சிறுநீர்

சிறுநீர் (Urine) என்பது விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும். இது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது.
உடலின் உயிரணுக்களில் நிகழும் வளர்சிதைமாற்றங்களின்போது கழிவாக உருவாகும் பல பக்கவிளைவுப் பொருட்களும் குருதிச் சுற்றோட்டத்தொகுதியிலிருந்து அகற்றப்படல் அவசியமாகும். உடலுக்குத் தேவையற்ற நச்சுப்பொருட்கள், மேலதிக சில கரையங்கள், மேலதிகமாக உடலிலுள்ள நீர் போன்றன சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.
உடலில் நிகழும் சில மாற்றங்களையும், பல நோய் நிலைகளையும் கண்டறிய சிறுநீர் மாதிரி பயன்படுத்தப்படுகின்றது[1].
நிறம்
[தொகு]
- அடர் மஞ்சள் சிறுநீரானது, நீர்ப்போக்கினைச் சுட்டிக் காட்டுவதாக அமைகிறது.
- மஞ்சள்/இள ஆரஞ்சு நிறமானது இரத்தஓட்டத்திலிருந்து அதிகப்படியான உயிர்ச்சத்து பி நீக்கப்படுவதால் ஏற்படலாம்.
- சில மருந்துகள் ரைவாம்பின் (rifampin) மற்றும் பெனசோபிரைடின் (phenazopyridine) ஆரஞ்ச் நிற சிறுநீரத்திற்கு காரணமாகலாம்.
- குறுதி கலந்த சிறுநீரானது சிறுநீரில் குருதி என்றழைக்கப்படும், இதற்கு பல்வேறு மருத்தவகாரணங்கள் உண்டு.
- பழுப்பு சிறுநீர் அல்லது அடர் ஆரஞ்சு நிற சிறுநீர் மஞ்சள் காமாலை, ராப்டோமையோலிசிஸ், அல்லது கில்பர்ட் நோய்க்கூறுகளின்அ றிகுறியாகவும் இருக்கக்கூடும்.
- கறுப்பு அல்லது அடர் நிற சிறுநீர் கரும்புற்றுநோய் காரணமாக இருக்கலாம்.
- நாவல் நிற சிறுநீர்(பிங்க் நிறம்), பீட்ரூட் உண்டதால் ஏற்படும் விளைவு ஆகும்.
- பச்சை நிற சிறுநீர் சாத்தாவாரியினம் அல்லது பச்சை நிற உணவு அல்லது பானம் அருந்தியதால் ஏற்படும் விளைவு ஆகும்.
- சிவப்பு அல்லது பழுப்பு நிற சிறுநீர், போர்பிரியா காரணமாக இருக்கலாம் (பீட்ரூரியாவால் ஏற்படும் தீங்கற்ற, தற்காலிக இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற சிறுநீருடன் இதனைக் குழப்பி கொள்ள வேண்டாம்).
- நீல நிறத்தாலான சிறுநீர் மெத்திலீன்- நீலம் (எ.கா., மருந்துகள்) அல்லது நீல வண்ணச்சாயங்களாலான உணவுகள் அல்லது பானங்கள் உட்செலுத்தலால் ஏற்படலாம்.
- நீல சிறுநீர் கறையானது நீல டயபர் நோய் காரணமாக ஏற்படலாம்.
- ஊதா சிறுநீரானது ஊதா சிறுநீர் பை நோய் காரணமாக இருக்கலாம்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Urinalaysis". Lab Test Online.
வெளி இணைப்புகள்
[தொகு]- Urinanalysis பரணிடப்பட்டது 2007-01-17 at the வந்தவழி இயந்திரம் at the University of Utah Eccles Health Sciences Library
- Urine Chemistry at drugs.com