கூம்புச் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூம்புச் சுரப்பி
மனித மூளையில் பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பியைக் காட்டும் படம்
இலத்தீன் glandula pinealis
கிரேயின்

subject #276 1277

தமனி மேல்ச் சிறுமூளைத் தமனி
முன்னோடி Neural Ectoderm, டயன்செஃபலானின் கூரை
ம.பா.தலைப்பு Pineal+gland
Dorlands/Elsevier g_06/12392585

கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி (pineal gland) முதுகுநாணிகளின் மூளையில் இரு பெரும் பகுதிகளுக்கு இடையேயும் மூளையின் நடுப்பகுதியிலும் காணப்படும் ஓர் அரிசியின் அளவே உள்ள சிறிய சுரப்பி ஆகும். மூன்றாவது கண் எனவும் அழைக்கப்படும் இது ஐந்து முதல் எட்டு மில்லி மீட்டர் அளவே உள்ளது. இது உடல் செயல் பாட்டில் பெரும் பங்கினை வகிக்கிறது. இது செரட்டோனினின் வழிப்பொருளான தூக்கத்தினைத் தூண்டும் மெலட்டோனினைச் சுரக்கிறது. மெலட்டோனின் தான் நம் உடலில் விழிப்பு - துயில் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.[1][2]. மேலும் முடிவுறா மூலக்கூறுகளை (free radicals) எதிர்க்கவும், பெண்களின் முதல் மாதவிடாயை முறைப்படுத்தவும் துணை நிற்கிறது. இந்த சுரப்பின் செயல்பாட்டினை நிறுத்தினால் தூக்கம் கெடுவதுடன் பல திடுக்கிடும் உடல்நலக் குறைவுகளும் ஏற்படுகிறது. இது பார்க்க சிறிய பைன் கூம்பை ஒத்திருப்பதால் பைனியல்/பீனியல் சுரப்பி எனப் பெயர் பெற்றது[3]. இது மூளையின் நடுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.

பரிமாணம்[தொகு]

இது மிகச் சிறியது. இதன் பரிமாணங்கள் (8x4x4)மி.மீ ஆகும். இதன் சராசரி எடை 0.1 கிராம் ஆகும்.

அமைவிடமும் அதன் பயனும்[தொகு]

இச் சுரப்பி குழந்தைகளில் பெரியதாகவும்[4][5] வளர வளர சிறிதாகி கால்சியம் படிந்து போகும். ஆகவே X-கதிர் படத்தில் இது தெளிவாகத் தெரியும். மூளையின் ஏதேனும் ஒரு பகுதியில் புற்றுக்கட்டி வளருமாயின் மையப்பகுதியில் காணப்பட வேண்டிய சுரப்பி X-கதிர் படத்தில் நடுவிலகிக் காணப்படும்.

ஆலன் (Halen) போன்ற அறிஞர்கள், இந்த சுரப்பினை ஆன்மாவின் இருப்பிடம் என்றும் உங்கள் எண்ணங்கள் உருவாகும் இடம் என்று கூறுகிறார்கள். இச்சுரப்பியில் படியும் சுண்ணாம்புச் சத்தினால் ஏற்படும் அழுத்தம் வலியினை தோற்றுவிக்கிறது. சோடியம் ஃபுளூரைடு நாம் அருந்தும் நீரில் உள்ளது. பிற உணவுப் பொருட்களிலும் காணப்படும் ஃபூளுரைடு பீனியல் சுரப்பியில் சேருவதாலேயே நோய்கள் ஏற்படுகின்றன. இது 1990 களுக்குப் பின் பல பல்கலைக் கழகங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் இது தெரிய வந்துள்ளது. தைராய்டு சுரப்பி எவ்வாறு ஐயோடினை சிறப்பாக ஏற்கிறதோ அதேபோல் பீனியல் சுரப்பி ஃபூளுரைடை ஏற்கிறது. சர்ரே பல்கலைக் கழகம் 1997 இல் வேறு எந்த மென்தசைகளையும் விட, பீனியல் சுரப்பி மென்திசு அதிக அளவில் ஃபூளுரைடை ஏற்கிறது எனக் கண்டறிந்தனர். இது நோய் ஏதிர்ப்புப் பண்பு, செரிமானத் தொகுதி, மூச்சுத் தொகுதி, குருதி ஓட்டத்தொகுதி, மற்றும் சிறுநீர் சுரப்பித் தொகுதிகளில் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றது. பத்து லெட்சத்தில் 330 பங்குகள் வரையில் ஃபூளுரின் இருக்கலாம். அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையம் (EPA) தண்ணீருக்கு இது மூன்று பிபிஎம் (ppm) வரை இருக்கலாமென வரையறை செய்துள்ளது. எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வுகள், மெலடோனின் குறைபாட்டால் குறைந்த வயதில் பூப்படைவதுக் காணப்பட்டுள்ளது.

புற்றுநோய்[தொகு]

பீனியல் சுரப்பிப் புற்றுநோய் என்பது நாளமில்லாச் சுரப்பியான கூம்புச் சுரப்பியில் தோன்றும் புற்றுநோயாகும். புற்றிற்கான அறிகுறிகள்: மைய நரம்பு மண்டல நீர் தடைபடுதல், கண்களின் இயக்கத்தில் மாற்றம், தலைவலி, வாந்தி, குமட்டல், எல்லாம் இரண்டாகத் தோன்றுவது போன்றவையாகும்.

பீனியோசைட்டோமா மெதுவாக வளரும் பலவகையான உயிரணுக்களுடன் காணப்படும். பீனியோபிளாஸ்டோமா வீரியம் மிக்கது. மூளைப்புற்று நோயில், பீனியல் புற்றுநோய் ஒரு விழுக்காடாக உள்ளது. 3 முதல் 8 விழுக்காடு சிறார்களிடமும் காணப்படுகின்றது. 20 முதல் 40 வயதினரிடம் அதிகமாக உள்ளது. பினியல்பிளாஸ்டோமா மூளை தண்டுவட நீர் (csf) வழியாக பிற இடங்களுக்கு எளிதில் பரவுகிறது. இந்த புற்றுத் தோன்ற காரணம் இன்னது என்று தெரியவில்லை. மரபணுவில் ஏற்படும் சடுதிமாற்றம் (mutation) காரணமாக இருக்கலாம். அறுவைமூலம் அழுத்தத்தினைக் குறைக்கலாம். கதிர் மருத்துவமும் வேதி மருத்துவமும் பலனளிக்கக்கூடும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Macchi M, Bruce J (2004). "Human pineal physiology and functional significance of melatonin". Front Neuroendocrinol 25 (3–4): 177–95. doi:10.1016/j.yfrne.2004.08.001. பப்மெட்:15589268. 
  2. Arendt J, Skene DJ (2005). "Melatonin as a chronobiotic". Sleep Med Rev 9 (1): 25–39. doi:10.1016/j.smrv.2004.05.002. பப்மெட்:15649736. "Exogenous melatonin has acute sleepiness-inducing and temperature-lowering effects during 'biological daytime', and when suitably timed (it is most effective around dusk and dawn) it will shift the phase of the human circadian clock (sleep, endogenous melatonin, core body temperature, cortisol) to earlier (advance phase shift) or later (delay phase shift) times.". 
  3. Bowen, R. "The Pineal Gland and Melatonin". பார்க்கப்பட்ட நாள் 14 October 2011.
  4. Tapp E, Huxley M. The weight and degree of calcification of the pineal gland. J Pathol 1971;105:31–39
  5. Tapp E, Huxley M. The histological appearance of the human pineal gland from puberty to old age. J Pathol 1972;108:137–144

வெளி இணைப்புகள்[தொகு]

[பீனியல் சுரப்பி, டாக்டர் கு. கணேசன், இந்து தமிழ் சூலை 18]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூம்புச்_சுரப்பி&oldid=3397886" இலிருந்து மீள்விக்கப்பட்டது