இனக்குழு (உயிரியல்)
இனக்குழு (Tribe) என்பது உயிரியலில் பேரினத்திற்கு மேலே குடும்பம் மற்றும் துணைக்குடும்பத்திற்குக் கீழே உள்ள ஒரு பெயரீட்டுத் தரநிலை ஆகும்.[1][2] இது சில நேரங்களில் துணையினக்குழுக்களாகப் பிரிக்கப்படுகிறது.
விலங்கியலில், விலங்கியல் இனக்குழுவின் பெயர் நிலையான இறுசி ஒட்டான "-யினி"யுடன் முடியும். காப்ரினி (ஆடு-மான்கள்), ஹோமினினி (ஹோமினின்கள்), பாம்பினி (பம்பல்பீஸ்) மற்றும் துன்னினி (டுனாஸ்) போன்ற இனக்குழு இதற்கு எடுத்துக்காட்டுகள். ஹோமினினி இனக்குழு சில வகைப்பாட்டியல் அறிஞர்களால் துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை துணையினக்குழு எனப்படும். ஹோமினினா "மனிதர்களை" உள்ளடக்கியது. விலங்கியல் துணைப்பிரிவின் பெயரின் நிலையான முடிவு ஒட்டுக்காளாக யினா ("-ina") என்ற வார்த்தை வரும். தாவரவியலில், தாவரவியல் இனக்குழுவின் பெயரின் முடிவில் (யியே) "-eae" என முடியும். உதாரணமாக, அகலிபியே மற்றும் ஹைசின்தீயே என்பதாகும். கையாசிந்தேயே (Hyacintheae) என்ற இனக்குழுவானது, மசோனினே (Massoniinae) என்ற துணையினக்குழுவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தாவரவியல் துணையினக்குழுவின் இறுது ஒட்டு யின்னே (-inae) ஆகும். பாக்டீரியாவியலில், இனக்குழுவின் பெயர்களின் வடிவம் தாவரவியலில் உள்ளது போன்றதே, எ.கா., சூடோமோனாடேயியே, சூடோமோனாசு சிற்றினப் பெயரை அடிப்படையாகக் கொண்டது.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ McNeill, J.; Barrie, F.R.; Buck, W.R.; Demoulin, V.; Greuter, W.; Hawksworth, D.L.; Herendeen, P.S.; Knapp, S.; Marhold, K.; Prado, J.; Prud'homme Van Reine, W.F.; Smith, G.F.; Wiersema, J.H.; Turland, N.J. (2012), International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011, vol. Regnum Vegetabile 154, A.R.G. Gantner Verlag KG, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-87429-425-6, archived from the original on 2013-11-04, பார்க்கப்பட்ட நாள் 2017-11-26 Article 4
- ↑ International Commission on Zoological Nomenclature (1999). International Code of Zoological Nomenclature (Fourth ed.). International Trust for Zoological Nomenclature, XXIX. p. 306.
- ↑ "Chapter 3: Rules of Nomenclature with Recommendations", International Code of Nomenclature of Bacteria: Bacteriological Code, 1990 Revision, ASM Press, 1992