உள்ளடக்கத்துக்குச் செல்

துணைவகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துணைவகுப்பு (Subclass) என்பது உயிரியல் வகைப்பாட்டியலில் ஓர் தரவரிசை ஆகும். இது வகுப்பிற்கு கீழ்நிலையிலும் வரிசைக்கு முன்நிலையிலும் உள்ளது.

அறிவியல் வகைப்பாடு

விளக்கம்

[தொகு]

துணைவகுப்பு என்பது வகைப்பாட்டியலில் ஓர் தரவரிசை ஆகும். இது வகுப்பிற்கு கீழும் வரிசைக்கு மேலேயும் இருக்கும் பிரிவாகும். உதாரணமாக, வகுப்பு பாலூட்டியினை மேலும் துணைப்பிரிவுகளாக பிரிக்கலாம். வகுப்பு பாலூட்டி என்பது முதுகெலும்புகளைக் கொண்டது. இவை வெப்பரத்த அம்னியோட்களாகும். இவை மேலும் புரோட்டோதெரியா மற்றும் தெரிஃபார்ம்ஸ் என துணைவகுப்பாக வகைப்படுத்தப்படுகின்றன.[1] புரோட்டோதெரியா என்பது முட்டையிடும் பாலூட்டிகளாகும். இதில் முள்ளெலி போன்ற குழிபறிக்கும் பல்லில்லாத உயிரிகளும் (எக்கினிட்னாக்கள்) மற்றும் வாத்தலகி போன்ற முட்டையிட்டு பால்கொடுக்கும் விலங்குகளும் (பிளாட்டிபசுகள்) அடங்கிய துணைவகுப்பாகும். துணைப்பிரிவு தெரிஃபார்ம்களில் யூத்தேரியன்கள் (நஞ்சுக்கொடி பாலூட்டிகள்) மற்றும் மெட்டாதேரியன் எனப்படும் பைப்பாலூட்டிகள் (மார்சுபியல்கள்) அடங்கும்.

  • முட்தோலிகளில் கிரினோய்டியா வகுப்பின் துணைவகுப்பு ஆர்ட்டுலாட்டா (உம். டிலோமெட்ரா ஆசுட்ரேலிசு பேசன் பூ இறகு நட்சத்திரம்)
துணைவகுப்பு ஆர்ட்டுலாட்டா-டிலோமெட்ரா ஆசுட்ரேலிசு பேசன் பூ இறகு நட்சத்திரம்)
  • குறுத்தெலும்பு மீன்களில், எலாசுமோபிராங்கி என்பது துணைவகுப்பு ஆகும். இதில் சுறா, திருக்கை மீன்கள் அடங்கும்[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Subclass". Biology Articles, Tutorials & Dictionary Online (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-07. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
  2. "chondrichthyan - Annotated classification". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணைவகுப்பு&oldid=3216842" இலிருந்து மீள்விக்கப்பட்டது