngeal (வெளி மற்றும் உள்), recurrent laryngeal
ம.பா.தலைப்பு குரல்வளை

குரல்வளை (larynx) என்பது, பாலூட்டிகளின் கழுத்துப் பகுதியில் காணப்படுகின்ற ஓர் உறுப்பாகும். இது, மூச்சுக் குழலுக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், ஒலி உருவாக்கத்துக்கும் உதவுகிறது. குரல்வளை குரல் மடிப்புக்களைத் தன்னுள் அடக்கியிருப்பதுடன், தொண்டைக் குழாய், உணவுக் குழாயாகவும் மூச்சுக் குழாயாகவும் பிரியும் இடத்துக்குச் சற்றுக் கீழே அமைந்துள்ளது.

செயற்பாடு[தொகு]

ஒலி குரல்வளையில் உருவாக்கப்படுகிறது. இங்கேதான் குரல் எடுப்பும், உரப்பும் உருவாகின்றன. நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்றின் வலுவும் உரப்பின் அளவைத் தீர்மானிப்பதுடன், இது குரல் மடிப்புக்கள் பேச்சை உருவாக்குவதற்குத் தேவையானது. குரல்வளையின் செயற்பாடு, ஒரு குறிப்பிட்ட குரல் எடுப்போடு அல்லது மீடிறனோடு கூடிய ஒலியை உருவாக்குகின்றது. இந்த ஒலி குரல் தொகுதியூடாக வரும்போது மாற்றமுறுகின்றது. இவ்வொலி, நாக்கு, உதடு, வாய், தொண்டைக் குழி ஆகியவற்றின் நிலைகளுக்கு ஏற்பப் பல்வேறு விதமாக மாறுகின்றது. இவ்வாறாக ஒலி மாற்றமடைவதன் மூலமே உலகின் மொழிகளிலுள்ள உயிர் மற்றும் மெய்யொலிகள் உருவாகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரல்வளை&oldid=2227016" இருந்து மீள்விக்கப்பட்டது