உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்ரூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோட்டவகை பீட்ரூட்
மளிகைக் கடையில் தோட்டவகை பீட்ரூட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. vulgaris
துணையினம்:
B. v. vulgaris
பலவகை:
B. v. v. vulgaris
முச்சொற் பெயரீடு
Beta vulgaris subsp. vulgaris var. vulgaris
'சியோகியா' பயிரிடும்வகைச் சிவப்பு நிறப் பீட்ரூட் கிழங்கின் குறுக்கு வெட்டுமுகம்
மஞ்சள் நிறப் பயிரிடும்வகைப் பீட்ரூட்டுக் கிழங்கின் குறுக்கு வெட்டுமுகம்

பீட்ரூட் என்பது பீட் தாவரத்தின் வேரடிக் கிழங்கு ஆகும். [1] இது சிகப்பு அல்லது நாவல்பழ நிறம் உடையது. இதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் குறிப்பர். இது வட அமெரிக்காவில் வழக்கமாக பீட் எனச் சொல்லப்படுகிறது. இதற்கு மேசைவகைப் பீட், தோட்டவகைப் பீட், சக்கரைப் பீட், சிவப்பு பீட், பொன் பீட் என்ற பெயர்களும் உண்டு. இது பீட்ட வல்காரிசு பயிரிடும் வகையின் பலவகைகளில் ஒன்றாகும். இது அதன் கிழங்குக்காகவும் கீரைக்காகவும் பயிரிடப்படுகிறது. இது வகைப்பாட்டியலாக, B. vulgaris subsp. vulgaris 'Conditiva' Group என வகைபடுத்தப்படுகிறது.[2]

இது உணவாக மட்டுமன்றி, நிறமியாகவும் மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகிறது. பீட் விளைபொருட்கள் சர்க்கரைப் பீட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றன.

சொல்லியல்[தொகு]

பீட்டா என இலத்தீனில் பீட்ரூட் பண்டைய காலத்தில் வழங்கப்பட்டது[3] இப்பெயர் கெல்டிக் மொழியில் இருந்து வந்திருக்கலாம். பழைய ஆங்கிலத்தில் இது பீட்டே என கிபி 1400 இல் வழங்கியுள்ளது.[4] ரூட் பழைய ஆங்கிலம் ரோட் (rōt) என்பதில் இருந்து வந்துள்ளது. இதுவும்rót என்ற பழைய நோர்சு மொழிச் சொல்லாகும் [5]

வரலாறு[தொகு]

பீட்ரூட்டுகள் நடுவண் கிழக்குப் பகுதியில் கீரைகளுக்காக வீட்டினமாக்கப்பட்டுள்ளன. இவை பண்டைய எகுபதியிலும் கிரேக்கத்திலும் உரோம அரசு காலத்தில் பயிரிட்டு வளர்க்கப்பட்டுள்ளன. உரோம ஆட்சிக் காலத்தில் கிழங்குகளுக்காகவும் வளர்க்கப்பட்டன. இடைக்காலத்தில் இருந்து பீட்ரூட்டுகள் செரித்தல், குருதிபெருக்கல் போன்ற நிலைமைகளுக்குப் பயன்பட்டுள்ளன. பூண்டு மூச்சுயிர்ப்பைத் தடுக்க பார்த்தலோமியோ பிளாட்டினா பீட்டைப் பூண்டுடன் கலந்துண்ணுமாறு பரிந்துரை செய்துள்லார்.[6]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தேறல் பீட் கிழங்குச் சாற்றால் வண்ணமூட்டப்பட்டுள்ளது.[7]

உணவு[தொகு]

இக் கிழங்குகள் ஐரோப்பியர்களால் பெரிதும் உண்ணப்பட்டு வந்தது. காய்குவையிலும் அல்லது நறுஞ்சுவை பருகிலும் பீட்ரூட் பெரிதும் சேர்க்கப்பட்டது. தற்போது தமிழர்கள் போன்ற இதர மக்களும் இதை உண்ணுகிறார்கள். தமிழர்கள் பீட்ரூட்டை பல்வேறு கறிகளாக ஆக்கி உண்பர். இது சாய மை தயாரிக்கவும், பனிக்குழைவை, இன்கூழ், தக்காளிச் சாற்றிலும் நிறம் கூட்டியாகவும் பயன்படுகிறது.

மஞ்சள் பீட்ரூட்

கிழக்கு ஐரோப்பாவில் பீட் நறுஞ்சுவைநீர் விரும்பிப் பரவளாக அருந்தப்படுகிறது. இந்திய உணவில், வெட்டித் துண்டுகளாக்கி வேகவைத்துப் பொறியலாக பரிமாறப்படுகிறது. மஞ்சள் நிற பீட்ரூட் உணவுக்காகவே சிற்றளவு பயிரிப்படுகிறது.[8]

பீட்ரூட் கற்றை

வழக்கமாக வேகவைத்தோ வறுத்தோ பச்சையாகவோ தனித்தும் காய்குவைகளுடன் கலந்தும் பீட்ரூட் உண்ணப்படுகிறது. பேரளவு வணிகமுறை விளைச்சல் வேகவைத்தும் தொற்று நீக்கியும் ஊறுகாயாகவும் பயன்படுகிறது.

பீட்டின் கீரையும் உண்ணத் தகுந்ததே. இளங்கீரைகள் பச்சையான காய்குவையோடு கலக்கப்படுகின்றன. முதிர்ந்த கீரைகல் வேகவைத்து உண்ணப்படுகின்றன. இந்நிலையில் இவை புதினாவின் சுவையோடு மணக்கின்றன. இதற்கு நீர்வற்றி வாடாத செறிவான சதைப் பற்றுள்ல கீரையைத் தெரிவு செய்யவேண்டும்.

கிழங்கு வெட்டுமுகம்

பீட்ரூட்டில் அதன் ஒரு மரபனில் ஏற்பட்ட மாற்றுரு அதை வீட்டினமாக்கத்துக்குப் பக்குவப்படுத்தியது. எனவே ஆண்டுக்கு இருமுறை அதன் கீரையையும் கிழங்கையும் அறுவடை செய்ய முடிந்தது.[9]

தேறலாக்கத்துக்கும் பீட் பயன்படுகிறது.[10]

யப்பானிய ஊறுகாய்களில் வண்னத்துக்காக பீட் துண்டுகள் ஓரளவு சேர்க்கப்படுகின்றன.

முதலாம் உலகப்போரின் பின் ஏற்பட்ட உணவுத் தட்டுபாட்டின்போது தொழிலாளர்கள் பீட் மட்டும் உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது மங்களூர்சே எனும் நோயை அவர்களிடம் பெருகச் செய்தது.[11]


சத்துகள்[தொகு]

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "beet". def. 1 and 2. also "beet-root". Oxford English Dictionary Second Edition on CD-ROM (v. 4.0) © Oxford University Press 2009
 2. "Sorting Beta names". Multilingual Multiscript Plant Name Database. The University of Melbourne. Archived from the original on 2013-04-15. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
 3. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 70
 4. "Beet". Online Etymology Dictionary, Douglas Harper. 2017. பார்க்கப்பட்ட நாள் 25 April 2017.
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-27. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
 6. Platina De honesta voluptate et valetudine, 3.14
 7. Nilsson et al. (1970). "Studies into the pigments in beetroot (Beta vulgaris L. ssp. vulgaris var. rubra L.)"
 8. Grubben, G.J.H. & Denton, O.A. (2004) Plant Resources of Tropical Africa 2. Vegetables. PROTA Foundation, Wageningen; Backhuys, Leiden; CTA, Wageningen.
 9. Pin, Pierre A.; Zhang, Wenying; Vogt, Sebastian H.; Dally, Nadine; Büttner, Bianca; Schulze-Buxloh, Gretel; Jelly, Noémie S.; Chia, Tansy Y. P. et al. (2012-06-19). "The Role of a Pseudo-Response Regulator Gene in Life Cycle Adaptation and Domestication of Beet" (in English). Current Biology 22 (12): 1095–1101. doi:10.1016/j.cub.2012.04.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0960-9822. பப்மெட்:22608508. 
 10. Making Wild Wines & Meads; Pattie Vargas & Rich Gulling; page 73
 11. MacMillan, Margaret Olwen (2002) [2001]. "We are the League of the People". Paris 1919: Six Months That Changed the World (1st U.S. ed.). New York: Random House. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0375508264. LCCN 2002023707. Relief workers invented names for things they had never seen before, such as the mangelwurzel disease, which afflicted those who lived solely on beets.

[1]

வெளி இணைப்புகள்[தொகு]

 1. [27] Kumar, S., & Brooks, M. S. L. (2018). Use of red beet (Beta vulgaris L.) for antimicrobial applications—a critical review. Food and bioprocess technology, 11(1), 17-42. Chicago
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்ரூட்&oldid=3529448" இலிருந்து மீள்விக்கப்பட்டது