பேரினம் (உயிரியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேரினம்[1] (இலங்கை வழக்கு - சாதி) என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டுத் தரநிலை (taxonomic rank) ஆகும். பல தனி உயிர் இனங்கள் அடங்கியது ஒரு பேரினம். எடுத்துக்காட்டாக நாய்ப் பேரினத்தில், உள்ள சில இனங்கள் நாய்கள், ஓநாய்கள், நரிகள் ஆகும். பூனைப் பேரினத்தில் அடங்கி உள்ள இனங்கள் பூனைகள், புலிகள், அரிமா இனங்கள் ஆகும்.. இந்தப் பேரினம் என்னும் அலகு, சில சமயங்களில் துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள அடுத்த வகைப்பெயர் (பெயரீட்டுத் தரநிலை) இனம் ஆகும். பேரினம் என்பதை புற உடலமைப்பு முதலான முறைகளிலும், மரபணு வகை உறவாட்டங்களின் ( (டி. என். ஏ புணர்வுகள்) ) அடிப்படையிலும் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனத்தின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.

பேரினம் என்பது இலங்கை வழக்கு சாதி என்பதாகும். இருசொற் பெயரீட்டு முறைப்படி உயிரினங்கள் பெயரிடப்படும்போது, முதலில் வரும் சொல் உயிரினத்தின் பேரினத்தைக் குறிக்கும் சொல்லாகும். இரண்டாவது சொல் உயிரினத்தின் இனத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [www.textbooksonline.tn.nic.in உயிரியல் விலங்கியல் - மேல்நிலை முதலாம் ஆண்டு தொகுதி 1] (முதல் ). தமிழ்நாடு அரசு. 2018. பக். 10. www.textbooksonline.tn.nic.in. பார்த்த நாள்: 27 April 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரினம்_(உயிரியல்)&oldid=3154598" இருந்து மீள்விக்கப்பட்டது