நுரையீரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lung
Diagram of the lungs with the respiratory tract visible, and different colours for each lobe
விளக்கங்கள்
அமைப்புமூச்சுத் தொகுதி
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்pulmo
கிரேக்கம்πνεύμων (pneumon)
MeSHD008168
TA98A06.5.01.001
TA23265
உடற்கூற்றியல்

நுரையீரல் (lung) என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக உடல் உறுப்புக்களில் ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூச்சுவிடல் என்று பெயர். வாயுப் பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் கார்பன்டைக்சைடு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மருத்துவத்தில் பயன்படும் நுரையீரல் தொடர்பான இலத்தீன் அடிப்படைச் சொல் பல்மோ- (pulmo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இது இலத்தீன் மொழிச்சொல்லாகிய பல்மொனாரியசு (pulmonarius = "நுரையீரல் தொடர்பான") என்னும் பொருளடியான சொல்லில் இருந்து பெற்றது. இன்னுமொரு பொதுவான மருத்துவக் கலைச்சொல் கிரேக்கமொழிச் சொல்லில் இருந்து பெற்ற நியுமோ- (pneumo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இச்சொல் நுரையீரலைக் குறிக்கும் ப்நியுமோன் (πνεύμων) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றது.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (பிரான்கியல் குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகிய அல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். அல்வியோலை எனப்படும் இவ் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது. நுண்காற்றறைகள் (ஆல்வியோலை) சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும்.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்.

நுரையீரலைச் சுற்றி வெளிப்படலம் உள்படலம் என இரண்டு உறைகள் உள்ளன. இந்த இரண்டு படலங்களுக்கும் இடையே ஒரு இடம் உண்டு. அதற்கு ஃப்ளூரல் இடம் என்று பெயர். இதனுள் மிகச் சிறிய அளவு ஃப்ளூரல் திரவம் இருக்கும். இந்தத் திரவம்தான் சுவாசத்தின் போது நுரையீரல்களின் அசைவினால் உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தி சீராக வைப்பதே முகுளப்பகுதி. அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 18 முதல் 20 சுவாசம் என சீராக வைப்பது மூளையில் உள்ள முகுளத்தின் வேலை.

மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர்.

சுவாசச் சிற்றறையின் கட்டமைப்பு

மூச்சு[தொகு]

காற்றில் உள்ள ஆக்சிசனை (ஆக்சிசன் = உயிர்வளி, பிராணவாயு) இரத்ததில் சேர்ப்பதும் இரத்ததில் உள்ள காபனீரொக்சைடை (க ரிமக்காடி வளிமம் அல்லது கரியமிலவாயு)வை பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.

புதிர்க்கதிர்கள் மூலம் அறியப்பட்ட மாந்தரின் நுரையீரல்கள்.

நுரையீரல் பாதிப்படையல்[தொகு]

இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.பிறக்கிற குழந்தைகளில் சிலருக்கு நுரையீரலில் நீர்க் கட்டிகள் (பிரான் கைடிஸ் ஸிஸ்டிக்ஸ்) வரலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு பிறக்கிறபோதே நுரையீரலில் சிறுபகுதி பிரிந்திருக்கும். இதற்கு "ஸ்குவாட்ராஸ்டேசன்" என்று மருத்துவப்பெயர். இந்த பிறவி நுரையீரல் பாதிப்புகளை குணப் படுத்துகிற அல்லது கட்டுப்படுத்துகிற அளவிற்கு இன்றைய நவீன மருத்துவம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.பனிக்காலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, குவாரி, சிமெந்து உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது முகத்துக்கு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.இதனைத் தடுக்க பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம். தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் முக மூடி அணிவது நல்லது.பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிக்கலாம். புகைப் பிடிப்பதை தவிர்ப்பது முக்கியமாகும்உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடலாம்.துளசி இலை சிறிதளவு, இரண்டு சிட்டிகை - மிளகு தூள், சுக்கு தூள், மல்லித்தூள் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை 400 மில்லி தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பாதியாக 200 மில்லியாக வற்றியதும் பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து தினமும் குடித்து வந்தால் நுரையீரல் பலம் பெறும்.

பிராங்கோஸ்கோபி[தொகு]

பிராங்கோஸ்கோபி எனப்படுவது நுரையீரல் பாதிப்புகளுக்கான அதி நவீன சிகிச்சை சாதனம் ஆகும்.இந்த அதிநவீன சாதனத்தின் மூலம் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்த முடியும். நுரையீரலில் வருகின்ற பாதிப்புகளை மிக துல்லியமாக கண்டறியவும் இச்சாதனம் பயன்படுகிறது.. இந்த பிராங்கோஸ்கோபி மூலம் நுரையீரல் புற்றுநோய், பிற நோய்களால் நுரையீரல் பாதிப்படைவது, இண்டஸ்டிரியல் நுரையீரல் நோய்கள், நுரையீரலில் அந்நிய பொருட்கள் இருப்பது, போன்றவற்றை கண்டறிந்து குணப்படுத்தலாம். அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் சளியால் அவஸ்தைப்பட்டால் அவர்களின் சளியை இச்சாதனத்தின் மூலம் பிரித்து எடுக்கலாம். நுரையீரலில் கட்டிகள் இருந்தால் பயாப்ஸி எடுக்கவும் இது பயன்படுதப்படும். நுரையீரலில் இருந்து நீரை எடுத்து புற்றுநோயாளிகளுக்கு பரிசோதிக்கவும் இது பெரிதும் பயன்படுகிறது. குரல்நானில் பிரச்சினை இருந்தாலும் சரியாக பரிசோதனை செய்து சிகிச்சை செய்ய உதவுகிறது.

மூச்சு இழுத்துவிடுதல் தவிர இதர பணிகள்[தொகு]

வாயுப் பரிமாற்றம் தவிர நுரையீரல் வேறு சில பணிகளையும் செய்கிறது

  • இருதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருப்பது மற்றும் இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பது
  • சிரைகளில் ஏற்படும் இரத்தக் கட்டுகளை உடலின் பிற பகுதிகளுக்கு செல்லாமல் தடுப்பது
  • சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது
  • வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்க செய்வது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுரையீரல்&oldid=3374938" இலிருந்து மீள்விக்கப்பட்டது