உள்ளடக்கத்துக்குச் செல்

முச்சொற் பெயரீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முச்சொற் பெயரீடு (Trinomial nomenclature) என்பது உயிரியலில், உயிரிகளை மூன்று சொற்களுடன் பெயரிடுவதைக் குறிக்கின்றது. இதில் இடப்படும் மூன்றாவது பெயர் சிற்றின உயிரலகு கீழே பெயரீட்டுத் தரநிலை ஒன்றைக் கொண்டுள்ளது. இந்த பெயர்களில் மூன்று பகுதிகள் உள்ளன. விலங்கியல் மற்றும் தாவரவியலில் இதன் பயன்பாடு வேறுபட்டது.

விலங்கியல்

[தொகு]
"பாலாக்ரோகோராக்சு கார்போ நோவாஹோலாண்டியே" என அழைக்கப்படும் பெரிய நீர்க்காகம் துணையினம்
மிக அருகிய இனமான கொரில்லா இதன் முப்பெயர், கொரில்லா கொரில்லா கொரில்லா.

விலங்குகளுக்கு, அறிவியல் பெயர்கள் பன்னாட்டு விலங்கியல் பெயரிடல் குறியீட்டால் நிர்வகிக்கப்படுகின்றன. சிற்றினங்களின் தரவரிசைக்குக் கீழே ஒரு தரவரிசை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது துணையினம் ஆகும். எடுத்துக்காட்டாக, புட்டியோ ஜமைசென்சிசு பொரியாலிசு என்பது சிவப்பு வால் பருந்து இனமான புட்டியோ ஜமைசென்சிசுன் துணைச் சிற்றினங்களுள் ஒன்றாகும்.

தாவரவியலில்

[தொகு]

  பாசி, பூஞ்சை, தாவரங்கள் மற்றும் அவற்றின் புதைபடிமங்களுக்கு, சிற்றினங்களின் பெயரீட்டுத் தரநிலக்குக் கீழே வரையறுக்கப்படாத எண்ணிக்கையிலான உள்தரநிலைகள் அனுமதிக்கப்படுகின்றன. சிற்றினங்கள் தரவரிசைக்குக் கீழே உள்ள இரண்டாம் நிலைகள் தாவரப் பல்வகைமை மற்றும் வடிவங்களைக் கொண்டுள்ளன. மேலும் துணை இனங்கள், துணைவகைகள், துணை வடிவங்களை உருவாக்க "துணை" முன்னொட்டைப் பயன்படுத்தி அதிக தரவரிசைகளை உருவாக்கலாம். மிக அரிதாக இன்னும் கூடுதலான வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த தரவரிசைகள் அனைத்தையும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, உதாரணமாக, சில ஆசிரியர்கள் தாவர இனங்களைத் துணையினங்களாகப் பிரிக்க விரும்புகிறார்கள், மற்றவர்கள் வகைகளாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.[1]

இந்த வரிசைகள் உயிரியல் வகைப்பாட்டின் கூறுகளாகும். எடுத்துக்காட்டாக கோரிலோப்சிசு சினென்சிசு வர் கேல்வென்சென்சு எப். வெயிட்சியானா என்பது அலங்கார தாவரமாகும்.[2] மேலும் இந்த தாவரத்தின் பெயர் மூன்று பாகங்களைக் கொண்டுள்ள முச்சொல் பெயரீட்டு தரநிலையில் உள்ளது. சிற்றினப் பெயரின் இரண்டு பாகங்கள் கோரிலோப்சிசு சினென்சிசு என்பதாகும். இதனுடன் அடைமொழியாக வெய்ட்சின்னா சேரும்போது கோரிலோப்சிசு சினென்சிசு எப். வெயிட்சியானா என அறியப்படுகிறது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hamilton, C.W.; Reichard, S.H. (1992). "Current practice in the use of subspecies, variety, and forma in the classification of wild plants". Taxon 41 (3): 485–498. doi:10.2307/1222819. 
  2. "Royal Horticultural Society Plant Selector". Archived from the original on 2019-12-14. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முச்சொற்_பெயரீடு&oldid=3713948" இலிருந்து மீள்விக்கப்பட்டது