உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனித வாய்

வாய் உயிரினங்கள் உணவு, நீரினை உட்கொள்ளப் பயன்படும் உறுப்பாகும். எல்லாப் பாலூட்டிகளிலும் வாய் முகத்தில் அமைந்துள்ளது. பாலூட்டியல்லாத வேறு சில உயிரினங்களில் உடலின் வேறு பகுதிகளில் வாய் காணப்படுகிறது. சில உயிரினங்களில் குடல் இல்லாததால் வாயினூடாகவே கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

பெரும்பாலான விலங்குகளின் உடலில் ஒரு பகுதியில் வாயும் மறுபகுதியில் குதமும் முழுமையான சமிபாட்டுத் தொகுதியைக் கொண்டுள்ளன. பொதுவாக வாயின் பயன்பாடு உணவு உட்கொள்ளுதலாகும். பாம்பு நஞ்சினைச் செலுத்தவும் வாயினைப் பயன்படுத்துகிறது. பல விலங்குகள் உணவு உட்பட்ட பொருட்களைப் பிடிக்க வாயினையே பயன்படுத்துகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்&oldid=2740780" இலிருந்து மீள்விக்கப்பட்டது