உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுநீர்ப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுநீர்ப்பை
1. மனித சிறுநீர்த்தொகுதி: 2. சிறுநீரகம், 3. சிறுநீரக உட்பகுதி, 4. சிறுநீர்க்குழாய், 5. சிறுநீர்ப் பை, 6. சிறுநீர்வழி. (இடது பக்கத்தில் முன்வெட்டுத் தோற்றம்)
7. அண்ணீரகச் சுரப்பி
கலங்கள்: 8. சிறுநீரக தமனி மற்றும் சிரை, 9. கீழ் பெருஞ்சிரை, 10. அடிவயிற்றுத் தமனி, 11. பொது இலியகத் தமனியும் சிரையும்
ஒளி ஊடுருவலாக: 12. கல்லீரல், 13. பெருங்குடல், 14. இடுப்பு வளையம்
விளக்கங்கள்
முன்னோடிசிறுநீர்
அமைப்புசிறுநீர்த்தொகுதி
தமனிமேல் நீர்ப்பைத் தமனி
கீழ் நீர்ப்பைத் தமனி
தொப்புள் தமனி
யோனிக்குழாய் தமனி
சிரைநீர்ப்பை சிரைப் பிணைப்பு
நரம்புநீர்ப்பை நரம்புப் பிணைப்பு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்வெசிகா யூரினரியா
MeSHD001743
TA98A08.3.01.001
TA23401
FMA15900
உடற்கூற்றியல்

சிறுநீர்ப் பை (urinary bladder) மனிதர்களிடமும் சில விலங்குகளிலும் சிறுநீரகங்களிலிருந்து வெளியேறும் சிறுநீரை, சிறுநீர்க்கழிப்பாக வெளியேற்றும் முன்னர், சேகரித்து சேமிக்கும் ஓர் வெறுமையான தசை உறுப்பு அல்லது பை ஆகும். மனிதர்களில் இது கூபகத்தளத்தில் அமர்ந்துள்ள வெறுமையான தசையாலான விரிவடையக் கூடிய உறுப்பாகும். சிறுநீர்ப்பைக்கு சிறுநீர்க்குழாய் வழியாக வரும் சிறுநீர் சிறுநீர்வழி மூலமாக வெளியேறுகிறது. இயல்பான மனித நீர்ப்பை சிறுநீர் வரும் உணர்வைத் தூண்டுவதற்கு முன்னர் 300க்கும் 500 மிலிக்கும் (10.14 - 16.91 நீ அவு) அளவிலான சிறுநீரை சேமித்து வைக்க முடியும்.[1][2]

கட்டமைப்பு

[தொகு]
ஆண், பெண் சிறுநீர்ப் பைகள் - பக்கவாட்டு குறுக்குவெட்டு
ஆணின் சிறுநீர்ப்பை அமைந்துள்ள இடமும் தொடர்புள்ள கட்டமைப்புகளும்

மனிதர்களில் சிறுநீர்ப்பை கூபகத் தளத்தின் அடிப்புறத்தில் உட்புறம் வெறுமையான தசையாலான உறுப்பாகும். சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர்க்குழாய் வழியாக வரும் சிறுநீர் நீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது. நீர்ப்பையிலிருந்து ஒரே தசைக்குழாயாக சிறுநீர் துளையுடன் முடியும் சிறுநீர்வழியாக சிறுநீர் உடலிலிருந்து வெளியேறுகிறது. உடற்கூறு வல்லுநர்கள் சிறுநீர்ப்பையை இவ்வாறு பிரிக்கின்றனர்:.[3]

  • பரந்த அடிப்புறம்
  • உடல்
  • உச்சி
  • கழுத்து

உச்சி முன்புறமாக நோக்கியவண்ணம் பூப்பெலும்பொட்டின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அங்கிருந்து நடுவண் தொப்புள் தசைநாண் முன்புற வயிற்றுச்சுவரின் பின்னால் தொடர்ந்து மேல்நோக்கி தொப்புளுக்குச் செல்கிறது. இந்த தசைநாண் வயிற்று உள்ளறையைத் தாங்கி உச்சியிலிருந்து வயிற்றுச்சுவருக்குச் சென்று நடு தொப்புள் மடிப்பை உருவாக்குகிறது.

நீர்ப்பையின் கழுத்து உள்ளக சிறுநீர்ப் புறவழியைச் சுற்றியுள்ள முக்கோணப்பகுதியின் அடியில் உள்ள பகுதியாகும்; இங்கிருந்து சிறுநீர்க்குழாய் துவங்குகின்றது.[3] ஆண்களில் நீர்ப்பையின் கழுத்து முன்னிற்கும் சுரப்பியை அடுத்துள்ளது.

மூன்று திறப்புகள், இரண்டு சிறுநீர்க்குழாய் துளைகளும் உள்ளக சிறுநீர் புறவழியும் முக்கோண பகுதியை உருவாக்குகின்றன. இது நீர்ப்பையின் முக்கோணப்பகுதி எனப்படுகின்றது. இந்த துளைகளின் முன்னால் மென்சவ்வு இதழ்கள் உள்ளன; இவை ஒருபோக்கியாக சிறுநீர் மீளவும் சிறுநீர்க்குழாய்களுக்குள் செல்லாமல் தடுக்கின்றன.[4] இரண்டு சிறுநீர்க்குழாய் புறவழிகளுக்கும் இடையே உயர்ந்துள்ள திசுக்கள் சிறுநீர்க்குழாயிடை முகடு எனப்படுகின்றது.[3] இதுவே முக்கோணப் பகுதியின் மேலெல்லையாகும். மென்தசையாலான முக்கோணம் நீர்ப்பையின் அடிப்பாகமாக விளங்குகின்றது.[5] இந்தப் பகுதி மென்தசையாக இருப்பதால் நீர்ப்பையின் இப்பகுதியில் சிறுநீர் எளிதாக உள்ளேறவும் வெளியேறவும் வகை செய்கிறது.

ஆண்களில், சிறுநீர்வழிக்கான திறப்பிற்கு வெளியே முன்னிற்கும் சுரப்பி உள்ளது. இச்சுரப்பியின் நடு மடல், உள்ளக சிறுநீர் புறவழிக்குப் பின்னால் உள்ள சளிச்சவ்வில் சிறிய ஏற்றத்தை உருவாக்குகிறது. இப்பகுதி நீர்ப்பையின் உள்நாக்கு எனப்படுகின்றது; முன்னிற்கும் சுரப்பி பெரிதாகும்போது இந்த அடிநாக்கும் பெரிதாகிறது.

பரிவிரிக்குழிக்கு அடியில் கூபகத் தளத்தின் அருகே பூப்பெலும்பொட்டிற்குப் பின்னே நீர்ப்பை அமைந்துள்ளது. ஆண்களில் குதத்திற்குப் பின்னால் குதநீர்ப்பையியப்பையால் பிரிக்கப்பட்டு எருவாய் தூக்கியின் தசைநாண்களாலும் முன்னிற்கும் சுரப்பியின் தசைகளாலும் தாங்கப்படுகிறது. பெண்களில் கருப்பைக்கு முன்னால் குதநீர்ப்பையியப்பையால் பிரிக்கப்பட்டு எருவாய் தூக்கியின் தசைநாண்களாலும் யோனியின் மேற்பகுதியாலும் தாங்கப்படுகின்றது. நீர்ப்பையின் சுவர் பொதுவாக 3–5 மிமீ தடித்துள்ளது.[6] இந்தச் சுவர் விரியும்போது இதன் தடிப்பு 3 மிமீக்குக் குறைவாக இருக்கும்.[6]

சிறுநீர்ப்பையின் உட்புறச் சுவர் ஒழுங்கற்ற நீட்சிகளை, தடித்த சளிச்சவ்வு மடிப்புக்கள், கொண்டுள்ளது. இதனால் தான் சிறுநீர்ப்பையால் விரிய முடிகின்றது.

செயற்பாடு

[தொகு]

சிறுநீரகங்களால் வெளியேற்றப்படும் சிறுநீர் சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு பின்னர் சிறுநீர் கழித்தலின்போது வெளியேற்றப்படுகின்றன. சிறுநீர்ப்பையால் பொதுவாக 300-350 மிலி சிறுநீரைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். சிறுநீர் சேரச்சேர, உட்புற நீட்சிகள், ரூகே எனப்படுபவை, தட்டையாகி நீர்ப்பையின் சுவர் விரிவடைவதால் சுவரின் தடிப்பு குறைகின்றது. இது மேலும் சிறுநீரை சேகரிக்க கூடுதல் கொள்ளளவை உண்டாக்குகின்றது. அதே நேரம் உட்புற அழுத்தம் கூடுவதில்லை.[7] சிறுநீர்க் கழித்தலை மூளைத்தண்டிலுள்ள பொன்சு நரம்பணு சிறுநீர்க்கழிவு மையம் கட்டுப்படுத்துகின்றது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Boron, Walter F.; Boulpaep, Emile L. (2016). Medical Physiology. 3: Elsevier Health Sciences. p. 738. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781455733286. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.{{cite book}}: CS1 maint: location (link)
  2. Walker-Smith, John; Murch, Simon (1999). Cardozo, Linda (ed.). Diseases of the Small Intestine in Childhood (4 ed.). CRC Press. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781901865059. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  3. 3.0 3.1 3.2 Netter, Frank H. (2014). Atlas of Human Anatomy Including Student Consult Interactive Ancillaries and Guides (6th ed.). Philadelphia, Penn.: W B Saunders Co. pp. 346–348. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-14557-0418-7.
  4. "SEER Training:Urinary Bladder". training.seer.cancer.gov (in ஆங்கிலம்).
  5. Viana, R et al. (October 2007). "The development of the bladder trigone, the center of the anti-reflux mechanism.". Development 134 (20): 3763–9. doi:10.1242/dev.011270. பப்மெட்:17881488. 
  6. 6.0 6.1 Page 12 in: Uday Patel (2010). Imaging and Urodynamics of the Lower Urinary Tract. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781848828360.
  7. Marieb, Mallatt (2016). "23". Human Anatomy (5th ed.). Pearson International. p. 700.
  8. Purves, Dale (2011). Neuroscience (5. ed.). Sunderland, Mass.: Sinauer. p. 471. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87893-695-3.

வெளி இணைப்புகள்

[தொகு]

பன்னாட்டுத் தர தொடர் எண் 2327-2120) — சிறுநீர்ப்பை குறித்த உடற்கூற்றியலும் நோய்களும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீர்ப்பை&oldid=3824608" இலிருந்து மீள்விக்கப்பட்டது