துணையினக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரியல் வகைப்பாடு

துணையினக்குழு (Subtribe) என்பது உயிரியல் வகைப்பாட்டியலில் இனக்குழுவிற்குக் கீழே தரவரிசைப்படுத்தப்பட்ட வகைப்பாட்டியல் வரிசைகளுள் ஒன்றாகும். வகைப்பாட்டியலில் துணையினக்குழு, இனக்குழுவிற்குக் கீழ் நிலையிலும் பேரினத்திற்கு மேல் தரவரிசையில் வைக்கப்படும்.[1] இந்த தரநிலையின் துணைப் பெயருக்கான நிலையான முடிவு இப்போது -ன்னா(-ina) (விலங்குகளில்) அல்லது -ன்னே (-inae)(தாவரங்களில்) முடியும். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜான் டன் ஹண்டரில் (?1798–1827) துணைக்குழு என்ற வகைப்பாட்டியல் பிரிவினைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. கைப்திடின்னே (Hyptidinae) என்ற துணையினக்குழுவானது 19 பேரினங்களுடன் 400 சிற்றினங்களைக் கொண்ட குழுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-08-22. பார்க்கப்பட்ட நாள் 2022-08-22.
  2. "Subtribe Hyptidinae (Lamiaceae): A promising source of bioactive metabolites". Journal of Ethnopharmacology 264: 113225. January 2021. doi:10.1016/j.jep.2020.113225. பப்மெட்:32763419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணையினக்குழு&oldid=3619662" இலிருந்து மீள்விக்கப்பட்டது